மின்வெட்டு நேரத்தில் பாம்பு கடிக்கு இலக்கான சிறுமி!!!!!!!!!!!!!!

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9வயதுச் சிறுமி ஒருவர் 09/04 சனிக்கிழமை இரவு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
மின் வெட்டு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சென்ற போது புடையன் பாம்பு தீண்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாம்புக் கடிக்கு இலக்கான சிறுமி உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்