June 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது

மைத்திரி – இரணில் அரசுடனான இணக்கப் போக்கைக் கைவிட்டு, உறவை முறித்துக் கொள்ளும் நிலைப்பாட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு வந்து விட்டது எனக் கோடி காட்டியிருக்கின்றார் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “இனியும் நாங்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் ...

மேலும்..

வவுனியா இலுப்பையடி வடிகாலில் காணப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

வவுனியா இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகால்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும் அதிக வர்த்தக நிலையங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் உள்ள வடிகாலில் கழிவுகளை ...

மேலும்..

டிசம்பரில் மாகாண சபை தேர்தல்! அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ...

மேலும்..

இதுவரையில் நான் வாக்களித்தது கிடையாது! தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

“தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இது வரையில் வாக்களிக்கவில்லை” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், நான் விரும்பினால் வாக்களிக்கலாம். எனினும், கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

காலா படத்தில் இலங்கை வேந்தன்! புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்

அண்மையில் வெளியாகிய நடிகர் ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காலா. இந்த திரைப்படத்தில் இந்துக்களின் மரபினையும், கடவுளையும் தாழ்த்துவது போலவும் இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் ...

மேலும்..

வடகொரிய ஜனாதிபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலக நாடுகளை தன்னுடைய அணு ஆயுத சோதனை மூலம் மிரட்டி வந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் திடீரென்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விடுவதாகவும் தெரிவித்தார். கிம்மின் இந்த ...

மேலும்..

மாகாவலி கங்கையில் தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

மாகாவலி கங்கையில் தவறி வீழ்ந்து வெளிநாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சைக்கிள் ஓட்டப்போட்டியின் இடையே நேபாள நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர், மகாவலி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மினிபே பாலம் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் உதயமாகும் மாபெரும் புத்தர் சிலைகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

மேலும்..

யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது!

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -14-06-2018

மேஷம் மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: இரண்டு, மூன்று ...

மேலும்..

பிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி

கதிர்காமம் கிரிவேஹெர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி தொடர்பாக பொலிஸார் முக்கியமான தகவல்களை கண்டறிந்துள்ளனர். கதிர்காமம் மகாசேனன் ஆலயத்தின் பிரதான பூசாரியே சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிவேஹெர விகாரைக்குள் இருக்கும் ஆலயம் ஒன்று ...

மேலும்..

இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்…

செய்தியாளர் :காந்தன் அம்பாறை மாவட்ட இந்து நிறுவனங்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனப் பேரணி இன்று பி.ப 5.00 மணியளவில்  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்து மக்களின் பிரதிநிதியாக ...

மேலும்..

சத்தத்தை அடக்குவதற்கே எம்.பிக்களுக்குப் பதவிகள்: மஹிந்த அணி சாடல்

கூட்டரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த சிலருக்குப் பிரதி அமைச்சுப் பதவி ...

மேலும்..

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அலவ்வ பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு பேருந்து மாஓயவுக்குள் புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச ...

மேலும்..

யாழில் பூ மழை பொழிந்த ஹெலிக்கொப்டர்

யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற நிலையில், வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு இன்று திருச்சொரூபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன்போது வானில் இருந்து ஹெலிக்கொப்டர் ...

மேலும்..

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது என்கிறார் வேலணை பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் நாவலன் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை, சூழலியலை பாதுகாப்பதற்கு அதாவது வெளிப்படையாக கூறின் குப்பை கூளங்களை அகற்றுவதற்கு ஜப்பானுக்கு சென்றுதான் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. எமது ...

மேலும்..

ஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம்

மீள்குடியேற்ற காலப்பதியான 2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மாணியத்தி்ல் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான மிகுதி பணம் செலுத்தி முடிக்கப்படாத அனைத்து உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர் ...

மேலும்..

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலங்கள் மன்னாரில் காணாமற்போன சகோதரர்களுடையவை

யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஒதுங்கிய ஆண்கள் இருவரின் சடலங்கள் சகோதரர்களுடையன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 7ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரின் சடலமே இவ்வாறு ...

மேலும்..

நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்

எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும் ...

மேலும்..

தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள்

தென்னிலங்கையில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பலந்தோட்டை, ஹுங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய காற்றினால் 20 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சேத விபரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை ...

மேலும்..

ஆடு வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கும் பேஷன் டிசைனிங் பெண் – அசத்தல் தொழிலதிபர்!

