செய்திகள்

இராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இரண்டாம் ...

மேலும்..

சுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட ...

மேலும்..

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த இரு மத பெயர்பலகைகளும் அகற்றல்!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை  நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் சடடவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வாழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன்  ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு  உண்மைகளை மூடிமுறைப்பதற்கு  மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 

"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக  சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதேவேளை, உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் ...

மேலும்..

முல்லைத்தீவில் ஆமையன்குளத்துக்கு சிங்களப் பெயர் சூட்டிய மைத்திரி!

தமிழ் மக்களின் பூர்வீக கிராமதில் அமைந்துள்ள ஆமையன் குளம் என்ற குளத்திற்கு ‘கிரிஇப்பன்வெவ’ என சிங்கள பெயர் சூட்டி, திறந்து வைத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் இந்தக் ...

மேலும்..

வாக்குறுதியை இலங்கை மீறுவது சர்வதேச அமைப்புகளின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்கும்! – சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்றுமுன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்த​னை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித ...

மேலும்..

திடீரென உடைந்து விழுந்தது பேருந்தின் மிதிபலகை -பறிபோயின இரண்டு உயிர்கள்!

இலங்கை போக்குவரத்துச்சபையின் மிதிபலகை திடீரென உடைந்து விழுந்ததில் நடத்துநரும் பயணி ஒருவரும் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து கடுகண்ணாவை பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றள்ளது. முன்பக்க ...

மேலும்..

சதொச விவகாரம் – ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள ஐந்து வழக்குக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி சமர்ப்பித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

மேலும்..

யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்தார் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது ...

மேலும்..

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக அந்த ...

மேலும்..

வவுனியா தவசிகுளத்தில் போடப்பட்டுள்ள தரமற்ற வீதி : போராட்டத்தில் இளைஞர்கள்

> > வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதட்டமாக நிலை காணப்பட்டது. > > வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதியோதுக்கிட்டில் தவசிகுளம் பிள்ளையார் ...

மேலும்..

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ...

மேலும்..

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு 

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று (3) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு ...

மேலும்..

இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பை இலங்கை அரசும் ஏற்கவேண்டும்!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்த பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்க வேண்டும். மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஶ்ரீ முத்துவிங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் ...

மேலும்..

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..