இலங்கை செய்திகள்

ஜீவனுக்கு கிடைத்த புதிய பதவி

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான உறவை மேம்படுத்துவதை நோக்கமாக ...

மேலும்..

“Jaffna Edition” கண்காட்சியின் 02ஆம் நாள் இன்று

என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பமானது. குறித்த கண்காட்சி 2ம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பமானது. கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகார சபையும் இணைந்து ...

மேலும்..

காணி, பொலிஸை தவிர ஏனைய அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான ...

மேலும்..

ரணிலுடன் ஒன்றிணையும் நிலைப்பாட்டில் மைத்திரி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளார். சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் தரப்பினர் எந்நிலையிலும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மஹகரம பகுதியில் வெள்ளிக்கிழமை ...

மேலும்..

சுகாதார அமைச்சரை மாற்றுங்கள்! : வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வினை கோருவதற்கு பொது மக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் வவுனியாவில் நேற்று (01) முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய ...

மேலும்..

இலங்கைக்கு எந்நிலையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் பிரதிநிதிகள் குழு உறுதி

இலங்கை விரைவான பொருளாதார ஸ்திரப்படுத்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்புக்கு மத்தியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜப்பான் நாட்டின் பிரதிநிதிகள் குழுவினரிடம் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்துள்ள தகஷிதி யுசுகே ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தலுக்காக மாற்றியமைத்த கெப் வாகனத்துடன் ஐவர் கைது !

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் ...

மேலும்..

வெல்லம்பிட்டியில் ஓட்டோ சாரதி சுடப்பட்டு கொலை குறித்து ஆணும் பெண்ணும் கைது!

வெல்லம்பிட்டி, கிட்டம்பஹூவ பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் டுபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் வியாபாரியான புளுமெண்டல் ரவி என்பவரின்  தலைமையில் இடம்பெற்றதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. புளுமெண்டல் ரவியின் போதைப்பொருள் வர்த்தகத்தின் நிதி ...

மேலும்..

திமிங்கல வாந்தியின் 3 துண்டுகள் வைத்திருந்த முன்னாள் சிப்பாய் உட்பட மூவர் கைதாகினர்!

646 கிராம் நிறைகொண்ட  அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட கடல் திமிங்கல வாந்தியின் 3 துண்டுகளை வைத்திருந்த ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நெதகமுவ கெஹல்பத்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் என கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

மேலும்..

வடக்கு மாகாணத்தின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புக்கள் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு ...

மேலும்..

சீனாவா?, இந்தியாவா? என்று கேட்டால் இந்தியாவுக்கே முன்னுரிமை கொடுப்பேன்! அமைச்சர் டக்ளஸ் பகிரங்கம்

சீனாவா இந்தியாவா எனக்கேட்டால் இந்தியாவிற்கே முன்னுரிமை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் ...

மேலும்..

சுத்தமான, சுகாதார பாதுகாப்பு மிக்க குடிநீரை பெற்றுக்கொடுப்பதே இலக்கு! அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான  முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு அமைச்சில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ், அரச மறுசீரமைப்பு ...

மேலும்..

சாய்ந்தமருதில் வகை வகையான போசனை உணவுகள் தயாரிப்பு!

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் போசனைமிக்க உணவுகளைத் தயாரித்து அதனை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ...

மேலும்..

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பு திறன் செயலமர்வு – 2023

  நூருல் ஹூதா உமர் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்துடன் இனைந்து வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு திறன் சம்பந்தமான செயலமர்வு மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ல்முனை காரியாலயத்தில் ...

மேலும்..

மாகாண பொதுச் சேவை அலுவலக பணியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி!

  அபு அலா கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண பொதுச் சேவையிலுள்ள அலுவலகப் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நெறி மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவின் திருகோணமலை காரியாலய கூட்ட மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண முகாமைத்துவ ...

மேலும்..