January 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர் நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா உக்கிளாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.01.2018

மேஷம் மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் ...

மேலும்..

ஜேர்மனையே கலக்கிய பொங்கல் விழா.

(டினேஸ்) உழவர் பெருநாளாம் தைபொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஜேர்மன் வாறண்டோர்வ் நகரத்திலே இயங்கிவரும் தமிழ் பாடசாலையான தமிழாலத்தில் கந்த தமிழர் திருநாளில்  தைப்பொங்கல் விழாவினை தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கும் கற்பிக்கும் வகையில் இந்து கலாச்சார சம்ரதாயங்களுக்கு அமைய கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது ...

மேலும்..

கனடாவில் 150 தமிழ் அகதிகளை மீட்ட மீனவர் மரணம்.

கனடாவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் உயிருக்காகப் போராடிய 150 ஈழத்தமிழ் அகதிகளை மீட்ட மீனவரான கெஸ் டல்டன் உடல்நலக் குறைவுக் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 87. 1986ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கெஸ் டல்டன், அந்த நடுக்கடலில் ...

மேலும்..

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை.

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் நாளை சனிக்கிழமை கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி நகரில் உள்ள பொதுச்சந்தை வளாகத்தில் ...

மேலும்..

வேகப்பந்து வீச்சாளர் ஷர்குல் தாகூருக்கு திடீர் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என தென்ஆப்ரிக்க முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி டெஸ்ட் வரும் 24ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்க உள்ளது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ...

மேலும்..

பொங்கல் முடிந்து தீபாவளி வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்; விஜய் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

தலைப்பைப் பார்த்து குழம்பிப் போயுள்ளவர்களுக்கு இடையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏன் அப்படி சொன்னார் என்பது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு, படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று அவருடைய டுவிட்டரில், படத்தின் துவக்கத்தைப் பற்றியும், எப்போது ...

மேலும்..

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட்!

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி, சுவிட்சர்லாந்தில் வரும் பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி ...

மேலும்..

மன்னார் கடற்பரப்பில் பல மில்லியன் ரூபா பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு!!

மன்னார் கடற்பரப்பில் பல மில்லியன் ரூபா பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு!! மன்னார் கடற்பரப்பில் வைத்து தமிழ மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ...

மேலும்..

கிளிநொச்சியில் 11 சிறார்களின் பெற்றோர்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

கிளிநொச்சியில் 11 சிறார்களின் பெற்றோர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 11 சிறார்கள் பிடிக்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

மேலும்..

தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் பெண்கள் 18 பேர் கைது

தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் பெண்கள் 18 பேர் கைது மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸ் பிரிவு பகுதியில், நீதிமன்றத்தில் உத்தரவிற்கமைய இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது விபச்சார நடவடிக்கைகளில் ...

மேலும்..

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார்

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார் அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வாவினால் குறித்த கார் ...

மேலும்..

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா - வடமாகாணசபை உறுப்பினர்பா.கஜதீபன் கலந்துகொண்டார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 101ஆவது பிறந்தநாள் நிகழ்வு, யாழ்.பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் கடந்த 17.01.2018 புதன்கிழமை மாலை 03 மணியளவில்  பண்டத்தரிப்பு பிரதேச எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகத்தலைவர் நா.முருகானந்தம் தலைமையில் ...

மேலும்..

கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல்

கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல் பனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல் காவல் நிலையத்தில் முறைப்பாடு கிளிநொச்சி பனை தெனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்  சங்கத்தின் தலைவரால் தனக்கு  நேரடியாக  அச்சுறுத்தல் ...

மேலும்..

தாரேன் தாரேன் என்று கூறினார்களே தவிர வெறும் சொல்லாமல் மட்டுமே முடிந்துவிட்டன – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) தாரேன் தாரேன் என்று கூறினார்களே தவிர வெறும் சொல்லாமல் மட்டுமே முடிந்துவிட்டன - கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து வெற்றி செய்த பொழுது, அன்று புதிதாக தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகியது. மலையக மக்கள் முன்னணி, ...

மேலும்..

மக்கள் அணைவருக்கும் நிச்சயமாக வீடுகள் கிடைக்கும் – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

மக்கள் அணைவருக்கும் நிச்சயமாக வீடுகள் கிடைக்கும் - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு   (க.கிஷாந்தன்) மலையகத்தில் 50 வருட காலமாக ஆட்சி செய்தவர்களுக்கு கிராமம் ஒன்று அமைக்க முடியவில்லை. 7 பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. காணி உறுதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. பிரதேச சபைகளையும் அதிகரிக்க ...

