கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது.

கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது.
இச் சம்பவமானது கல்முனை வைத்திய சாலை வீதியில் இடம்பெற்றது.
மாட்டுப்பளை நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 4ம் மாதம் 6ம் திகதி நடைபெற விருக்கும் கும்பாபிஷேகத்திற்கு நிதி அறவிடு செய்யப்பட்டு வைக்கப்பட்ட பணம் திருடர் ஒருவரினால் திருடப்பட்டு இருந்தது அன்றே தினம் பணப்பையினை தொலைத்த நபர் கல்முனை பொலீஸ் நிலையத்தில் தனது வீட்டில் பொருத்தப்பட்ட கமராவில் பதியப்பட்ட மோட்டார் வாக இலக்கத்துடம் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
வாகன இலக்கத்தினைக் கொண்டு கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் பொலிஸ் குழுவினரால் மோட்டார் வண்டி பிடிக்கப்பட்டு திருடரும் கைது செய்யப்பட்டார். உண்மையிலே சம்பவம் நடைபெற்று 24மணித்தியாலயத்திற்குள் பணப்பையினை மிட்டேடுத்த கல்முனை பொலிஸ் அதிகாரி அவர்களுக்கு கல்முனை வாழ் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.