மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிறப்பாக முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்; கஜேந்திரன் எம்பி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அரச பயங்கரவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்புப் போராட்டத்தில் லட்சக்கணக்காண மக்கள் இனப் படுகொலை செய்யப் பட்டதோடு யுத்தம் மௌனவித்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் வரை 5 லட்சம் மக்கள் வரை சென்றிருந்தார்கள். இவ்வாறான நிலையில் தான் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகின்றது என்ன நோக்கத்துக்காக மக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒன்றிணைந்து நினைவுகூரக்கூடிய ஒரு நாளாக காணப்படுகின்றது எனவே உயிரிழந்த எமது மக்களை உறவுகளை கூட்டாக நினைவுகூர வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது அந்த உறவுகள் கடைசி வரை எந்த இலட்சியத்துக்காக உறுதியாக இருந்தார்களோ அந்த இலட்சியத்திற்காக செயற்பட வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு காணப்படுகின்றது எனவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் அந்த நீதியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக பெறப்பட வேண்டும் அத்தோடு இறுதி யுத்தத்தில் உயிர் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் ஒற்றையாட்சியை 13வது திருத்தச்சட்டத்தை நிராகரித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவே எமது எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வாருங்கள் எனவும் தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர். செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.