வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு – மக்கள் அவதி

(க.கிஷாந்தன்)

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாததால் வைத்தியசாலைக்கும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் மருத்துவ சிகிச்சையை நாடினர்.

வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்