இலங்கை செய்திகள்

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது!

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு ...

மேலும்..

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 856 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 2ஆவது இலங்கையர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் ...

மேலும்..

ஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்!

ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது நிலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

விமானப்படை தளத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

கொரோனா அச்சம் – மூன்று கிராமங்களுக்கு சீல்!

கொரோனா அச்சம் காரணமாக மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களும், அக்குரணை பகுதியிலுள்ள ஒரு கிராமமும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் இலங்கையர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்றுவந்த பெல்தம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 09 பேர் குணமடைந்துள்ள ...

மேலும்..

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியோர் உடன் தனிமைப்படுத்தலில் ஈடுபடுக! – அரசு அவசர கோரிக்கை

இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து இம்மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிய கண்டி, அக்குரணையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ...

மேலும்..

மண்முனை மேற்குப் பிரதேச சபையினால் மக்களுக்கு மரக்கறி வகைகள் விநியோகம்

கொரோணா தொற்று தொடர்பில் நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்வியல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இந்நிலையினைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகரெத்தினம், பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை ஆகியோரின் வழிகாட்டலின் அடிப்படையில் மண்முனை ...

மேலும்..

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கான  பொறிமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ...

மேலும்..

கொரானோவால் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக் கிரியை சுவிஸ் நாட்டில்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் கொரானோ வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த நபரின் இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ...

மேலும்..

அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – கோட்டாவிடம் மாவை கோரிக்கை

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ. சேனாதிராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் ...

மேலும்..

சமுர்த்திக் கடன்: அரசு திருகுதாளம் – அம்பலத்துக்கு வந்தது

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் தொகைக்குள்ளேயே அவர்களுக்கான உலர் உணவுப் பொதி ...

மேலும்..