June 29, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிசை கருவிகள் அன்பளிப்பு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிசை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிச்சை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர் ...

மேலும்..

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு…

(தனுஜன் ஜெயராஜ்) கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சப நிகழ்வானது 13.06.2018 அன்று கதவு திறக்கப்பட்டு தொடர்ந்து ஒன்பது நாள் திருச் சடங்குகள் நடை பெற்றதனைத் தொடர்ந்து 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து எட்டு ...

மேலும்..

யானை முத்துக்களுடன் இரு இராணுவ அதிகாரிகள் உட்பட மூவர் கைது

மூன்று யானை முத்துக்களை விற்பனைக்கு எடுத்து சென்ற 2 இராணுவ அதிகாரிகளும், ஒரு சிவில் பாதுகாப்பு படை சிப்பாயும் தங்கொட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மதியம் தங்கொட்டுவை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி - போகாவெவ 5 இராணுவ படையணி ...

மேலும்..

மஹிந்த குடும்பத்தை பிரிக்க முயற்சிக்கும் அந்த நபர்கள் யார்? முழித்துக் கொண்ட ராஜபக்ஷ தரப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்சவை பிரிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் பிரதான தரப்பு பத்திரிகைகள் இரண்டின் ஆசிரியர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 48 வயதான நபரை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டுகச்சி - தங்கஹாவெல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய போது பாதிக்கப்பட்ட ...

மேலும்..

அதிகரித்து செல்லும் தற்கொலை மனோநிலையை தடுக்கும் வழி என்ன?

மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்களிடையே விரக்தி மனப்பாங்கும் புரிந்துணர்வு இல்லாமையும் பதட்டநிலைகளுமே தற்கொலைக்கு காரணமாக அமைகிறது இந்த நிலையை மாற்றுவதற்கு சமூகம்சார்ந்த அமைப்புக்களும் ஆலயம் சார்ந்த அமைப்புக்களும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மக்களை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை ...

மேலும்..

அமெரிக்க ஊடகவியலாளரை சந்திக்காது தவிர்த்த மகிந்த

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆய்வு கட்டுரையை வெளியிட்ட ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப், தனது கட்டுரையை எழுதுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து தனக்கு கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்த பல முறை முயற்சித்து போதும், மகிந்த சந்திப்புகளை தவிர்த்துக்கொண்டதாக ...

மேலும்..

பெண் போராளி மாலதியின் சகோதரன் மீது கொடூர தாக்குதல்!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சசிதரன் லக்ஷமணன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான பெண் போராளியான மாலதியின் சகோதரன் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு ...

மேலும்..

சிறுத்தை கொலை பத்துப்பேர் விளக்கமறியலில்

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள. அவர்கள் அனைவரும் வரும் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, ...

மேலும்..

தூக்கிட்டுக் கொண்ட 17 வயது யுவதி: ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்

மட்டக்களப்பு - வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் 17 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் யாருமில்லாத போது தனது அறையில் குறித்த யுவதி தூக்கிட்டுக் கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில், ...

மேலும்..

நாடாளுமன்றமாக மாறிய அமைச்சரின் திருமண வைபவம்!

அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் தனுஷ்க செனவிரத்ன திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பிரெட்மன் வீரகோனின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த திருமணத்தில் , இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கலந்து கொண்டனர் தனுஷ்க ...

மேலும்..

மகனுக்கு தாய் கொண்டு சென்ற உணவு! அதிர்ச்சியடைந்த பொலிஸார்

அவிசாவளை சிறையில் உள்ள மகனுக்கு தாய் கொண்டு சென்ற உணவால் பொலிஸார் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகனுக்கு கஞ்சா மற்றும் புகையிலையை இரகசியமாக வைத்து தயாரிக்கப்பட்ட பனிஸ் ஒன்றை கொண்டு சென்று்ளளார். இதன்போது அவிசாவளை சிறைச்சாலை அதிகாரிகள் கைது ...

மேலும்..

சிறுமி ரெஜினாவின் விடயத்தில் மற்றுமொரு சர்ச்சை! கதறியழுத சிறுமியின் தந்தை

வீட்டிலிருந்த சிறுமி ரெஜினாவின் பாடசாலை சீருடையொன்றையும், பாதணியொன்றையும் பொலிஸார் வாங்கிச் சென்றதாக ரெஜினாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார். யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி நேற்று காலை முதல் தொடர் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில் வைத்து ரெஜினாவின் தந்தை இந்த ...

மேலும்..

‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’யாழில்ஆர்ப்பாட்டம்

‘அரசியல்வாதிகளே மக்களை திரும்பி பாருங்கள்’ எனத் தெரிவித்து யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் அரங்கேறிய பாடசாலை மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நகரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘அரசியல்வாதிகளே ...

மேலும்..

முதல்வர் விக்கிக்கு எதிராக திரும்பிய நீதிமன்ற தீர்ப்பு: அமைச்சரவையில் திடீர் மாற்றம்! பரபரப்பில் யாழ் அரசியல் களம்!!

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை முதல்வர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இந்நிலையில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

மாண்புமிக்க இனமொன்றை அரசாங்கம் மௌனமாகக் கொல்கின்றது – பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசாங்கம் மௌனமாகக் கொலைசெய்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எங்கள் தேசத்தாய் துடிக்கத் துடிக்க ...

மேலும்..

