February 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இராணுவமே வெளியேறு! – புதுக்குடியிருப்பு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்  

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணி விடுவிப்புக்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த 3ஆம் திகதியிலிருந்து அமைதியாகப் போராடி வந்த மக்கள், தங்களுக்கான தீர்வு கிடைக்கப் பெறாத நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ...

மேலும்..

காணிகள் எம்மிடம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! -கேப்பாப்பிலவு மக்கள் விடாப்பிடி; ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மறுப்பு 

விமானப்படையினர் வசமுள்ள காணிகள் எங்களிடம் கிடைக்கும்வரை  போராட்டக் களத்திலிருந்து அரங்கமாட்டோம் என்று கேப்பாப்பிலவு -  பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப்  போராட்டம் இரு வாரங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில், கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் வெகுவிரைவில் ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும்! – மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஜனாதிபதி வாக்குறுதி 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்ததாவது:- "கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் தங்கியிருக்கின்ற பொதுமக்களின் காணிகள் தொடர்பில்  ஜனாதிபதியுடன் (14.02.2017) ...

மேலும்..

ரத்தன தேரரின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா? – வெள்ளிக்கிழமை கூடுகின்றது ஹெல உறுமயவின் பொதுக்குழு  

ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினரான    அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளைமறுதினம்   வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அத்துரலிய ரத்தன தேரர் தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய ...

மேலும்..

சைட்டத்துக்கு எதிர்ப்புக் காட்டி இன்று முதல் வாகனப் பேரணி! -அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை முதல்  நாட்டின் பல பாகங்களில் இருந்து கொழும்பை நோக்கி வாகனப் பேரணிகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

நல்லாட்சி அரசு மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துவிட்டது! – மஹிந்த அணி கூறுகின்றது 

நிதி முகாமைத்தும் மற்றும் தேசிய பொருளாதாரக் கொள்கைகளில் வினைத்திறனற்ற போக்கை தற்போதைய அரசு கடைப்பிடித்து வருவதால் சர்வதேச நம்பக்கத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  அரசின் மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைந்துவிட்டது என்று மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. பொரளையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ...

மேலும்..

வடக்கில் 4ஆவது நபருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று! – மேலும் 3 பேரின் குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

"வடக்கில் பன்றிக் காய்ச்சல் (எச்1என்1 வைரஸ்) தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும், 3 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களது குருதி மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன." - இவ்வாறு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது. "எச்1என்1 ...

மேலும்..

8 வருடங்கள் தடுப்பில் உள்ள இரு முன்னாள் போராளிகள்! – இதுவரை நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை சார்ள்ஸ் குற்றச்சாட்டு

"2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் இதுவரை எந்த நீதிமன்றத்திலும் முற்படுத்தப்படாது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பிடியில் உள்ளனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

வறட்சியால் 7 இலட்சம் பேர் பாதிப்பு! – நாட்டின் சில பகுதிகளில் மழை 

நாட்டில் தொடரும் கடும் வறட்சி காரணமாக 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சியியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

புதிய அரசமைப்பு குறித்து வதந்தி பரப்புவதைத் தடுக்க அரசு வியூகம்! – மக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக விசேட குழு

இலங்கைக்கு ஏன் புதிய அரசமைப்பொன்று தேவைப்படுகின்றது என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் கருத்தறியும் குழு தீர்மானித்துள்ளது. "இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தமது குழு 25 மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளது’’ என்று ...

மேலும்..

ஹசன் அலிக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாற்றமாக மன்சூர் ஏ. காதிருக்கு செயலாளர் பதவி வழங்கப்பட் டுள்ளமை கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்கு பலத்த சவாலாகும்…

(எஸ்.அஷ்ரப்கான்) முன்னாள் பிரதி அமைச்சரும்  மு.கா.வின் சிரேஷ்ட உறுப்பினருமான ஹசன் அலிக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாற்றமாக மன்சூர் ஏ. காதிருக்கு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளமை கட்சியின்  எதிர்கால செயற்பாடுகளுக்கு பலத்த சவாலாகும்  என  நாபீர் பௌண்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவரும், பொறியியலாளருமான ...

