March 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வதேச சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி

உலக மக்களுக்கு பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை கொண்டுவருவதற்கு இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பலத்தை சர்வதேச சூரியசக்தி மாநாடு எடுத்துக்காட்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று புதுடில்லியில் ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் ...

மேலும்..

இதுவரை 186 பேஸ்புக் கணக்குகள்” : கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

மக்கள்  மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும்  ஏற்­ப­டுத்தும்  வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் ...

மேலும்..

பிரபாகரனுக்காக வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது, மனவேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரனின் மரணத்தை பார்த்த போது, “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கபூருக்கு ...

மேலும்..

பெரியகுளத்தில் மூழ்கி 5 பேர் பலி

திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த 5 பேர் பெரியகுளத்தில் வள்ளம் கவிழ்ந்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.உயிரிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் ஒரு பேருந்து சாரதியுமாகும். இன்று 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகுளத்தன் குளக்கட்டில் உள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்கச் சென்ற போது அங்கு ...

மேலும்..

ஜேர்மன் உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) அல்லலுறும் உறவுகளுக்கு உதவிடுவோம் எனும் தொனிப்பொருளில் வட கிழக்கு பகுதிகளில் செயற்பட்டுவரும் ஜேர்மன் உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு,  வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இரு குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில்  பசுக்கள் இன்று ...

மேலும்..

இணையத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடம்

உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள் உள்ளன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்..

மட்டக்களப்பு பிரதம தபால் நிலையத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதம தபால் காரியாலயத்தின் குறைபாடுகளை கண்டறிய நேரில் விஜயம் செய்து ஆராய்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தபால் நிலையத்தின் குறைபாடுகளை உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

மேலும்..

காடையர்க்குத் தெரியாது

பற்ற வைக்கின்ற பைத்தியகாரனுக்கும் தெரியாது. எரிகின்ற கடையுடன் எத்தனை மனிதர்களின் எதிர்காலமும் எதிர்பார்ப்பும் எரிகின்றது என்பது. கல்லை எறிகின்ற காவாலிக்குத் தெரியாது. கண்ணாடியுடன் சேர்த்து தன்னாட்டின் பெயரும் உடைந்து போய் உலகளவில் நொறுங்குவது. பள்ளியை உடைக்கும் மொள்ளமாரிக்குத் தெரியாது. அள்ளாஹ்வின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அட்டகாசம் செய்தவன் பட்டழிந்து போன செய்தி. வீடுடைத்து எரிக்கும் காடையனுக்குத் தெரியாது. பிறந்து வளர்ந்து பறந்து வாழ்ந்த வீடு உடைந்து போகும் போது உள்ளே எழும் வலி உடைக்கின்ற காடையனை ஒரு நாள் வதைக்கும். ஐம்பதாயிரம் தருவதாக அறிவித்தல் கொடுக்கும் அரசுக்குப் புரியாது. தருகின்ற பணம் கருகிய இடத்தின் கறுப்பைப் போக்கவும் காணாது என்று. பாட்டுக் ...

மேலும்..

கூனித்தீவு, நவரெட்ணபுரம் அருள் மிகு ஸ்ரீ படபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா..!

(எப்.முபாரக்) 2018-03-11. மூதூர் கிழக்கு - கூனித்தீவு நவரெட்ணபுரம் அருள் மிகு ஸ்ரீ படபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா 18 - 03 - 2018 ஞாயிற்றுக்கிழமை கூனித்தீவு விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி இரவு 8 .00 ...

மேலும்..

“இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்”

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது, மனவேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரனின் மரணத்தை பார்த்த போது, “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என எண்ணியதாகவும் அவர் ...

மேலும்..

தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமரைவாக இருந்தவர் விளக்கமறியலில்

எப்.முபாரக் 2018-03-11. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாற்பதாயிரம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமரைவாக இருந்த நபரை இம் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(10) உத்தரவிட்டார். திருகோணமலை,ஆனந்தபுரி,பகுதியைச் சேர்ந்த 29 ...

