June 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 114 ரன்னும், பாபர் ஆசம் 46 ரன்னும், மொகமது ...

மேலும்..

சென்னையில் அகதிகள் சிக்கலை மையப்படுத்தி சைக்கிள் பேரணி 

அகதிகள் பிரச்னைகளைக் கவனிக்க  வைக்கும் வகையில் இலங்கை, ஈராக், சூடான், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நேற்று(ஜூன் 17) சென்னையில் சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். அடையார் காந்திநகர் கிளப்பிலிருந்து பெசண்ட் நகர் வரையும்  இப்பேரணி நடைப்பெற்றது. சர்வதேச அகதிகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.06.2017

  மேஷம் மேஷம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியா பாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மதியம் 1.26 மணி முதல் ...

மேலும்..

அடுத்த ஆண்டுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர் இரத்து

அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை இரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதாலேயே இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக ஐ.சி.சி. விளக்கமளித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு நடத்தப்படவிருந்த ...

மேலும்..

உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, தன்னுடைய ஐந்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைவிட்டுள்ளார். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தன்னை புழல் சிறைக்கு மாற்றும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ...

மேலும்..

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போனோரின் சடலங்கள் கண்டெடுப்பு

அமெரிக்க கடற்படைக் கப்பல் விபத்துக்குள்ளானதில் காணாமல் போன கடற்படை மாலுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை மற்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் கடற்பரப்பில், நேற்று (சனிக்கிழமை) ஏ.சி.எக்ஸ். கிறிஸ்டர் (ACX Crystal) சரக்கு கப்பலுடன் யு.எஸ்.எஸ். ஃபிஸ்ட்ஜெரால்ட் (USS Fitzgerald) ...

மேலும்..

மோசூல் பழைய நகர் மீது ஈராக்கிய படைகள் தாக்குதல்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கடைசி மாவட்டமான மோசூல் பழைய நகர் மீது ஈராக்கிய படைகள் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகின்றது. மாவட்டத்தின் தெற்கு பகுதிக்குள் மத்திய பொலிஸ் படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் மேற்குப் பகுதியூடாக சிறப்புப் படையினர் முன்னேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் சனத்தொகை ...

மேலும்..

கியூபாவுடனான அமெரிக்காவின் நிலைப்பாடு கனடாவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது: பிரதமர் ஜஸ்ரின்

கியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கியூபாவுக்கும் இடையில் சுமார் அரை நூற்றாண்டாக நிலவிய கடுமையான நிலைமைக்கு கடந்த ஒபாமா நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. ...

மேலும்..

மொன்றியல் போக்குவரத்து திட்டத்திற்கு பெருமளவு நிதியொதுக்கீடு!

மொன்றியல் நகரின் பிரதான தொடரூந்து போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்திற்காக, மத்திய அரசு 1.28 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. மொன்றியல் நகரையும், அதன் சுற்று வட்டாரங்களையும், மொன்றியல் அனைத்துலக விமான நிலையத்தினையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த தொடரூந்துச் சேவைத் திட்டத்தினை கடந்த 2015ஆம் ...

மேலும்..

லண்டன் பிறிட்ஜ் தாக்குதல்: சந்தேகநபர்கள் விடுதலை!

லண்டன் பிறிட்ஜ் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இறுதியாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் தகவல்களின் பிரகாரம், கடந்த 9 ஆம் திகதி கிழக்கு லண்டனில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதி: டேவிட் டேவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குகின்றேன் என்ற வகையில் கூறுகின்றேன். ...

மேலும்..

முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள பிரதான வீதிகளை அண்மித்து வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லைப் பகுதிக்குள் முறையற்ற ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்த இப்தார் 

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய இப்தார் நிகழ்வு கொழும்பு -07, விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வியாழன்று (15) நடைபெற்றது. உத்தியாகபூர்வ இல்லத்தில் முதன்முறையாக நடத்திய இந்த இப்தாரில் இலங்கையிலுள்ள பலஸ்தீன், ஈரான், ஈராக், துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், உலமாக்கள், முஸ்லிம் ...

மேலும்..

தேசிய அறநெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திருஞானசம்பந்தர் குருபூசை ஊர்வலம் காரைதீவில்.

