கல்முனை கிரீன் பீல்ட்  முகைதீன் பள்ளிவாசல் மீள் கட்டமைப்புக்கான இரண்டாம் கட்ட வேலைக்குரிய காசோலை வழங்கலும் இப்தார் நிகழ்வும்.!!!

நூருல் ஹுதா உமர்

சுனாமி வீட்டுத்திட்டமான கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசல் மீள் கட்டமைப்புக்கான இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு அல் ஹாஜ் துவான் நஜீம் காசிம் அவர்களின் நிதியத்திலிருந்து காசோலை வழங்கும் நிகழ்வும் விஷேட இப்தார் நிகழ்வும் திங்கட்கிழமை மாலை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்நிழ்வில் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அஷ்செய்யித் அல்ஹாஐ் மஷ்ஹூர் தங்கள், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், தேசிய காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் ஆசிரியர் ரிஷாட் ஷரீப், தொழிலதிபர் ஏ.எல்.எம்.கபூல் ஆசாத் ஹாஜி, தாருஸபா பிரதானி மௌலவி ஏ.ஆர். ஸபா முஹம்மட் நஜாஹி, பல்நோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ஹனீபா, கல்முனையன்ஸ் போரம் செயற்பாட்டாளர்கள், முஹைதீன் பள்ளி நிர்வாகத்தினர்களான தலைவர் ஏ.எல். நபீர், செயலாளர் எம்.எச்.அப்துல் கரீம், பொருலாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட ஏனைய பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கிரீன்பீல்ட் முஹைதீன் பள்ளி மஹல்லாவாசிகள் ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்த Y.W.M.A. அமைப்புக்கும் அதன் தலைவி பவாஸா தாஹா அவர்கள் உட்பட அதன் நிர்வாகத்தினர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதோடு இந்த பள்ளிவாசல் கட்டட வேலைகள் வெகு விரைவில் நிறைவடைய ஊர்மக்கள் பிரமுகர்கள் அனைவரும் தம்மால் முடியுமான பங்களிப்புக்களைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.