மேலும்..

வாழைச்சேனை மாற்றுத் திறளானிகளுக்கான விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து உடல் உள மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை செவ்வாய்கிழமை நடாத்தினர். வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வானது வாழைச்சேனை இந்துக்கல்லூரி ...

மேலும்..

அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.. சசிகலா ஆவேசம்!

நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனமெல்லாம் கட்சி மீதே இருக்கும். அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை சிறை வைத்துள்ள சசிகலா நேற்றிரவு ...

மேலும்..

வாழைச்சேனையிலுள்ள இரண்டு மதுபான சாலைகளால் கலாசார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது – யோகேஸ்வரன் எம்.பி

வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாசார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சச்சின் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி த அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு ...

மேலும்..

சென்னை அருகே நடைபெறும் விஜய் படத்தின் படப்பிடிப்பு..

‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யின் 61 வது படத்தில் அவருடன் இயக்குனர் அட்லி இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள உத்தாண்டியில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. பட அதிபரான ஆதித்யா ராம், ஈ.சி. ஆர் ரோட்டில் ஆரம்பித்த இந்த ஸ்டுடியோவில் தான் ...

மேலும்..

நெல்லை அரசு நிர்ணய விலையில் வாங்க கோரி வாழைச்சேனை விவசாயிகள் போராட்டம்

வாழைச்சேனை கமநலசேவை பிரிவில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நெல்லுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையையும் விட குறைவான விலையில் தனியார் நெல் கொள்வனவு செய்வதை எதிர்த்து தங்களது நெல்லை அரசு நிர்ணய விலையில் வாங்க வேண்டும் என்று கோரி ...

மேலும்..

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்..

நாட்டில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்கரைபிரதேசங்களை அண்டிய பகுதியில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு ,வடமத்திய ,கிழக்கு ,ஊவா ...

மேலும்..

ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு..

இலங்கை ஆசிரியர் சேவையுடன் தொடர்புடைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கென சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தன்னார்வ, சமயாசமய, ஒப்பந்த அடிப்படைகளில் பணியாற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் ஆசிரியர் சேவையில் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்..

2016/2017ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான  விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதேவேளை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத் திருத்தும் போது முன்பை விட சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில்  எந்த மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ...

மேலும்..

பொன்சேகாவின் உறுப்புரிமையை ரத்து செய்யும் மனு ஒத்திவைப்பு

அமைச்சர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான மேஜர் அஜித் பிரசன்னவினால் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு நேற்று ...

மேலும்..

அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தை பகிர்வதை பற்றி பேச தயார்..

புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்கும் நடவடிக்கையின் போது அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் போது அதற்காக பொது கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி பொதுமக்களின் அனுமதியுடன் அதனை ...

மேலும்..

கல்வியுடன் இணைத்து ஒழுக்கத்தையும் பண்படுத்துவதற்கு அறநெறிப் பாடசாலைகள் மிகுந்த பங்காற்றுகின்றன

துறையூர் தாஸன் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பது போன்று தமிழ்மொழியிலும் கணிதத்திலும் பாண்டித்தியம் பெறுகின்ற போது நிச்சயமாக எந்தப் பரீட்சையிலும் இலகுவாக சித்தியடையலாமென்றும் கணிதம்,விஞ்ஞானம்,தமிழ் போன்ற பாடங்களை ஊக்கமாக சிறுவயதில் இருந்து கற்பதுடன் சர்வதேசத்துடன் உறவாடக்கூடிய ஆங்கில மொழியையும் சிறுவயதிலிருந்து ...

மேலும்..

தனித்தனியான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க ஜனாதிபதி பணிப்பு

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நெல் உற்பத்தியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லுற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அரிசி ...