 தேசிய அறநெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திருஞானசம்பந்தர் குருபூசை ஊர்வலமானதுஇன்று (18.06.2017) காரைதீவு பிரதேச செயலகம் , இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இந்து விருத்தி சங்கம் என்பவற்றின் அணுசரனையுடன் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ...

மேலும்..

நாட்டில் கௌரவமான பதவி வகித்த தமிழரை தமிழ் சமூகமே வீட்டுக்கு அனுப்புவது பொருத்தமானதல்ல –  காதர் மஸ்தான் 

அண்மைக்காலமாக வட  மாகாணசபைக்குள் நிலவிவரும் குழப்ப நிலையும் அதன் பின்னரான தீமானங்கள் மூலம் மாகாணசபைக்குள் ஏற்பட்டிருக்கும்  பிளவும் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் ...

மேலும்..

பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலைத்தினால் தந்தையர் தினம் கொண்டாட்டம்.

பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தினால் தந்தையர் தினத்தினை முன்னிட்டு சிவன் முதியோர் இல்ல முதியவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலைய பொறுப்பதிகாரி சகோதரி திருமணியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிவன் முதியோர் இல்லத்தில் வாழும் ...

மேலும்..

வட மாகாணசபையில் பொதுமக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட நிதியில் ஒருசதம் கூட என்னாலோ அல்லது எனது குடும்பத்தாலோ நாங்கள் துஸ்பிரயோகம் செய்யவில்லை :வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்

வட மாகாண சுகாதார அமைச்சு அலுவலகத்தி நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்   கருத்து தெரிவிக்கையில்,வட மாகாணசபையில் பொதுமக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட நிதியில் ஒருசதம் கூட என்னாலோ அல்லது எனது குடும்பத்தாலோ நாங்கள் துஸ்பிரயோகம் செய்யவில்லை என ...

மேலும்..

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதிய கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டை சேர்ந்த வி.விமலன் மற்றும் சித்தங்கேணியை சேர்ந்த த.சுரேஸ்குமார் (லண்டன்) ஆகியோரால் தேவிபுரம் அ பகுதி பரந்தன் வீதி முல்லைத்தீவை முகவரியாக கொண்ட உலகநாதன் ரஜனி எனும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்க்கு ரூபா ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 03ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 3ம் நாள் திருவிழா நேற்று 17.06.2017 சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

 எஸ்.என்.நிபோஜன்  கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தமிழ்ச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த சிலையே கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. விஜிபியின் தலைவர் பேராசிரியர் விஜி சந்தோசம் அவர்களினால் (17) பிற்பகல் ...

மேலும்..

பூநகரியில் மீட்க்கப்பட்ட 248 கிலோ கேரள கஞ்சா   260 கிலோ ஆனது  விசாரணை  தீவிரம்

  எஸ்.என்.நிபோஜன் இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்   ஒருதொகுதி கேரள கஞ்சா  கிளிநொச்சி  பூநகரி  சங்குப்பிட்டி   பகுதியில்  வைத்து  கார் ஒன்றுக்கு இன்று மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப்  பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது படகுமூலம்  வந்தவர்களும் காரில்  வந்தவர்களும் தப்பி  ஓடிய ...

மேலும்..

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்களை ஏமாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்

வவுனியாவில் இன்று (17.06.2017) 45ஆவது நாட்களாக சுகாதாரத் தொண்டர்கள் தமது நியமனத்திற்கான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் இன்று சுகாதார தொண்டர்களின் போராட்ட இடத்திற்குச் வருவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் காலை 10.30மணியவில் சென்று தனது வாகனத்திலிருந்தபடியே சுகாதாரத் தொண்டர்களை அழைத்து பேசிவிட்டு ...

மேலும்..

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நின்ற இராணுவவீரரை பொலிஸார் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று   (16.06.2017) மதியம் 12.30 மணியளவில் கஞ்சாவுடன் நின்ற இராணுவவீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி அக்கராயன் இரானுவ முகாமில் பணியாற்றும் இரானுவ வீரர் தரங்ககுமார சேனவிரத்ன ( வயது – ...

மேலும்..

பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் தற்போது ஹிந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். உன் சமையல் அறையில் என்ற படத்தின் ரீமேக் ...

மேலும்..

ரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். ஏற்கனவே அரசியல் பற்றி பேசியிருந்த இவரை தற்போது பலரும் நேரில் சந்தித்து வருகிறார்கள். அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று கட்சி பற்றிய அறிவிப்புகள் ...

மேலும்..

சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

சிம்பு தன்னுடைய படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் தன்னால் முயன்ற உதவியை செய்து வருகிறார். அதாவது மற்ற நடிகர்களின் படங்களில் பாடுவது, ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போன்று செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அரவிந்த் சாமியின் ...

மேலும்..

ஜூன் 22 ல் நடக்கபோவது என்ன? விஜய் ரசிகர்களின் வெளிப்பாடு

இளையதளபதி விஜய் அதிகமாக பேசமாட்டார் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தில் மட்டுமில்லாது பொது நிகழ்ச்சிகளிலும் சமூகம் சார்ந்த விசயங்களை பேசிவருகிறார். ரசிகர்களின் வரவேற்போடு, கூட்டத்தில் ஆரவாரமும், மக்களிடையே ஒரு நல் எண்ணமும் உருவாகியுள்ளது. இதோடு ரசிகர்கள் பலரும் விரைவில் முக்கிய தகவல்கள் வரும் ...

மேலும்..

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். மக்கள் இயக்கம், ரசிகர் மன்றம் என சில அமைப்புகளும் அவருக்கு உள்ளது. குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவான அவர் வரும் ஜூன் 22 ல் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ரசிகர்கள் ...

மேலும்..

சவூதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்புக் காலம் முடிவு!

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்புக் காலம் ஜுன் 25 இல் முடிவடைவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. பல்வேறுபட்ட தொழில்களின் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கு தமது தொழில் ஒப்பந்த கால வீசாக்கள் முடிவடைந்த போதும் சட்டவிரோதமாக ...

மேலும்..

சம்பந்தன் எழுதிய கடிதத்துக்கு விக்கி பதில்

வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாணும் வகையில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எழு திய கடிதத்துக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.   அவர் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் வடமாகாணசபையில் இலஞ்ச ஊழல் மோசடிகள் ...

மேலும்..

பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: தமிழ் அரசியல் கைதிகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பாதுகாப்பு, தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டி – தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

நாளை 15 மணித்தியால நீர் வெட்டு!

அம்பலாங்கொட, பட்டபொல, எல்பிட்டிய, பலப்பிட்டிய, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 8.00 மணி முதல் 15 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ...

மேலும்..

பௌத்த மதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம்: மஹிந்த

தனது மதத்துக்காகவும், இனத்துக்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, இந்த அரசாங்கத்தால் சட்டம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றின் கட்டடத்தை நேற்றைய தினம் (சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனைக் ...

மேலும்..

ஈழத்தின் கிழக்கிலிருந்து இரு மாதங்களுக்கொரு முறை அகரம் கலைக்கழகத்தினால் வெளியீடு செய்யப்பட்டும் செ.துஜியந்தனின் விருந்து சஞ்சிகை வெளியீடு

துறையூர் தாஸன் இலக்கியங்கள் மாத்திரமே ஆண்டுகள் கடந்து யுகங்கள் தாண்டி வாழக்கூடியது.இலக்கியம் படைப்பவர்களை பிரமா என்றுதான் கூறவேண்டும் என, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார். ஈழத்தின் கிழக்கிலிருந்து இரு மாதங்களுக்கொரு முறை அகரம் கலைக்கழகத்தினால் வெளியீடு ...

மேலும்..

மன்னாரில் முதல்  முறையாக இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

-மன்னார் நிருபர்- சர்வதேச யோகா தின நிகழ்வுகள் முதல் முறையாக மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த யோகா ...

மேலும்..

மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!

தமிழர்களுக்கென்றோர் ஒழுங்கான அரசியல் பாரம்பரியம் உள்ளது, இதனால்தான் எல்லோரும் ஐயா என்று எழுந்து நின்று மரியாதை செய்ய கூடிய தமிழ் தலைவர்கள் இன்னமும் உள்ளனர், உதாரணமாக சம்பந்தர் ஐயாவை சொல்லலாம், ஆனால் எழுந்து நின்று எல்லோரும் மரியாதை செய்ய கூடிய அளவில் ...

மேலும்..