பேஷன் டிசைனிங் படிப்பில் பட்டம் பெற்ற பெண்ணொருவர் இன்று ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் பெயர் ஸ்வேதா. இன்றைய கார்ப்பரேட் உலகில் உயர் அதிகாரிகள் தரும் மன அழுத்தம் , உள் அரசியல் மற்றும் வேலைப்பளுவால் பாதிக்கப்பட்ட பலர் வேலையை ...

மேலும்..

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதை தெட்டாலும் பொன்னாக மாறுமாம்! இதில் உங்க ராசி இருக்கா?

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாகவும் அமையும் என்பது குறித்து பார்ப்போம். மேஷம் வீட்டில் குழந்தைகளுக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். குடும்ப பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ...

மேலும்..

ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. விட்டமின்களான B1, B2, B3, B9, B12, E, K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவை உள்ளது. ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் ...

மேலும்..

இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி எது? முடிவை கணிக்க இருக்கும் ரஷ்ய பூனை!

ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வருகிறது ரஷ்யா. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை பயன்படுத்துவதை போட்டியை நடத்தும் நாடுகள் வழக்கமாக ...

மேலும்..

கொழும்பில் நடிகர் அரவிந்த் சாமி மகளிடம் கதைத்த ஒருவரால் ஏற்பட்ட நிலை

இலங்கைக்கு வந்த போது தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பில் தற்பொழுது நடிகர் அரவிந்த் சாமி மனம் திறந்துள்ளார். தான் கொழும்பிற்கு குடும்பத்துடன் சுற்றலா வந்த போது, ரசிகர் ஒருவர் தனது எடையை பார்த்து கிண்டலாகப் பேசியதால் குடும்பத்தின் முன் தான் அவமானப்பட்டதாக தெரிவித்துள்ளார். நடிகர் ...

மேலும்..

எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப்பெண்

எலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து “மகாராணியின் இளம் தலைவர்” விருதை இவர் பெற்றுக் கொள்ளவுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை ...

மேலும்..

67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு! இலங்கையில் நடந்த கொடுமை

கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் ...

மேலும்..

மகிந்தவிடம் கோத்தபாய பற்றி விசாரித்த அமெரிக்க தூதுவர்

பதவிக்காலம் முடிந்து இலங்கையில் இருந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்க தூதுவர் இந்த சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்ச குறித்தும் ...

மேலும்..

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வ.ராஜ்குமாா் திருகோணமலையில் நடைபெற்ற காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளின் காணாமல் போனோரின் உறவுகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை புறக்கணித்து திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடாத்தினர். இன்று (13) காலை 9.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் ...

மேலும்..

புங்குடுதீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் ...

மேலும்..

பஸ்களுக்கு மண்ணெண்ணை பாவித்தால் கடும் நடவடிக்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்திற்கு முரணாக மண்ணெண்ணெயை பயன்படுத்தி பஸ் வண்டிகளை அல்லது கனரக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக அமுலில் உள்ள சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெயை பயன்படுத்தி ...

மேலும்..

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் புதிய வகுப்பறைக்கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருண்ணன் மாணவர்களிடம் கையளித்தார். கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வகுப்பறை கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் செல்வி கிரேஸ் தேவயாளினி தேவராஜா ...

மேலும்..

கொழும்பு நகரில் 06 இலட்சம் பேருக்கு குடிநீர் வசதி இல்லை

கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் இதற்கமைய நூறு ஆண்டுகள் ...

மேலும்..

தேரர்கள் மீது சூடு வாகனம் – கண்டுபிடிப்பு

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். UP - CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் ...

மேலும்..

தனிப்பட்ட வாகன பயன்பாடு அதிகரிப்பு

நாட்டில் தனிப்பட்ட ரீதியிலான வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளமையானது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே கூறினார். இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராவதற்கான காலம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக இதற்கு தீர்வு ...

மேலும்..

அக்கரப்பத்தனையில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீீயுினால் முற்றாக எரிந்து நாசம்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் 13.06.2018 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் ...

மேலும்..

தர்மபுரம் வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் நெருக்கடிக்குள் வைத்திய சேவை

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் தற்போது கணவன் மனைவி ஆகிய இரண்டு தாதியர்கள் மட்டுமே பணியில் இருப்பதனால் வைத்திய சேவையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதோடு கணவன் மனைவியான தாதியர்களும் பல்வேறு நெருக்கடிக்குள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரம் வைத்தியசாலை கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக ...