மேலும்..

எமது வாக்குகளை சிதறடிக்கவே கருணா வருகிறார்..

பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கருணா அம்மானினால் புதிய அரசியல் கட்சி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வடக்கு கிழக்கில் கிடைக்கும் வாக்குகளை சிதறடிப்பதற்காவே அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, சிறிலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த ...

மேலும்..

பேஸ்புக் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பேஸ்புக் தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார். இது பேஸ்புக்கிற்கு தடை விதிப்பது அல்ல, ஒழுங்குபடுத்தலே என சுட்டிக்காட்டிய அவர், அது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பேஸ்புக் வலைத்தளம் குறித்த பல்வேறு ...

மேலும்..

கிராம சேவகரின் பணிகளுக்கு இடையூறு செய்த இராணுவ வீரர் கைது.

பெண் கிராம சேவகர் ஒருவரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சாலியவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதவாச்சி, பூனேவ முகாமில் பணியாற்றும், மேல் புளியன்குளம், பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தின், மெதகம ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(15.02.2017)

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: மற்றவர்களை ...

மேலும்..

அம்பகாமம் காட்டுக்குள் புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

  முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று 15-02-2017 காலை புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.  விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு   எறிகனையும்  16 கிலோ கிராம் கொண்டது என்றும் ...

மேலும்..

கிளிநொச்சி  அரச அதிபர்  கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி

கிளிநொச்சிமாவட்டசெயலகநலன்புரிசங்கத்தினால் 2016ம் ஆண்டுக்ககானஅரசஅதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி நேற்றையதினம்  (13.02.2017)  கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்திருந்தினராக கிளிநொச்சி மாவட்ட  அரச அதிபர் திருசுந்தரம் அருமைநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி,கண்டாவளை,பச்சிலைப்பள்ளி,பூநகரி ...

மேலும்..

முதலமைச்சர் காரியாலயம் தீ!!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீப்பற்றியுள்ளதாக முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார். ஏசி மெசினில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இடம் பெற்ற இவ்வனர்த்தத்தில் 100ற்கும் மேற்பட்ட ஆவணங்கள் தீப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (அப்துல்சலாம் யாசீம்)

மேலும்..

கல்முனையில் பாடசாலை மாணவர்கள் சிலர் ‘மாவா’வுக்கு அடிமை; பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்

"கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் 'மாவா' எனப்படும் போதைவஸ்த்துக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்" என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார். தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ...

மேலும்..

இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில் ஆணைக்குழு அமைக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் பிரேரணை

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு கோரும் பிரேரணை, தன்னால் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண ...

மேலும்..

 கிளிநொச்சியில் வீடுகளுக்கு செல்லாத மின்சார சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடகின்றன.

  கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான  சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல  கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான  மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்  சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி ...

மேலும்..

வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – ட்ரம்ப் ஆவேசம்

அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து ...

மேலும்..

மக்களின் காணிகள் விடுவிப்பு – கணிக்குள் கால்வைத்த பிறகு தான் போராட்டம் கைவிடப்படும் மக்கள் தெரிவிப்பு

விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டுமெனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படைத்தளம் முன்பாக கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போரட்டக்களத்துக்கு சற்றுமுன்னர் (1 மணியளவில் )வருகைதந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ...

மேலும்..

எல்லை மீறும் குற்றச்செயல்களை  உடனே தடுக்கவேண்டும் பொலிஸ்! – வடக்கு அவைத் தலைவர் வலியுறுத்து

"யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "யாழ்ப்பாணக் குடாநாட்டில் ...

மேலும்..

