2022 சர்வதேச “பங்கபந்து” கபடி போட்டியில் பங்கேற்க நிந்தவூரை சேர்ந்த இருவர் பங்களாதேஷ் பயணம்.!

2022 சர்வதேச “பங்கபந்து” போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். “பங்கபந்து” கபடி போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணிக்கான தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் மதீனா விளையாட்டு  கழகத்தின் சிரேஷ்ட வீரர்களான அஸ்லம் சஜா மற்றும் முஹம்மட் ஷபிஹான்  ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு தெரிவு செய்ய பட்டுள்ளனர். இப்போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் எதிர்வரும் 16ம் திகதி  முதல் 22 ம் திகதி வரை இடம்பெற உள்ளன. இப்போட்டியில்  பங்களாதேஷ், இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.