November 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தக் கோரும் நியூசிலாந்து பிரதமர், மறுக்கும் ஆஸ்திரேலியா.

மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 2000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 150 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து பிரதமர்  ஜெசின்டா அர்டெர்ன் கோரி வருகிறார் . அத்துடன் இந்த ...

மேலும்..

கிழக்கில் வாழும் நாம்  எத்தனையோ பிரச்சினைகளுக்கு   தினந்தோறும் முகங்கொடுத்து வருகின்றோம்..!!!!

  கிழக்கில் வாழும் நாம்  எத்தனையோ பிரச்சினைகளுக்கு   தினந்தோறும் முகங்கொடுத்து வருகின்றோம், எம் சமூகம் ரீதியாக  எழும் பிரச்சினைகளுக்கான  தீர்வை பெற்றுக் கொள்ளவே நாம்  எமக்குள்  சிலரை பிரதிநிதிகளாக  தெரிவு  செய்து பாராளுமன்றத்துக்கு  அனுப்புகின்றோம். ஆனால் இன்று அவர்களோ தமது பைகளை  நிரப்ப  முயற்சிக்கின்றனரே தவிர எமது சமூகத்தின்  உரிமைகளை  வென்றெடுப்பதற்கான  முயற்சிகளை  அவர்கள் முயற்சிப்பதில்லை என்பதே எம் சமூகத்தின் இன்றைய அவலநிலைக்கு காரணமாய் அமைந்துள்ளது, இதனால் பாராளுமன்றத்தில் உள்ள எமது  ஊமைகளை நாம்  நம்பாமல் இன்று நாமே எமது பிரச்சினைகளுக்காய் குரல் கொடுக்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் தான் எனக்கு அண்மையில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   அலிசாஹிர்  மௌலானா அவர்களும் ஆளுனருக்குமிடையிலான  சந்திப்பொன்று பிரதான  கொந்தராத்துக்காரரான நளீம் என்பவரின்இடம்பெற்றமைக்கான புகைப்படங்களை  எனக்குமுகப்புத்தகத்தில் காணக்கிடைத்தது. இந்த  சந்திப்பின் பின்னர்  நளீம் என்பவருக்கு ஏறாவூர் ஆற்றங்கரையோர  வீதிக்கான ஒரு  கோடி ரூபா பெறுமதியான கொந்தராத்தும் கிடைக்கப் பெற்றுள்ளது, ஆளுனருடன் கதைத்து  கொந்தராத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்த உங்களுக்கு ஏன் நம் சமூகத்தின் பிரச்சினைகள்  குறித்து தீர்வினைப் பெற்றுக்  கொடுக்க முடியவில்லை, 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் வீதியோரங்களில் நின்று போராடுகின்றனர்,எமது மாகாணத்திலேயே நியமனங்களைப் பெற்றுத் தருமாறு எமது சமூகப் பெண் ஆசிரியர்களும் ஆசிரியர்களும்போராடினார்கள்,மாயக்கல்லிமலையில் வைத்த சிலை வைத்தபடி இருக்கின்றது, இதையெல்லாம் பேசீ தீர்வொன்றைப்  பெற்றுக் கொடுக்க நேரமில்லை,தேநீர் அருந்தி  தமது   பக்கற்றை நிரப்ப கொந்தாரத்துக்குமாத்திரம் மண்டியிட நேரமுண்டு, நீங்கள் உங்கள்  சுயலாபங்களுக்காக அதிகாரத்தில் உள்ளவர்களிடம் மண்டியிடுவதால்தான் எங்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு உங்களுக்கு தைரியமில்லாமல் இருக்கின்றது, வடிகான்கள்,வீதிகள் மற்றும் சில வீடமைப்புத் திட்டங்கள் என நீள்கின்றது உங்கள்  சுயலாப அரசியலுக்கான கொந்தராத்துக்களின் பட்டியல், முஸ்லிம் தலைமைகளே  உங்கள் சுயலாபங்களுக்காக நீ்ங்கள் மண்டியிடுவதால் தான் எம் சமூகம்  இன்று தலை குனிந்து நிற்பது எமக்கு வேதனையளிக்கின்றது.  