கிளிநொச்சி பேருந்து  நிலையம்   அமைப்பது  தொடர்பில்  ஆராய்வு 

கிளிநொச்சி  மாவட்டத்திற்கான  பேருந்து  நிலையம் அமைப்பது  தொடர்பிலான   கலந்துரையாடல்  ஒன்று  இன்று  காலை  கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில்  இடம்பெற்றது கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம்  தலைமையில்  கிளிநொச்சி மாவட்ட செயலக  மாநாட்டு  மண்டபத்தில்  ஆரம்பமான  கலந்துரையாடலில்  கிளிநொச்சி  மாவட்டத்திற்கான ...

மேலும்..

ஆஸி. சென்ற பிரதமர் இன்று பல தரப்பு பேச்சு! (photo)

ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் அந்த நாட்டுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்றிரவு மெல்பேர்ண் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை விக்டோரியா மாநில பிரதமர் டானியல் அண்ட்ருஸ், இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் பிரைஸ் கட்சிசன், ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் ...

மேலும்..

தளராத துணிவோடு தொடர்கின்றது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்! – முஸ்லிம்களும் நேரில் சென்று ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு -  பிலக்குடியிருப்பு மக்களின் அறவழிப் போருக்கு, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம் மக்களும் நேற்று நேரில் சென்று தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர். விமானப் டையினரால் பலாத்காரமாக தங்களிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட நிலத்தை விடுமாறு கோரி 15 நாட்களாக ...

மேலும்..

கேப்பாப்பிலவுக்கு விடிவு கொடுங்கள்! – மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (photos)

கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் நேற்றுக் கறுப்புப் பட்டியணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய மாணவர்கள் தமது ...

மேலும்..

ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்! – திட்டத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு போர்க்கொடி

"ஐ.நா.தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு - நீக்குவதற்கு  இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். அதற்கு ஒருபோதும் இணங்கமாட்டோம். அதனை முற்றுமுழுதாக எதிர்ப்போம்." - இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்குக! – ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண சபை அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், அம்மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு ...

மேலும்..

மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விவேகம் டீம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் ...

மேலும்..

சசிகலாவுக்கு சிறை: கடவுள் இருக்கான் குமாரு- ட்வீட்டும் கோலிவுட்..

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது குறித்து கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக ...

மேலும்..

சைட்டம் மூடப்படாவிட்டால் 20ஆம் திகதி அரச வைத்தியர்களின் போராட்டம் வெடிக்கும்! – நாளை கறுப்புப்பட்டிப் போராட்டம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை (சைட்டம்) மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக ஐக்கிய இலங்கை வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. தங்களது பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவாக சுகாதார அமைச்சைச் சேர்ந்த 15 தொழிற்சங்கங்கள் ...

மேலும்..

தமிழுக்கு இடமில்லை! – நிகழ்வைப் புறக்கணித்தார் ஊவா  மாகாண உறுப்பினர் ருத்திரதீபன்

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால் பிரதேச சபை திறப்பு விழாவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன் புறக்கணித்துள்ளார். "தமிழ் மொழியைப் புறக்கணித்தால் எவ்வளவு முக்கிய நிகழ்வென்றாலும் அதனைப் புறக்கணிக்கத் தயங்கமாட்டோம்" என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் ...

மேலும்..

கொஞ்சம் கூட கூசாமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் இதுதான் கதி!

கொஞ்சம் கூட கூசாமல், மனசாட்சி இல்லாமல், அடுத்தவர் சொத்துக்களையும், மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்க நினைப்போருக்கு இதுதான் கதி.. இதுதான் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மூலம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் பாடமாகும். இது சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு மட்டும் கிடைத்த தண்டனை அல்ல. ...

மேலும்..

