பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்…

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும்-குறித்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப சாவகச்சேரி பிரதேசசபை தீர்மானித்துள்ளது.
அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் சமர்ப்பித்த பிரேரணைக்கு ஆதரவளித்து சபையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் தனது பிரேரணையில்;
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆதாரபூர்வமற்ற பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பல அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைதானவர்களை பிணையிலோ அல்லது முழுமையாகவோ விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை சபையில் ஏகமனதாக நிறைவேற்றி தீர்மானப் பிரதியை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.எனக் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானப் பிரதியை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்