மேலும்..

திருகோணமலையில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் வெளியீட்டுவிழா..!

திருகோணமலையில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் வெளியீட்டுவிழா..! ஆர்.சுபத்ரன் வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை என்ற நூலின் வெளியீட்டுவிழா 19 - 11 -2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் மு. மயூரன் தலைமையில் நடைபெறும். இவ் விழாவில் வரவேற்புரையை தி. ...

மேலும்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு... மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதண்மைப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி காலை 09.00 மணிக்கு முறக்கொட்டான்சேனை ...

மேலும்..

குரும்பசிட்டி நலிவுற்றோர் நலனோம்பு நிலையத்துக்கு உதவிகள்

குரும்பசிட்டி நலிவுற்றோர் நலனோம்பு நிலையத்துக்கு உதவிகள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கினார். தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து குரும்பசிட்டி நலிவுற்றோர் நலனோம்பு நிலையத்துக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் போர்வைகள், துவாய்கள் உள்ளிட்ட பொருட்கள் உதவிகளாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இன்று 17.11.2017 வெள்ளிக்கிழமை காலை 10 ...

மேலும்..

தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்ப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களைத் தெழிவூட்டும் மாநாடு

தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்ப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களைத் தெழிவூட்டும் மாநாடு தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்ப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களைத் தெழிவூட்டும் மாநாடு நேற்றைய தினம் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற ...

மேலும்..

வருடாந்த பரிசளிப்பு விழா…

வருடாந்த பரிசளிப்பு விழா... மட/ககுவந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று பாடசாலை அதிபர் எஸ். மோகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், ...

மேலும்..

மூதூர் கூர்கண்டம் பகுதியில் தொடரும் யானையின் அட்டகாசம்

மூதூர் கூர்கண்டம் பகுதியில் தொடரும் யானையின் அட்டகாசம் எப்.முபாரக்  2017-11-16. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர்  கூர்கண்டம் கிராமத்திற்குள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்றின் வீடொன்றின் பாதுகாப்பு வேலியினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.அதே வேளை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் யானை ...

மேலும்..

வைத்தியர்களை நியமித்து கோரி முன்று   இன மக்களும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் 

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர் வைத்தியர்களை நியமித்து கோரி முன்று   இன மக்களும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் தம்பலகமம் வைத்திய சாலைக்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்து,  முன்றுக்கு மேற்பட்ட வைத்தியர்களை   நியமித்துக் கோரி  இன்று (16)  காலை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள முன்று ...

மேலும்..

மாபெரும் அறுவடை விழா-2017

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர் மாபெரும் அறுவடை விழா-2017 ஜனாதிபதியின் பாடசாலை பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நஞ்சற்ற உணவு எனும் அடிப்படையில் தி/கிண்/அல் அமீன் வித்தியாலயத்தில்  பயிர்ச்செய்கையின் அறுவடை விழா இன்று 16.11.2017 திகதி  காலை 11. 00 மணிக்கு மிக கோலாகலமாக  நடைபெற்றது. இதனை பாடசாலை அதிபர் ...

மேலும்..

2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்திற்கு மதில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு …

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்திற்கு மதில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருந்தார். இந்நிதியில் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் இப்பாடசாலை ...

மேலும்..

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பதற்கான செயற்குழு தெரிவு!

(டினேஸ்) திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணி மற்றும் நினைவேந்தல் நாள் நிகழ்வு தொடர்பான செயற்குழுவினர் தெரிதல் சம்பந்தமான கலந்துரையாடல் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் சம்பூர் விநாயகர் ஆலய பாலர் பாடசாலை ...

மேலும்..

மட்டக்களப்பு படுவான்கரைக்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திற்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி மாகாணசபைக்கென தொகுதிகளை நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை  விடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வெள்ளியன்று மேற்படி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது  இக்கோரிக்கை ...

மேலும்..