மேலும்..

தோணியில் சென்ற சென்ற ஐந்து பேர் பலி

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பரிப்பதற்கு தோணியில் சென்ற சென்ற ஐந்து பேர் தோணி கவிழ்ந்ததில் இன்று (11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். நிலாவெளி,02ம் வட்டாரத்தைச்சேர்ந்த ஐவர் எனவும் அதில் நான்குு சிறார்கள் அடங்குவதாகவும் பொலிஸார் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் பொருட்டு சிரமதான பணி

(க.கிஷாந்தன்) நாட்டின் சமாதானதிற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.ஆனந்தசிரி ஏற்பாட்டில்  ஹோல்புறூக் ஜும்மா பள்ளி வாசலில் 11.03.2018 அன்று காலை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ், சிங்கள,  முஸ்லீம் மற்றும் பொலிஸ்  உத்தியோகஸ்தர்கள் என 50ற்கும் மேற்பட்டவர்கள்  கலந்துகொண்டு சிரமதான  பணியில் ஈடுப்பட்டனர். இதற்கான  ஏற்பாடுகளை  பள்ளிவாசல்  மௌலவி. மொகமட் உமார் மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும்..

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்) தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கீட்டில் சீமெந்து பொதிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்தச் சீமெந்து பொதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் கைது

(க.கிஷாந்தன்) போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் அட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் 10.03.2018 அன்று அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கேரள கஞ்சா வைத்திருந்த 22 ...

மேலும்..

முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்?

“தனது மக்களுக்கு இலவசக் கல்விரூபவ் இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும் சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால் ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ...

மேலும்..

காதலியை மோசமாக பாலியல் சித்திரவதைக்கு செய்த இலங்கை இளைஞனுக்கு 12 வருட சிறைத் தண்டனை

லண்டன் - மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தண்டனை க்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார் ...

மேலும்..

அரிசி மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைவடையும் சாத்தியம்

இம்முறை பெரும் போகத்தில் மரக்கறி மற்றும் நெல் அறுவடைகள் சந்தைக்கு வருவதால் இவற்றின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைய வாய்ப்பு உள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 7 மாதங்களுக்குப் போதுமான நெல் அறுவடை தற்போது ...

மேலும்..

தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முக பரீட்சை நாளை ஆரம்பம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் ...

மேலும்..

பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை

வரும் ஜுன் 30க்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர் அமைச்சகத்தின் மந்தமான பதிவு ...

மேலும்..

வேலையில்லா பிரச்சினை தலைவிரிதாடும் போது தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் இங்கு அதிகளவு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருமளவுக்கு இளம் சமூகம் வேலையில்லா பிரச்சினையால் அதிகளவு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் கிளிநொச்சியின் பல திணைக்களங்களில் பெரும்பான்மை சமூகத்தின் இளைஞர் யுவதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் இது கண்டனத்திற்கும் கவலைக்கும் ...

மேலும்..

புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹமாயபுர மற்றும் சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாச்சிக்குடா பகுதிகளில்  புதையல்  தோண்டிய  குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை நேற்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மட்கோ,மஹமாயபுர பகுதியில்   மூன்று ...

மேலும்..

நீதிச் சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்களுக்கு கௌரவிப்பு

நீதிச் சேவையில் பொன்விழாக் காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவசாகம் ...

மேலும்..

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டஈடு

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கண்டி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டஈட்டுத்தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலின் போது , கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு ...

மேலும்..

நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதியால் முடியும் – இந்திய ஜனாதிபதி நம்பிக்கை

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் ...

மேலும்..

கல்முனை துளிர் கழகத்தின் மாபெரும் இரத்த தான முகாம்

கல்முனை துளிர் கழகத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமரத்துவம் அடைந்த கழக அங்கத்தவர் லோஷாந்த் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவாகவும் கல்முனை துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் கல்முனை இராம கிருஸ்ண மஹா ...

மேலும்..