செய்தித் துளிகள்

கிழக்கில் இலங்கை வங்கியின் விளையாட்டு விழா

இலங்கை வங்கி கிழக்கு மாகாண பிராந்திய பொது முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவிழன ஞாயிற்றுக்கிழமை 2016.07.17 நடத்துகின்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இலங்கை வங்கி கிளைகளின் ஊழியர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. ...

மேலும்..

அட்டனில் ஊடக பாசறை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரிவிர செய்தித்தால் ஆகியவற்றின் ஊடக அணுசரனையுடனும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களின் ஊடக மற்றும் தொலைத்தொடர்புத்துறை சார் அறிவினை பாடசாலை மட்டத்திலிருந்து விருத்தி செய்யும் நோக்கில் ஊடக பாசறை வேலைத்திட்டம் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது. நாடபூராக தமிழ் மற்றும் சிங்கள ...

மேலும்..

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகிய யானையின் பரிதாப நிலை!

கல்கமுவ கரபேவ பிரதேசத்தில் குளம் ஒன்றின் அருகாமையில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காட்டு யானை ஒன்று காயமடைந்துள்ளது. காயமடைந்துள்ள யானைக்கு கிராம மக்களினால் பழவகைகள் மற்றும் நீர் உணவாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, யானைக்கு கல்கமுவ வனவிலங்கு அதிகாரிகளினால் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

அரிசியின் விலையில் வீழ்ச்சி

முன்னரை விட தற்போது அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் உணவு விற்பனை கொள்கை மற்றும் விவசாய பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த தினங்களில் அதிகரித்து ...

மேலும்..

பிழைப்பிற்காக கிழங்கு வியாபாரம் செய்யும்பெண்ணை தாக்கும் பொலிஸார்… (Photos)

மத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பிழைப்பிற்க்காக கிழங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்னை காவல் ஆய்வாளர் சின்ன சாமி அடித்து இழுத்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கண்டனம் குவிகின்றது.

மேலும்..

மண்டை கல்லாறில் வேக கட்டப்பாட்டை இழந்து தடம் புரண்ட டிப்பர்(Photos)

A32 மன்னார் வீதி மண்டை கல்லாறில் வேக கட்டப்பாட்டை இழந்து தடம் புரண்ட டிப்பர்.

மேலும்..

கைத்துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் பலி…

திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் கைத்துப்பாக்கி வெடித்ததில், அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், கல்லோயா பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

குளவி தாக்குதல் : 4 பேர் பாதிப்பு

கொடிகாமம் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாம் போக்கட்டி பகுதியில் உள்ள காணியில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் குளவிகொட்டுக்கு இழக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

பாடசாலையின் அபிவிருத்தி நடைபெறுமா ?

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் பல பாடசாலைகள் இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ள இதேவேளை நவீன கட்டிடங்களையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இன்னும் சில பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்வி கற்க வேண்டிய துர்பார்க்கிய நிலையில் பாடசாலை கட்டிடங்கள் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். கந்தபளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலய கட்டிடம் அதற்கு ...

மேலும்..

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 39வது கல்லூரி தின விழா…

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தின் 39வது கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் 14.06.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பி.எஸ் சதீஸ் கலந்து கொள்ள உள்ளதுடன் கௌரவ ...

மேலும்..

35 தமிழ் அகதிகளுடன் இந்தோனேசியக் கடலில் தத்தளித்து அவுஸ்திரேலியாவை நோக்கி நகரும் படகு (Photos)

சுமத்திரா தீவின் அருகே படகு பழுதானதால் தவித்த கொண்டிருந்த 35 தமிழ் அகதிகளை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அந்த படகு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமாவது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை படகில் என்ஜீன் கோளாறானதாலும் கடுமையான காற்றினாலும் லோஹ்ங்க கடற்கரையிலிருந்து (Lhoknga ...

மேலும்..

மற்றுமொரு குண்டு செயலிழக்க வைப்பு

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்த இடத்தில் இருந்த மற்றுமொரு குண்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

அவிசாவலையில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தீ வைத்துக் கொண்டார்…(Photos)

அவிசாவெல்ல நகர மத்தியில் இளைஞர் ஒருவர் நேற்று தீ வைத்துகொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. காதல் தோல்வியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பலத்த தீக் காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பிரதேச வாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

மேலும்..

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் பிரகல் திரு வென்றார்….

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  "பிரகல் திரு" வென்றார்! பிரகல் ஆயிரத்து நூற்றிச்சொச்சம்....ராதிகா முந்நூற்றிச்சொச்சம்.....வாக்குகளைப் பெற்றார்கள்!

மேலும்..

ஐ.தே.கயுடன் கரம்கோர்க்கும் பொன்சேகா….

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்று சனிக்கிழமை(04) ஒன்றுக்கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..