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.சுவேந்திரராசாவுக்கு பட்டிருப்பு தொகுதி கல்வி சமூகம் பாராட்டு.

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் நிருவாகத்தில் பாரிய மாற்றம் பிரதி அதிபர் எம்.சுவேந்திரராசாவுக்கு பட்டிருப்பு தொகுதி கல்வி சமூகம் பாராட்டு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில்(களுவாஞ்சிகுடி) பிரதியதிபராக நியமிக்கப்பட்டடிருக்கும் எம்.சுவேந்திரராசா அவர்களின் நிர்வாச் செயற்பாடு மிகவும் போற்றுதற்குரியது. இதனை அவர் ...

மேலும்..

ஒரு தொகை சிகரட்களுடன் ஒருவர் கைது.

(க.கிஷாந்தன்) அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த நபரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை 17.11.2017 மதியம் சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கையில் அனுமதிபெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.11.2017

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர் கள். மதியம் 1.36 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ...

மேலும்..

செங்கலடி நகரில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய ஆர்பாட்டம்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக பகுதியில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணியினை வேளாண்மை செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினைக் கண்டித்து காடுகளை அழிப்பதைத் தடுக்குமாறு கோரியும் இன்று வெள்ளிக்கிழமை செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. பிரதேச கால்நடை அபிவிருத்தி, பால் ...

மேலும்..

மட்/ இந்துக் கல்லூரியில் கார்பெட் முற்றம் திறந்து வைப்பு…

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட கார்பெட் முற்றம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

கணித ஒலிம்பியாட் போட்டிக்காக சிங்கப்பூர் செல்லும் கிளிநொச்சி மாணவன்

சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கபட்ட, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார். கிளிநொச்சி ...

மேலும்..

இரண்டு தரவுகளிலும் எனது மகன் பெயர் இருந்தும் எப்படி சிறைச்சாலையில் இடமாற்றம்……..

இரண்டு தரவுகளிலும் எனது மகன் பெயர் இருந்தும் எப்படி சிறைச்சாலையில் இடமாற்றம் செய்ததாக கூறுகின்றனர் என விரக்தியுடன் தன் கருத்தை முன்வைக்கின்றார் கணேஷன் சிவகாமிப்பிள்ளை. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அலையும் சங்கத்தின் வடகிழக்கு 8 மாவட்டங்களின் ...

மேலும்..

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதா ???

(க.கிஷாந்தன்) ஊவா பரணகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஹாட்டப்பிட்டிய தோட்டம் உமாஓயா பல்நோக்கு திட்டத்திலிருந்து சுமார் இரண்டு அரை கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கஹாட்டப்பிட்டிய தோட்டத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்ற நிலையில் இவர்களுக்கு பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இக் கிராம மக்களுக்கு ...

மேலும்..

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் இறுதிக்கட்ட சிரமதானப்பணி முன்னெடுப்பு.

(டினேஸ்) 2017 ஆண்டிற்கான மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளின்  அம்பாறை மாவட்டத்திற்கான மாவீரர் துயிலுமில்லத்தின் இறுதிக்கட்ட சிரமதானப்பணிகள் இன்று 17 திகதி அப்பிரதேசத்திற்கான இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி சிரமதானப்பணியானது திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் போன்ற பகுதிகளின் உள்ள இளைஞர்கள் மீனவர் சங்கங்களின் உறுப்பினர்கள் முன்னாள் ...

மேலும்..

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று 17.11.2017 அன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள மின்சார சபைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக ...

மேலும்..

கூட்டமைப்பின் கதவு திறந்தே உள்ளது! – எவரும் வரலாம்; போகலாம் என்கின்றனர் அதன் தலைவர்கள் 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவு திறந்துள்ளது. யாரும் வரலாம். யாரும் போகலாம்."  - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறுவது ...

மேலும்..

