செய்திகள்

சைபர் தாக்குதல்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையிலுள்ள சில இணையத்தளங்கள்மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இணையத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான இணையத்தளங்களான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட நாட்டின் பல இணையதளங்கள் மீது இந்த சைபர் ...

மேலும்..

சிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த ...

மேலும்..

கஞ்சி உண்டு தமிழினம் பட்ட துயரங்கள் அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்முனைத்தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமாகிய மு.இராஜேஸ்வரன் தலைமையில் கஞ்சி உண்டு தமிழினப்படுகொலையை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய இராஜேஸ்வரன் அவர்கள்.. மே ...

மேலும்..

வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை-வர்த்தக சங்கம் அதிரடி!

வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல் ...

மேலும்..

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வுநேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: தமிழரசுக் கட்சி தீர்மானம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ...

மேலும்..

தமிழர்களுக்கு நியாயமான தீர்வை எதிர்பார்த்து மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவுகூரல் – ரவிகரன்

தமிழ் மக்களுக்குத் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்கால் மண்ணிலே மக்கள் மயகப்படுத்தப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பயந்த சூழலிலும் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது உறவுகளுக்காக மக்கள் ...

மேலும்..

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை)  மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் பொது சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது. இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்ட நினைவை ...

மேலும்..

வலிசுமந்த 10 ஆண்டுகள்!

அன்று..... 2009....... தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி - சேய் தூங்கிய காட்சியினாலே சோகக் கண்ணீராலும் செங்குருதியாலும் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் 10 ஆண்டுகளின் பின்னர் - அன்று தாய்மார்பை 8 மாத சிசுவாய் சுவைத்த சேய் - இன்று கண்ணீரோடு அதே முள்ளிவாய்க்காலில் முதல்சுடரேற்றி அஞ்சலித்தது.

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இராணுவத்தினரால் புதிதாக இரண்டு சோதனை சாவடிகள் அமைப்பு

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவு நாளில் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிறன. அந்த வகையிலே நினைவேந்தல் நிகழ்வுக்கான ...

மேலும்..

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) விடுதலை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் ...

மேலும்..

பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேஸ்புக் ...

மேலும்..

வயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

எட்மன்டனில் வயோதிப தம்பதியினரை கொலை செய்த ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 31 வயதான எட்வர்ட் கைல் ரோபர்ட்ஸ் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வட மத்திய எட்மன்டனில் உள்ள வீடொனறில் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த தம்பதியினர் ...

மேலும்..

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை முன்வந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் ரயில்வே கட்டணத்தில் சலுகை வழங்கவும், ஹோட்டல் கட்டணத்தில் சலுகை வழங்கவும் வடமாகாண சுற்றுலா ...

மேலும்..

உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வவுனியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. சூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர்,  சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ...

மேலும்..