செய்திகள்

கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

  கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் பாவனைக்கு உதவாத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று(05-03-2019) விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு ...

மேலும்..

கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள் அட்டகாசம்- லத்தியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டபொலீத்தீன்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு  வான் பயிர்கள் உட்பட  பயிர்களுக்கு சேதம்  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று(04-03-2019) இரவு குறித்த பகுதிக்கு நுளைந்த முன்று யானைகள் இவ்வாறு பயன்தரும் மரங்களை சேதமாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ...

மேலும்..

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு

  கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின்  கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் ...

மேலும்..

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,  யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து காத்திரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென நம்பப்படுகிறது. மரியன் ஹகென் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். குறித்த விஜயத்தின்போது ...

மேலும்..

பிரதமர் ட்ரூடோவிற்கு நெருக்கடி: மற்றுமொரு அமைச்சர் பதவி விலகினார்

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் விலகியுள்ளார். ட்ரூடோ அரசாங்கம் ...

மேலும்..

ஜெனீவாவில் இலங்கை குறித்து ஆலோசனை கூட்டம்

இலங்கை குறித்து ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. ஜெனீவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்தே இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் இதற்கு ...

மேலும்..

திருக்கேதீஸ்வர சம்பவம் -செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளியிட்ட கருத்து

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை இந்து மக்களும், கிறிஸ்தவ மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.இடையிலே இணைந்து பூதாகாரமாக செயல்படுகின்ற தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியும் பலன் கிடைக்கவில்லை

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இது தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார் முறக்கொட்டான்சேனை ...

மேலும்..

வலி.வடக்கில் 20 ஏக்கர் காணியே படையினரால் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் பிடியில் இருந்த 20 ஏக்கர் காணி இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. காணி கையளிப்பதற்கான நிகழ்வு இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி ...

மேலும்..

வறுமை மக்களை இலக்காக கொண்டே வரவு- செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது: மங்கள

வறுமையிலுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டே இம்முறை வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் இம்முறை தாக்கல் செய்யப்படவுள்ள ...

மேலும்..

40 கிலோமீட்டர்கள் உலங்குவானூர்தில் துரத்திச் சென்று இளைஞர் கைது!

ஒஷாவாவில் இருந்து ஸ்காபரோ வரையில் சுமார் 40 கிலோமீட்டர்கள், உலங்குவானூர்தியின் துணையுடனும் துரத்திச் சென்று பிக்கறிங்கைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளன்னர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது. ஒஷாவாவில் ஹார்மொனி வீதி ...

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் குறிக்கோள் – செல்வம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான இலக்காகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ்  ...

மேலும்..

ஐ.நா. தீர்மானம் எப்படி அமையவேண்டும் ஆராய இருக்கின்றோம்! –  மாவை

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் முன்வைத்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு வெளியேறாத வகையில், அதன் வாக்குறுதிகளை குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றக் கூடியதாக, தீர்மானம் எப்படி ...

மேலும்..

சண்டிலிப்பாயில் மக்கள் சந்திப்பும், சமகால அரசியல் கலந்துரையாடலும் – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்

மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு மாகியப்பிட்டி பகுதியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதேச மக்களின் வேண்டுகோளையடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் காஞ்சுர மோட்டை மக்கள்!

வவுனியா - வடக்கு காஞ்சுர மோட்டை பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமக்கு வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு கஞ்சுரமோட்டை கிராமத்திலிருந்து 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக ...

மேலும்..