மேலும்..

நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை இயக்குவ தற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் த.தியாக மூர்த்தி தலமையில் சபை மண்டபத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் குறித்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது: நல்லூர் ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல்

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இப் புயல் வீசவுள்ளது. அதாவது சுமார் 18 மில்லியன் சதுர கீலோ மீற்றர்கள் வரை ...

மேலும்..

இஸ்லாமியருக்கு இந்து விவகார பிரதி அமைச்சு வழங்கியமை கண்டனத்துக்குரியது

இலங்கை தீவின் வரலாற்றில் முதன் முறையாக இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்துள்ளது இந்த நல்லாட்சியில் தான் என்பது பெரும் கவலைக்குரிய விடயம் என சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் கண்டனம் ...

மேலும்..

முக்கிய கேள்விக்கு பதில் கூற மறுத்த வடகொரிய தலைவர் கிம்

சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே 12 ஆம் திகதி நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். அணு ஆயுதத்தை கைவிட வடகொரியா ...

மேலும்..

கிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை பற்றி பேசும் போது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் கண்கலங்கியுள்ளார். அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன்(57). கூடைப்பந்தில் அதிக நாட்டமுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ...

மேலும்..

நீங்கள் பிறந்த திகதி என்ன? உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்

ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அல்லது இருக்காது என்பதற்கான பலனை ஜோதிடம் கூறுகிறது. 1, 10, 19, 28 ம் திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, ...

மேலும்..

போதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்

எமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. அவர்கள் இந்த விடயங்களில் தாங்கள் முன்னுதாரணமாக இல்லாமல் இருப்பதால், இதில் தயக்கம் காட்டுகின்றார்களோ தெரியவில்லை. அரசியலில் ...

மேலும்..

தன்னை ஆதரித்த தமிழ் மக்களை மறந்த ஜனாதிபதி!

தன்னை யார்? ஆதரித்தார்கள் என்பதை மறந்து சித்தபிரமை பிடித்தவர்கள் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 124வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ...

மேலும்..

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் சற்று முன் ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன்.அவர் ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியதாவது; வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சேவை பேரூந்துகள் சேவையில் ஈடுபடாமையினால் பயணிகள் சிரமம்

வவுனியா புதிய பேரூந்து நிலைத்தில் இருந்து உள்ளுர் சேவைகளில் இலங்கை போக்கவரத்து சேவை பேரூந்துகள் சேவையில் ஈடுபடாமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர். புதன்கிழமை நாளான இன்று அரச அலுவலகங்களில் மக்கள் சேவைக்காக வரும் நிலை காணப்பட்ட போதிலும் அரச அலுவலர்கள் பலர் ...

மேலும்..

இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்தமைக்கு கடும் கண்டனத்தையும் அரசாங்த்தின் மீது அதிருப்தியும் வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் ...

மேலும்..

கொழும்பில் நடந்த விபரீதம் – மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி

கொழும்பில் கட்டடமொன்றில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் 5வது மாடியில் இருந்து விழுந்தே உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம், பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற ...

மேலும்..

வீதிக்காக மக்கள் வீதியில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை நகர பகுதியில் பேரகொல்ல, கப்புகெதர, ஹேப்பகந்த, ஒரகட ஆகிய கிராம மக்கள், 13.06.2018 அன்று காலை 11 மணியளவில் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 09 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான ...

மேலும்..

யாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தி?

யாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தியொன்று உலவி வருவதாக மீளவும் தகவல்கள் வெளியாகியுள்ளளன. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மீளவும் மக்களை பீதியில் உறைய வைக்கும் வகையில் அமனுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பூதங்களினால் பீதி ஏற்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..

சற்று முன்னர் திருமலையில் ஆரம்பமாகியது காணாமல் போனோருக்கான மக்கள் கருத்தறியும் முதல் அமர்வு

டினேஸ், ராஜ்குமார் ஜனாதிபதி செயகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வு சற்று முன்னர் திருமலை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ...

மேலும்..

வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி! கண்ணீருடன் தந்தை வெளியிட்ட தகவல்

நாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷன் கடந்த எட்டாம் திகதி உயிரிழந்தார். தாமரை ...

மேலும்..

