இலங்கை செய்திகள்

கிளிநொச்சிக்குத் திடீர் விஜயம் செய்தார் ‘திஸ்ஸ அத்தனாயக்க’

  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஊடகச்சந்திப்பொன்றையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும்..

சருகுப் புலிக் குட்டி விபத்தில் சிக்கி பலி!

  அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி - காரைதீவுப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று வியாழக்கிழமை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை இரவு குறித்த சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை ...

மேலும்..

இழப்பீடு குறித்த வழக்கை மாற்றுவதற்கு நடவடிக்கை! விஜேதாஸ ராஜபக்ஷ கூறுகிறார்

எக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எக்பிரஸ் பேர்ள் ...

மேலும்..

கல்முனை பாலிஹாவின் புதிய அதிபராக நஸ்மியா கல்வியமைச்சினால் நியமனம்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை ...

மேலும்..

ஜனாதிபதியிடம் நாம் கோரும் கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்குபோல் உள்ளன சாணக்கியன் எம்.பி. சாட்டை

ஜனாதிபதியிடம் நாம் கோரும் மக்களுக்கான கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளன. - இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - இந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கேள்வி பதிலின் போது என்னால் இரண்டு ...

மேலும்..

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ.எல்.ரியாழ் கல்வியமைச்சால் நியமனம்!

  மாளிகைக்காடு நிருபர் கல்முனை கல்வி வலய, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ. எல். ரியாழ் வெள்ளிக்கிழமை கல்முனை வலயக்கல்வி பணிமனையில் வைத்து வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களிடமிருந்து தமது நியமன கடிதத்தைப் பெறுப்பேற்று ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி தொடர்பான கூட்டம்!

ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழையில் இரத்த வங்கியின் தொடர்பான கூட்டம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியஅதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ் தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் இரத்தவங்கியின் முக்கியத்துவம், அதன் அர்ப்பணிப்பு பற்றி கூறியமையுடன் முகாமைத்துவத்தின் வழிநடத்தலையும் பாராட்டினார். இனிவரும் ...

மேலும்..

யாழில் நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். இந்நிலையில் அவர்  ஆற்றிய ...

மேலும்..

மன்னாரில் சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

  மன்னார் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 'எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி ...

மேலும்..

சாவகச்சேரி நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் போராட்டம்!

  யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் ...

மேலும்..

பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி!

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் ...

மேலும்..

பண்டார வன்னியனுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!

  விஜயரத்தினம் சரவணன் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு - முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் ...

மேலும்..

சரத்வீரசேரவின் கருத்தைக் கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு! நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறும் வலியுறுத்து

  விஜயரத்தினம் சரவணன் கடந்த 22 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பிலும், நீதித் துறையை அச்சுறுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியமையைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது நீதித்துறை சுதந்திரமாகச் ...

மேலும்..

நாட்டை மீட்கப் போராடிய பண்டாரவன்னியனை இங்கை அரசாங்கம் நினைவுகூருதல் வேண்டும்! ரவிகரன் சுட்டிக்காட்டு

  விஜயரத்தினம் சரவணன் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி இந்த நாட்டை மீட்கப்போராடிய தமிழ் மாவீரனே பண்டாரவன்னியனாவான். எனவே மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாளை இலங்கை அரசாங்கமும் நினைவுகூரவேண்டும் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மாவீரன் பண்டாரவன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நினைவுகூரலில் ...

மேலும்..

மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக் கழித்துள்ளனர். அதன்போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை ...

மேலும்..