தமிழ் எம்.பிக்கள் ஒன்றியத்துக்கு ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். பச்சைக்கொடி! – ஐ.தே.க., புளொட், இ.தொ.கா. பரிசீலிப்பு; இலங்கைத் தமிழரசுக் கட்சி மெளனம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை அமைக்கும் நோக்கில்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்முன்வைத்துள்ள யோசனைக்கு தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளன. "ஒற்றுமை என்பதே தமிழருக்கு எஞ்சியிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்.எனவே,கூட்டாகச் செயற்பட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இலண்டனிலும் கவனயீர்ப்பு! (photo)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் காய்ந்து கருகி இடைவிடாது போராடி வருகின்ற மக்களுக்கு ஆதரவாக, இலண்டனிலும் நேற்றுமுன்தினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்கள், விமானப் படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தங்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி, ...

மேலும்..

ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த S3 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் ரூ 25 கோடி வசூல் செய்தது. இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிங்கம்-3 வசூல் விண்ணை முட்டியுள்ளது. 4 ...

மேலும்..

கனகபுரம் துயிலுமில்லம் காணியில் தனியாா் வேலி, பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம்

  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று செவ்வாய் கிழமை 15-02-2017   தனியாா் ஒருவரினால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபா் ஒருவா் கூலியாட்களை கொண்டு கம்பி ...

மேலும்..

மடுக்கரை மக்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு…

மடுக்கரையில் இருந்து நானாட்டான் வருகின்ற வீதியானது ஏறக்குறைய 8 கிலோமீட்டர் வீதி காணப்படுகின்றது, இதில் 5 கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழும் 3 கிலோமீட்டர் உள்ளுராட்சி சபையின் கீழும் வருகின்றது, இவ்வீதியனாது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நகரத்துக்கு ...

மேலும்..

அட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டும் வைபவமும், திறப்பு விழாவும்…

  அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறப்பு விழாவும் 14.02.2017 அன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. நிர்மாணிக்கப்படவுள்ள சகல வசதிகளும் கொண்ட ...

மேலும்..

தமிழிலில் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தெலுங்கு, இந்தி திரைப்பட உலகிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூர்யா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான `சி3' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்

நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவிப்பு நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் இது நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் ...

மேலும்..

காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்

காதலர் தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இன்றைய தினத்தில் காதலன் ஒவ்வொருவரும் தனது காதலிக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பது வழக்கம். அதேபோல், காதலியும் தன்னுடைய காதலனுக்கு விருப்பமான பொருளை பரிசாக கொடுப்பார்கள். இந்த ...

மேலும்..

கொழும்பில் போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கிற்ன்றனர் – முஜீபுர் றஹ்மான் குற்றச்சாட்டு

கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும் என்றும் ஆனால் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் பொலிஸார் மீது குற்றம ...

மேலும்..

பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்..!

பாகுபலி கதாநாயகனான பிரபாஸ், தற்போது சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் ஆகியோர் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக இத்திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று ...

மேலும்..

என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்: அஞ்சலி

நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- சித்தி தகராறு உள்ளிட்ட குடும்ப சச்சரவுகளில் இருந்து மீண்டு விட்டீர்களா? பதில்:- எந்த வீட்டில் பிரச்சினை இல்லை. சிறுசிறு சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால் அவை நிரந்தரம் இல்லை. ...

மேலும்..

பிரான்ஸ் நாட்டு மருத்துவக்குழுவுடன் வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்தி தொடர்பில் பிரான்ஸ் நாட்டு வைத்தியக் குழுவுடன் சந்திப்பொன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார துறைசார்ந்த எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும்,சிறுவர் பாதுகாப்பு மற்றும் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது

  பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 14.02.2017 அன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கைது ...

மேலும்..

அத்லான்டிக் கனடாவை நோக்கி ஆபத்தான பனிப்புயல்!

அத்லான்டிக் கனடாவின் பெரும்பகுதியை ஆபத்தான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. மக்களை முடிந்த வரை-நியு பிறவுன்ஸ்விக்-உட்பட-வீதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கூறப்படுகின்றது. நியு பிறவுன்ஸ்விக்கின் சகல பகுதிகளிலும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ஒரு சாத்தியமான வாழ்க்கை ...

மேலும்..

சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலையில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச ...

மேலும்..