இலங்கை செய்திகள்

தபாலில் வந்த பார்சலில் கஞ்சா!

இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் ...

மேலும்..

தாய், தம்பியை கோவிலில் இறக்கிவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு!

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வெருகல் - இலங்கை துறைமுகத்துவாரத்தைச் சேர்ந்த சந்திரராஜ் கஜேந்திரராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிய ...

மேலும்..

மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கவனவீர்ப்புப் போராட்டம்! பூநகரியில் நடந்தது

கிளிநொச்சி பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் பூநகரி சங்குப்பிட்டி வீதியின் பழைய பிரதேச செயலக வளாகம் முன்றிலில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி புதிய ...

மேலும்..

அம்பாறை மாவட்ட 18 வீடமைப்பு திட்டங்களின் 623 வீடுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்குக! அமைச்சர் பிரசன்ன பணிப்பு

அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி ...

மேலும்..

எந்தத் தேர்தலையும் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லையாம்! அமைச்சரவை பேச்சாளர் பந்துல தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்ல எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அடுத்த வருடம் உரிய நேரத்தில் அனைத்து தேர்தல்களும் இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், 'பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதித் தேர்தலை ...

மேலும்..

பிரித்தானியா லெஸ்ரர் பல்;கலை துணை வேந்தராக சென்ஜோன்ஸ் பழையமாணவன் கனகராஜா நியமனம்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் ...

மேலும்..

உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான மின் வலிப்பு சிகிச்சை இயந்திரம் அன்பளிப்பு! தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளருக்கான மின் வலிப்பு சிகிச்சை இயந்திரம் (ஈ.சி.ரி.) பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்ட புலம் பெயர் தமிழர் அமைப்பான இலங்கை - இந்தியா வர்த்தக சங்கத்தினரால் ஒரு கோடி ரூபா பெறுமதியில் சாலைக்கு ...

மேலும்..

மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு 3 பாடங்களில் ‘ஏ’ சித்தி : அவரது உடலுறுப்புகள் 7 பேருக்கு தானம்!

மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவி ஒருவர் திங்கட்கிழமை (04) வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹாகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. வணிகப் பிரிவில் உயர்தரப் ...

மேலும்..

12 எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபர் கைது : 9 சிலிண்டர்கள் மீட்பு – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை ...

மேலும்..

கிழக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்களை நிரந்தரமாக்குகின்றமை தொடர்பில் பேச்சு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்கள். அதன்போது அவர்களின் கோரிக்கையினை உரிய அமைச்சரின் ...

மேலும்..

சட்டவிரோத மின்சாரம் : மின் ஒழுக்கால் யாழில் வீடொன்று எரிந்து நாசம்

அயல் வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த வீட்டாரின் வீட்டில் மின் ஒழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்து நாசமாகியுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் சுதந்திர புரம் பகுதியில் உள்ள வீடொன்றிலையே திங்கட்கிழமை (04) ...

மேலும்..

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் PET ஸ்கேன் நிறுத்தப்படுகிறது !

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் 'பெட் ஸ்கேன்' (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம தெரிவித்தார். இந்த இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் ஓய்வு ...

மேலும்..

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ஆழ்கடல் மீன் பிடிப் படகுகள் சர்வதேச  எல்லைகளை தாண்டி தொழிலில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடல் எல்லைகளை தாண்டிச் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் ...

மேலும்..

கண்டறியப்பட்ட 15 பேர் பற்றிய விவரங்களை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப ஏற்பாடு! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவிப்பு

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட 15 பேர் தொடர்பான விவரங்களை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களுக்கும் அனுப்பிவைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. 2000 - 2021 ஆம் ஆண்டுக்கு ...

மேலும்..

பொருளாதார ரீதியில் அரசின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்கிறார் சாகர!

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா ? அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா ? என்பதை நாட்டு மக்களே ...

மேலும்..