அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் மூவர் பலி…

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் மூவர் பலியாகினர்.

அத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுமுறை தொடர்பான பிரச்சினை காரணமாக, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர், திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த தப்பிச் சென்ற துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர், எத்திமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து, இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளும், 19 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்