ரணில் விக்கிரமசிங்கே எப்போதும் ராஜபக்ச குடும்பத்தின் மீட்பராக இருந்து வருகிறார்- அனுரா குமார!!

ரணில் விக்கிரமசிங்கே எப்போதும் ராஜபக்ச குடும்பத்தின் மீட்பராக இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. தலைவர் அனுரா குமார திசாநாயக்க, ரணிலும் கோத்தபாயவும் இணைந்து முன்வைக்கும் தீர்வை நம் நாட்டில் யாரும் நம்ப மாட்டார்கள் என்றார்.
ரணில் கோட்டாபயவை நம்புகிறார். கோத்தபாய ரணிலை நம்புகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சதிகளை இந்த நாட்டின் எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் எனவும் அனுரா குமார குறிப்பிட்டார்.
ரணில் – ஜனாதிபதி கோட்டாபய இடையே நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இன்று மாலை ரணில் பிரதமராக பதவியேற்பார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அனுரா குமார இவ்வாறு கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்