பிறக்கும் புதுவருடமாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவினைத் தருமா…? (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் – என்.நகுலேஸ்)

பிறக்கும் புதுவருடமாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவினைத் தருமா? என்ற கேள்வியுடனேயே பிறக்கின்றது. இந்த நிலைமை மாறும் நாளே எமது மக்களுக்கு உண்மையான புத்தாண்டாக இருக்கம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிறக்கும் புதுவருடமாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவினைத் தருமா? என்ற கேள்வியுடனேயே பிறக்கின்றது. ஆனாலும், தற்போதை அரசாங்ககம் ஆளும் வரையில் மக்களின் இன்னல்களுக்கு விமோசனமே கிடைக்காது என்பதே நிதர்சனம்.

எத்தனையோ எதிர்பார்ப்புடன் பெரும்பான்மை மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த அரசாங்கமானது தற்போது அந்த மக்களே இன்னல்களை அனுபவிக்கும் வகையில் கெடூரமான குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றது. அவர்களுக்கு ஒத்து ஊதும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மக்களைப் பற்றிச் சிந்திக்காது தங்களின் சுகபோகங்களை மாத்திரம் கருத்தில் எடுத்துச் செயற்படுகின்றார்கள்.

இன்று மக்கள் இந்த நாட்டை விட்டுச் சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளார்கள். அந்தளவிற்கு அரசாங்கத்தின் தோற்றுப் போன கொள்கைத் திட்டங்களும் அதன் மூலம் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளும் தாண்டவமாடுகின்றன.

இந்த நிலையில் இன்னும் இன்னும் அபிவிருத்தி மாயவலையில் மக்களை மையப்படுத்தி வைப்பதற்கு பலவாறு எத்தணித்து வருகின்றார்கள். மக்களின் வீடுகளில் அடுப்பு எரிகிறதோ இல்லையோ எரிவாயு மாத்திரம் நன்றாக வெடிக்கின்றது. மக்களின் அத்தியாவசியங்கள் அனைத்தையும் இல்லாமலாக்கி அவர்களின் கஜானாக்களை நிரப்பி வருகின்றார்கள்.

இந்த நிலையிலே வருகின்ற புத்தாண்டு பிறக்கின்றது. இந்;தப் புத்தாண்டுக்கு என்ன சொல்லி மக்களுக்கு வாழ்த்துச் சொல்வது. எத்தனை எத்தனையோ துனபங்களை அனுபவித்த எமது மக்கள் இன்று இந்த அரசினால் வாழ்வாதாரத்திற்காக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுடன் போராட வேண்டி இருக்கின்றது.

இந்த நிலைமை மாறும் நாளே உண்மையில் எமது மக்களுக்கு புத்தாண்டாக இருக்கும். அந்த நாள் வெகுவிரைவில் இல்லை பிறக்கும் புத்தாண்டிற்கு அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.