மன்னாரில் மேலும் நான்கு வீடுகளுக்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகம்

-மன்னார் நிருபர்- (13-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த மண்ணிலும் மனித எஎச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் மன்னாரில் மண்னை கொள்வனவு செய்த 4 ...

மேலும்..

இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்! வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன்

இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார். அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போரர்ட்டம் தொடர்கிறது

ஹற்றன் கே.சுந்தரலிங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. இந்த போராட்டம் காரணமாக மலையக தபால் சேவைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால் மக்கள் பெரும் அசொளகரியங்களை அனுபவித்து வருகின்றனர். நேற்று (11) ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 09ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 09ம் திருவிழா நேற்று (12.06.2018) செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

ஊடக அமைப்பின் இப்தார் நிகழ்வு

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றித்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று (12) பாலமுனை “கஸமாறா ரெஸ்ட்டூரண்டில்” இடம்பெற்றபோது அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருப்பதையும், அல் ஹாபிழ் என்.எம்.அப்துல் ...

மேலும்..

வவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு

வவுனியாவில் அறநெறி கொடி மாதமும் திருஞானசம்மந்தர் குருபூசை தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. தேசிய இந்து அறிநெறி கொடி மாதமும் அறிநெறி விழிப்புணர்வும் இந்து கலாசார திணைக்களத்தால் நாடு பூராகவும் மே 30 தொடக்கம் யூன் 31 வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வவுனியா ...

மேலும்..

வடக்கின் பாரிய சுகாதார துறை அபிவிருத்திக்கான சர்வதேச ஒப்பந்தம்; முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பெருமிதம்

வடக்கின் பாரிய சுகாதார துறை அபிவிருத்திக்கான சர்வதேச ஒப்பந்தம் நேற்று (12.06.2018) கொழும்பில் கைச்சாத்து மாகாண சுகாதார துறையின் சரித்திரத்தில் முக்கியமான நாள். வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் பெருமிதம். வடக்கு மாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரின் முயற்சியினால் மத்திய ...

மேலும்..

வடகொரிய -அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. இரு நாட்டு தலைவர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி ...

மேலும்..

சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய தேரோட்ட நிகழ்வு

ஈழமணித் திருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேன்நகரில் சந்திவெளியூரில் எழுந்தருளியிருக்கும் புதுப்பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவானது வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது. இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான நேற்று (12.06.2018 ) தேரோட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடம் பிடித்தால் நோய் நொடிகள் அகலும் என்பது ஐதீகம் . அந்த வகையில் ...

மேலும்..

கல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்

டினேஸ் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய செலவை குறித்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார். கல்முனை ...

மேலும்..

கோலாகலமாக ஆரம்பமாகியது காரைதீவு பத்திரகாளி அம்மனின் வருடாந்த மகோற்சபமும் தீமிதிப்பும்

( தனுஜன் ஜெயராஜ் ) வருடத்திற்கு ஒருமுறை திருக்கதவு திறக்கப்பட்டு விழாக்கோலம் காணுகின்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தீமிதிப்பு வைபவத்திற்கான முதல் நாளான இன்று 13.06.2018ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு காளி ...

மேலும்..

தென்கொரியத் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு ஆளுனரிக்கிடையில் சந்திப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் இலங்கைக்கான தென்கொரிய நாட்டு உயர்ஸ்தானிகர் லீ கியோன் (Lee Heon)ஆகிய இருவருக்குமிடையில் நேற்று(12)செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தில் வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ...

மேலும்..

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு

-மன்னார் நிருபர்- (13-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் ...

மேலும்..

பாம்பைத் தேடும் முதல்வர் விக்கி

"எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஓர் உறவு உண்டு. என்னுடைய வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது அந்நிகழ்வுக்கு முன் ஏதாவது ஒரு பாம்பு என் வீட்டிற்கு வந்து போகும்.'' - என்று கூறியுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அத்தகைய சம்பவங்களையும் வரிசைப் ...

மேலும்..

ஒரு இஷ்லாமியனை பௌத்த கலாசார அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கமுடியுமா?

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஷ்தானை நியமித்த ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பௌத்த மத விவகார அமைச்சராக ஒரு இஷ்லாமியரை நியமிப்பாரா அல்லது முஷ்லிம் விவகார அமைச்சராக ஒரு ஒரு இந்து தமிழரை நியமிக்க முடியுமா என ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து 12.06.2018 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை ...

மேலும்..