கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விவகாரம், சாய்ந்தமருது நகரசபை விடயம், மாகாணசபை முறைமை தொடர்பில் பாராளுமன்றில் தே.கா தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா உரை !

மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாய்ந்தமருது பிரதேசசபையை வழங்க  வேண்டும் என எத்தனங்கள் பலமுறை நடந்தது. அந்த அமைச்சின் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் இருக்கத்தக்கதாக பிரதமரின் தலைமையில் கிழக்கின் முக்கியஸ்தர்கள் அடங்களாக எல்லோருடைய பங்குபற்றலுடனும் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கபப்ட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியான வர்த்தமானியும் சில இனவாதிகளின் பிரச்சாரங்களினால் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டாலும் அது வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான நியாயங்களை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முக்கியஸ்தர்கள் பலருக்கும் 15.07.2021 இல் நாங்கள் கடிதமாக எழுதியிருந்தோம். அதில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையும் இணைத்துள்ளோம். அந்த மக்களின் கோரிக்கைக்கு அமைய அந்த மக்களின் தாக்கத்தை விரைவில் தீர்த்துவைப்பார்கள் என்று கூறி அந்த கடிதங்களை பாராளுமன்ற உரை தொகுப்பில் இடம்பெற கையளிக்கிறேன் என மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற முன்னாள்  அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர். தொடர்ந்தும் உரையாற்றும் போது நேற்றைய தினம் கிண்ணியாவில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தை எண்ணி நாங்கள் எல்லோரும் வேதனையடைகிறோம். திருகோணமலையில் உள்ள சகல பாலங்களும் அன்றைய ஜனாதிபதியும், இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அவர்களும், நானும் முதலாவது கல்லை நாட்டியதிலிருந்து ஆரம்பமானது. திருகோணமலையில் உள்ள சகல பாலங்களையும் அந்த அரசில் தன்னால் முடியுமான வரை நிர்மாணித்து  போக்குவரத்தை இலகுபடுத்தினார். குறிஞ்சாக்கேணி பாலத்தை முறையாகவும், அழகாகவும் நிர்மாணிக்க வேண்டிய தேவையிருந்தது. அது முறையாக இடம்பெறவில்லை அதனை சுட்டி நாங்கள் யாரையும் குற்றம் கூற இங்கு முன்வரவில்லை. கிழக்கு மாகாணசபையின் நிர்வாகத்தின் கீழுள்ள கிண்ணியா நகரசபை இந்த இழுவைப்படகு சேவையை முறையாக நடத்தமுடியாமல் போனதையிட்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நான் கவலையடைகிறேன். இப்படியான இழப்புக்கள் நமக்கு தேவையில்லை.

இது ஒருபுறமிருக்க ஒரே நாடு ஒரே சட்டம் பற்றி பேசும் நாங்கள் 09 மாகாணங்களிலும் 09 மாகாண அரசுகளும் மத்தியில் ஒரு அரசாங்கமுமாக மொத்தம் 10 அரசுகள் உள்ளது. மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட்டு அவற்றை ஒரு அரசாங்கமாக மாற்ற வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்து தமிழர்களின் பிரச்சினைகள், முஸ்லிங்களின் பிரச்சினைகள், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.