ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் கையளிப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் சமுர்த்தி சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட இறக்காமம் 02 ஆம் கிராம சேவகர் பிரிவு சபாநகர், வாங்காமம் ஆகிய கிராமங்களில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு  பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி)  தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வீடற்ற குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதனூடாக எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பு, பிரதேச தனவந்தர்களின் நிதி மற்றும் பொருள் பங்களிப்புடன் இவ்வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, பெண் தலைமைதாங்கும், சமுர்த்தி பெறும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ தஸ்லீம், சமுர்த்திதிட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் மற்றும் பொறியியலாளர் வை.பி.சமட், அக்கரைப்பற்று அந்நூர் நிறுவனத்தினுடைய நிருவாக உறுப்பினர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். செல்வகுமார்,  சமுர்த்திதிட்ட உதவியாளர் ஐ.எல்.எம். மக்பூல், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல். ஜெமீல் பிரிவுக்குப் பொறுப்பான சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரிவுகளுக்கு பொறுப்பான  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி  அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.