அரசமைப்பு முயற்சி தோற்றால் தீர்வைப்பெற மாற்றுவழி உண்டு; சர்வதேசம் கைவிடாது – சம்பந்தன் எடுத்துரைப்பு

  * இறுதிவரை போராடுவோம்; தமிழர் விரும்பாத தீர்வை ஏற்கோம் * தோல்விக்கு நாம் பிள்ளையார்சுழி போடக்கூடாது * விமர்சிப்பதைவிட உள்ளிருந்து போராடுவதே மேல் "புதிய அரசமைப்புக்காக இறுதி வரை முயற்சிப்போம். வெளியிலிருந்து அதற்கு எதிராகப் போராடுவதைவிட அல்லது வெளியிலிருந்து விமர்சிப்பதை விட நாம் எல்லோரும் உள்ளுக்குள் ...

மேலும்..

நாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பொதுமக்கள் ஆளுகை செலுத்தக்கூடியது தகவல் அறியும் சட்டம் மாத்திரமே

நாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பொதுமக்கள் ஆளுகை செலுத்தக்கூடியது தகவல் அறியும் சட்டம் மாத்திரமே... (தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவா) நாட்டிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்களில் பொதுமக்கள் ஆளுகை செலுத்தக்கூடியது தகவல் அறியும் சட்;டம் மாத்திரமே என தகவல் ...

மேலும்..

மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் துல்லியமான விவரங்களைப் பெற முயற்சித்து வருகின்றோம் – செயற்பாட்டாளர் எஸ். அரியமலர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் துல்லியமான விவரங்களைப் பெற தமது அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களின் நினைவுக் குழுவின் செயற்பாட்டாளர் எஸ். அரியமலர் ...

மேலும்..

திருகோணமலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு!!

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமொன்றினை நிர்மாணிக்களவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துறையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்று (17) ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருகோணமலையில் ...

மேலும்..

ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா…

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் வித்தியாலயத்தின் அதிபர் இ.வேல்சிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர் அலி மற்றும் கல்விசார் அதிகாரிகள், பாடசாலை ...

மேலும்..

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவதும், 2018ஆம் ஆண்டிற்கானதுமான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 6 தினங்களாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை ...

மேலும்..

பிள்ளைகளை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள்…

தனியார் கல்வி நிலையங்கள் அவர்களிடம் எது இருக்கின்றதோ அதைக் கொடுத்து பிள்ளைகளையெல்லாம் பட்டதாரிகளாக ஆக்க முயற்சிக்கின்றார்கள். பிள்ளைகளை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள். அவர்கள் படித்து முடிந்ததன் பின்பு தொழிற் சந்தையிலே பெறுமதி மிக்கதான பட்டங்களைப் ...

மேலும்..

கிழக்கில் அதிசொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவிப்பு!

(அப்துல்சலாம் யாசீம்-) கிழக்கு மாகாணத்தில் அதி சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளை நேற்று (16) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துறையாடிய போதே அவர் ...

மேலும்..

குதர்க்கம் பேசிக் கொண்டிருப்பது எமது சமுதாயத்திற்குரிய அனுகூலமான விடயம் அல்ல… இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்

எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் கொண்ட மக்கள் மத்தியிலே எங்களுடைய உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலகம் ஏதும் விளைவித்து விடாத வகையிலே அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டு பெற்று எடுக்கின்ற மிகப் பெரிய விடயங்கள் தென்னகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது ...

மேலும்..

அறிவார்ந்த கல்வியை மட்டும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதால் அவர்கள் வாழ்வில் முழுமைபெற முடியாது – முருகேசு இராஜேஸ்வரன்.

அறிவார்ந்த கல்வியை மட்டும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதால் அவர்கள் வாழ்வில் முழுமைபெற முடியாது மாறாக அறிவார்ந்த கல்விக்கு சமாந்தரமாக அல்லது அதற்கு மேலாக ஒழுக்கம் நிறைந்த கல்வியையும் கற்க வேண்டியது அவசியமாகும். ஒழுக்கம் இல்லாத ஒருவரிடம் எவ்வளவுதான் கல்வி அறிவு இருந்தாலும் அவரை ...

மேலும்..