மேலும்..

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை  4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான சென்ஜோண் ...

மேலும்..

வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு

(டினேஸ்) வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு  உள்ளூராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  சுயேட்சை குழு போட்டியிடும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு  இன்று 19 திகதி துறைநீலாவணை பிரதேசத்தில்   வேட்பாளர் பூபாலரத்னம் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ...

மேலும்..

உலகத்தை கண்ணீரில் நனைத்த சிறுமி மரணம்! நெஞ்சை உருக்கும் இறுதி நிமிடங்கள்

உலகத்தை கண்ணீரில் நனைத்த சிறுமி மரணம்! நெஞ்சை உருக்கும் இறுதி நிமிடங்கள் சமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது பேத்தியின் அருகே வாய் விட்டு கதறி அழும் ஒரு தாத்தாவின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்து பலரைக் கண்ணீர் விடச்செய்தது. அந்த 5 வயது சிறுமி ...

மேலும்..

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்

இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், ‘Cryogenics' தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics' எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி ...

மேலும்..

பிரான்ஸ் காதல் ஜோடி இந்து முறைப்படி கோலாகல திருமணம்

பிரான்ஸ் காதல் ஜோடி இந்து முறைப்படி கோலாகல திருமணம் இந்தியாவில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியர், இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மாநிலம், விடுதலைக்குப் ...

மேலும்..

கனடா இந்து ஆலயத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமை!! உண்மையில் நடந்தது என்ன?

கனடா இந்து ஆலயத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமை!! உண்மையில் நடந்தது என்ன? ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி இருவர் கனடிய ஊடகம் ஒன்றுக்கு புகாரளித்துள்ளனர். ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் ...

மேலும்..

52 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து

52 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து: திக் திக் நிமிடங்கள் கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் அமைந்துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று உள்ளூர் ...

மேலும்..

வவுனியாவில் தேர்தல் முறைகேடு தொடர்பில் 31 முறைப்பாடுகள்

வவுனியாவில் தேர்தல் முறைகேடு தொடர்பில் 31 முறைப்பாடுகள் வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். ...

மேலும்..

தென்னிலங்கைக்கும்ரூபவ் ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு

தென்னிலங்கைக்கும்ரூபவ் ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி செயலர் இ.கதிர் தெரிவிப்பு (பழுகாமம் நிருபர்) உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும்ரூபவ் ஒட்டுக்குழுக்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் ...

மேலும்..

12 வயது சிறுமியை பாலியல் அடிமை போல நடத்திய பெற்றோர்: வாக்குமூலம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ்

12 வயது சிறுமியை பாலியல் அடிமை போல நடத்திய பெற்றோர்: வாக்குமூலம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ் ரஷ்யாவில் 12 வயதான சொந்த மகளையே பாலியல் அடிமையாக பெற்றோர் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பெற்றோர் தங்களது சொந்த மகளையே ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் எம்.பியான முதல் இந்தியர்: நெகிழ வைக்கும் பின்னணி

சுவிட்சர்லாந்தில் எம்.பியான முதல் இந்தியர்: நெகிழ வைக்கும் பின்னணி வறுமையின் காரணமாக இந்திய தாயால் சுவிட்சர்லாந்து தம்பதியிடம் தத்துக்கொடுக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டின் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 48 வயதான Niklaus-Samuel Gugger என்கிற அந்த நபர் சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முதல் இந்தியர் ...

மேலும்..

70 வயதான தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்..

70 வயதான தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்.. 70 வயதான தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை மாத்தறை – வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் ...

மேலும்..

காரைதீவில் உள்ள பாடசாலைகளில் வறுமை நிலை உள்ள 400 மாணவர்களுக்கான பாடசாலைப்பை ,அப்பியாசக்கொப்பி வழங்கும் நிகழ்வு.

காரைதீவில் உள்ள பாடசாலைகளில் வறுமை நிலை உள்ள 400 மாணவர்களுக்கான பாடசாலைப்பை ,அப்பியாசக்கொப்பி போன்றவற்றை வழங்கிவைக்கும் நிகழ்வானது 19.01.2018 அன்று காலை 8.00 மணி அளவில் ஆரம்பமாகியது. இன் நிகழ்வினை காரைதீவின் இந்து சமய விருத்திச்சங்கம் நடாத்தியது இன் நிகழ்வு காரைதீவில் ...

மேலும்..

