செய்திகள்

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது

கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 53 ...

மேலும்..

வசதி குறைந்த மாணவருக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடு, அரசகருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும்இந்து சமயஅலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும்,கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி கட்சிக் குழுத்தலைவருமான சின்னத்தம்பி பாஸ்கரா கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலத்தில் வருமானம் குறைந்த பெற்றோரின்பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள்,புத்தங்கள்,பாதணிகளுக்கான வவுச்சர்கள் ,சீருடைகள் வழங்கும் நிகழ்வு  இன்று (16.01.2019)புதன் கிழமை இடம் பெற்றது. இதன்போது           ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்புனர் G.விஷ்ணுகாந் கலந்து கொண்டதோடு ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு தெற்கு அமைப்பாளர் சந்திரகுமாரும் கலந்து னொண்டார்.

மேலும்..

கிளிநொச்சி வெள்ளநிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக்கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே ...

மேலும்..

கேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அவரது சகோதரர் கருத்து!

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாட்டினால், நாட்டின் பொருளாதாரம் பாரிய அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் 30 வருடங்களாக ...

மேலும்..

இன முறுகல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பில் இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் இந்த விடயம் தொடர்பில்  இன்று (புதன்கிழமை)  தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

புதிய மைல்கல்லை எட்டியது கொழும்பு துறைமுக நகர்!

இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு துறைமுக நகரின் இந்த புதிய மைல்கல்லை கொண்டாடும் நிகழ்வு பெருநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கொழும்பு துறைமுக ...

மேலும்..

எரிபொருள் விலையை குறைப்பதனால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது

எவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்

2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ...

மேலும்..

சபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்ல முற்றபட்ட இரண்டு பெண்களை இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். குறித்த இரு பெண்களும் பேஸ்கேம்ப் பகுதியை ...

மேலும்..

வடக்கில் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா – அமைச்சரவை அனுமதி!

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார். மூன்று ...

மேலும்..

கென்ய தாக்குதல்: உயிரிழப்பு பதினைந்தாக உயர்வு

கென்ய தலைநகர் நைரோபியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 11 பேர் கென்யர்களும், ஒரு அமெரிக்கரும், பிரித்தானியரும் ...

மேலும்..

கள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்!

தென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார். சம்­ப­வத்­தில் மேலும் 3 பொலிசார் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர். கெற்­பே­லி­யில் மண் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று ...

மேலும்..

ஒட்டாவாவில் காலநிலையில் மாற்றம்!

ஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு ...

மேலும்..

சட்ட நடைமுறைகளை கனடா மீறியுள்ளது: சீனா

ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ விடயத்தில், கனடா சட்ட நடைமுறைகளை மீறியுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, மெங் ...

மேலும்..