செய்தித் துளிகள்

நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும்

நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, சபரகமுவ மாகாணங்கள் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பொழிய கூடும் என அத் ...

மேலும்..

தொடரூந்து சேவையில் காலதாமதம்

ராகம மற்றும் கனேமுல்லவுக்கும் இடையே தொடரூந்து ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் பிரதான பாதையின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்..

பல லட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக டுபாய் நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இரண்டு பேர் விமான நிலைய சுங்க பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த வல்லப்பட்டையை தமது பயண பைகளில் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று ...

மேலும்..

உடன் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலுக்குவரும் வகையில் கண்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை ...

மேலும்..

கொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் மொஹமட் நிஹார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான சிராஸ் ...

மேலும்..

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் கலப்பு முறையில்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளன.இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது.எனவே ...

மேலும்..

வாதரவத்தையில் சமூக சேவைகள் அமையம் திறந்து வைப்பு

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து  சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று  அங்குரார்ப்பணம்  செய்து வைத்தனர் ,ஆசிரியர் பத்மதாசன் தலைமையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இவ் நிகழ்வு  அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது .  இவ் நிகழ்வில்  வாதரவத்தையின் ...

மேலும்..

முல்லைத்தீவில் ஏற்றப்பட்ட புதிய கொடி

முல்லைத்தீவு - வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் நந்திக்கடல் களப்பில் 22 அடி உயரமான சிவப்பு கொடியொன்று நேற்று ஏற்றப்பட்டுள்ளதாக வெள்ளமுள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர். நந்திக்கடல் களப்பு ஊடான வட்டுவாகால் பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த கொடியை சிலர் ஏற்றிவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்று

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்றாகும். 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோயல் இலங்கை விமானப் படை என பெயரிப்பட்ட இலங்கை விமானப் படையிடம் ஆரம்பத்தில் எந்தவொரு விமானமும் இருக்கவில்லை. முதன்முறையாக சிப்மர்மிக் ரக 4 விமானங்களுடன் தமது ...

மேலும்..

கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் விசேட சிரமதானம்

கோட்டை புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினால் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் விசேட சிரமதானம் ஒன்று மருதானை ரயில்வே தலைமையத்தில் நேற்று ( 25.02.2018 ) எற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று இருந்தது. இதில் 125 ற்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டு தமது ...

மேலும்..

காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு –நாளை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23 நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி ...

மேலும்..

வடமராட்சி கால்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை மகா வித்தியாலய அணி வெற்றி

வடமராட்சி கல்விவலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை மகா வித்தியாலய அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த அரையிறுதி ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து உடுத்துறை மகா வித்தியாலய அணி ...

மேலும்..

இன்று (21) உலக தாய் மொழி தினம்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்த்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ...

மேலும்..

வவுனியா வைததியசாலைகளை பார்வையிட்ட வடக்கு சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிவதற்காக நேற்று திடீர் விஜயமொன்னை வட மாகாண சுகாதார அமைச்சர் மேற்கொண்டார். வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் அழைப்பின் போரில் திடீர் விஜயத்தினை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, ...

மேலும்..

பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம்

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இவ் நிகழ்வானது (24.02.2018) சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் "13 rue Étienne dolet 93140 bondy France" இல் ...

மேலும்..