மன்னாரில் இடம்பெறவிருந்த திருட்டுச் சம்பவம்

மன்னாரில் இடம்பெறவிருந்த திருட்டுச் சம்பவம் முறியடிப்பு! மன்னார், பாலியாறு பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். ...

மேலும்..

பெண்களை அவமதிக்கும் விளம்பர பதாகை!

பெண்களை அவமதிக்கும் விளம்பர பதாகை! பெண்களை அவமதிக்கும் வகையில் பொறிக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். ராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றப்பட வேண்டும் என ...

மேலும்..

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு தமிழர்கள்!

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு தமிழர்கள்! அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்தவீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் ...

மேலும்..

மஹிந்த காலத்தில் 4000 பில்லியன் ரூபா பிணை முறி மோசடி!

மஹிந்த காலத்தில் 4000 பில்லியன் ரூபா பிணை முறி மோசடி! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது 4000 பில்லியன் ரூபா பிணை முறி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இது ...

மேலும்..

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியின் பொது மக்களுக்கான கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு :பிரச்சினைகள் இருப்பின் என்னை அழைக்கவும்

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியின் பொது மக்களுக்கான கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு :பிரச்சினைகள் இருப்பின் என்னை அழைக்கவும் செயலாளர் என்.எம்.நௌபீஸ் அதிரடி நடவடிக்கை கிண்ணியா நகர சபையினால் கிண்ணியா பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கிண்ணியா நகர சபைக்குட்பட்ட சகல பகுதிகளும் ...

மேலும்..

கிண்ணியா ஆலங்கேணி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்) புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு........ கிண்ணியா ஆலங்கேணி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு  நேற்று (18) கிண்ணியா பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபையின் விசேட ஆணையாளரும், செயலாளருமான என். எம். நௌபீஸ்  ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுழற்சி முறையில் மகப்பேற்று நிபுனரை நியமிக்க நடவடிக்கை-சுகாதார அமைச்சர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுழற்சி முறையில் மகப்பேற்று நிபுனரை நியமிக்க நடவடிக்கை-சுகாதார அமைச்சர்.(PHOTOS) மன்னார் நிருபர்   வடமாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் இரண்டு மகப்பேற்று நிபுனர்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலைகளுடன் கலந்துரையாடி அவர்களில் ஒருவருடைய பதில் கடமையினை  சுழற்சி முறையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில் தாயரிக்கப்பட்ட வீடியோ வெளியீடு

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில் தாயரிக்கப்பட்ட வீடியோ வெளியீடு-(PHOTOS) -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில் தாயரிக்கப்பட்ட வீடியோ கட்சியின் டிரெய்லர் வீடியோ நேற்று வியாழக்கிழமை மாலை  6.30 மணியளவில் மன்னார் ஆஹாஸ் கோட்டலில் வெளியீடு செய்து ...

மேலும்..

கனரக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் கொக்கட்டிச்சோலை-மாவடிமுன்மாரியில் சம்பவம்.

கனரக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் கொக்கட்டிச்சோலை-மாவடிமுன்மாரியில் சம்பவம். (பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேச மக்கள் இன்று வியாழக்கிழமை காலை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவடிமுன்மாரி பிரதான வீதியானது மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களினால் கடுமையான பாதிப்பினை ...

மேலும்..

திருகோணமலையில் அந்த மூன்று நாட்கள் நூல் வெளியீட்டு விழா..!

திருகோணமலையில் அந்த மூன்று நாட்கள் நூல் வெளியீட்டு விழா..! ஆர்.சுபத்ரன் நிலாவெளியூர் கெஜதர்மா எமுதிய அந்த மூன்று நாட்கள் குறு நாவல் வெளியீட்டு விழா 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டன் மண்டபத்தில் கவிஞர் க. கோணேஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரம் மகாசிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு மணவர்களிற்கிடையே பேச்சுப்போட்டி

திருக்கோணேஸ்வரம் மகாசிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு மணவர்களிற்கிடையே பேச்சுப்போட்டி ஆர்.சுபத்ரன் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மகாசிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு திருகோணமலை மாணவ, மாணவியர்களுக்கிடையே பேச்சுப்போட்டியினை வழமையாக நடாத்தி வருகின்றது. எதிர்காலச் சந்ததியினரான இளம் சிறார்களிடையே ஆன்மீக நெறியினை வளர்ப்பதும், அவர்களில் இனங்காணப்படும் திறனை ஊக்குவிப்பதும் ...

மேலும்..