அரசாங்கத்திற்கு எதிராக இன்று மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்… பிள்ளையானின் அலுவலகமும் முற்றுகை…

(சுமன்)

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பிலும் இன்று மாலை பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வர்ப்பாட்டத்தில் மட்டக்கப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, இலங்கைத் தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், மாநகரசபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்;தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி போன்ற வாசகங்களை ஏந்தியாவறும், கோசங்களையிட்டவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்;ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் காந்திப் பூங்கா முன்றலிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்லடிப்பாலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு நகர் வழியாக வாவிக்கரை வீதி 01ல்; அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அலுவலகத்தினை முற்றுகையிட்டு சாத்வீகமான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெற்கில் அரசாங்கத்தோடு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு மக்களுக்காக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசாங்கம் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இன்னும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது எதற்கு என்றவாறான கோசங்களை எழுப்பிவாறு அவர்களைப் பதவி விலகச் சொல்லி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்