திருமலையில் 56941 பேருக்கு வீட்டுத் தேவை

திருகோணமலையில் 56941 குடும்பங்களுக்கு வீட்டுத் தேவை காணப்படுவதுடன்; கடந்த 03 ஆண்டுகள் முன்னெடுத்த திட்டத்தின் நிதியின் மொத்தத்தை 2018ம் ஆண்டு திட்ட முன்னெடுப்புக்காக தேசிய வீடமைப்பு அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் ந.திருக்குமார் தெரிவித்தார். இன்று ...

மேலும்..

யாழ்.மாநகரசவை தீயணைப்பு சேவைக்கு புதிய கட்டடம்-திறந்து வைத்தார் முதல்வர் ஆர்னோல்ட்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு சேவைக்கு என 15 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்டால் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சால் 90 ...

மேலும்..

ரோகண விஜயவீரவை தேடி தருமாறு நீதிமன்றத்தில் மனு

காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 1989 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீர கைது ...

மேலும்..

07 வயது சிறுமி துஷ்பிரயோகம் -48 வயது நபர் கைது!

07 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கொட்டுகச்சிய, தங்கஹவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். சந்தேகநபர் வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் ...

மேலும்..

காட்டு யானை தாக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு

காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கொட்டுகச்சிய - கந்தயாய பகுதியை ...

மேலும்..

மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி- பீரிஸ் குற்றச்சாட்டு

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ...

மேலும்..

துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை

ஊர்காவற்துறை பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கெலை செய்துகொண்டுள்ளார். அராலி படை முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, உடகிரில்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ...

மேலும்..

துரிதமான நடவடிக்கைகள் மூலம் வன்முறைகளுக்கு முற்று புள்ளி.

சுழிபுரம் காட்டுப்புலம் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை சிறுமி ரெஜினா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமையை கடுமையாக கண்டித்தார் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன். அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் பாதிக்கப்பட்ட ரெஜினாவின் உறவினர்களை சந்தித்திருந்தார். பிரதேச ...

மேலும்..

மன்னாரில் சட்டவிரோதமாக கற்றாழை செடிகளை அகழ்ந்த இருவர் கைது

மன்னார் மாவட்டம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமான "நாரா பாடு" பகுதியில் சட்டவிரோதமாக கற்றாழை அகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

றெஜினா கொலையாளிக்கு அதிஉச்ச தண்டனை-இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

பாடசாலைப் பாலகி றெஜினா கொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு கொலைக் குற்றவாளிகளுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதித்துறையைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஊடக அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதுதொடர்பில் சங்கம் அனுப்பிவைத்த அறிக்கையில் மேலும் ...

மேலும்..

மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட பணம் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் வைப்பு?

சைனா ஹார்பர் (China Harbor) நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கிய 112 கோடி ரூபா பணம் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதா ...

மேலும்..

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவை புறக்கணிக்கிறது இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் புறக்கணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. தனது நாட்டுக்கு எதிரான பிரேரணையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதனால் இஸ்ரேல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து அமெரிக்கா ...

மேலும்..

கொழும்பில் 40 மாணவர்களின் கொடூர தாக்குதல் – மாணவன் ஆபத்தான நிலையில் அனுமதி

மாணவர்களின் தாக்குதல் காரணமாக கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையின் மாணவ தலைவர்கள் சிலர் உட்பட 40 மாணவர்கள் இணைந்து ...

மேலும்..

சந்தியா எக்னலிகொடவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்-சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுப்பவருமான சந்தியா சமூக ஊடகங்களில் மரணஅச்சுறுத்தல்களையும்,துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளார் என ...

மேலும்..

வடக்கில் ஆரம்ப வகுப்பு மாணவர்களை அழைத்துச் செல்ல புதிய நடைமுறை

எதிர்காலத்தில், சிறுவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில், வட மாகாணக் கல்வி அமைச்சு, பாடசாலைகளுக்கு புதிய நடைமுறையொன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக, வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுழிபுரம் மாணவி படுகொலை ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து யாழிலுள்ள மனைவிக்கு அனுப்பப்பட்ட பணம்! கணவனின் விபரீத முடிவு

வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தன் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் ...

மேலும்..

றெஜினாவின் படுகொலையை கண்டித்து வடக்கில் ஹர்த்தால்

மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை. சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குறித்த சம்பவத்திற்கு நீதி கோரியும் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே வட ...

மேலும்..

டெனீஸ்வரன் பதவி நீக்கம்-இடைக்கால தடை விதித்தது நீதிமன்று

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்ப்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று ...

மேலும்..

றெஜினாவுக்கு நீதி கோரி இன்றும் போராட்டம்

சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இன்றைய தினம் வடக்கில் முழு நிர்வாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ...

மேலும்..

கிளிநொச்சியில் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்ட முயற்சி – சூழலியலாளர்கள் கவலை

  கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பழைய வைத்தியசாலையின் மகப்பேற்றுவிடுதிக்கு (தற்போது செயற்கை அவய உற்பத்தி நிலையம் மற்றும் காகிதாதிகள் களஞ்சியம் ஆகியன தற்காலிகமாக இயங்கும் கட்டடங்களுக்கு) ...

மேலும்..

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கல்வி, சமூக, சமய, பொருளாதார மேம்பாட்டுக்காக உதவ வேண்டும்

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அபயம் தேடி மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். இவர்கள் தமது உறவுகளைப் பிரிந்தும் கொட்டும் பனியில் அல்லல்பட்டு உழைத்த பணத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வழங்க ...

மேலும்..

அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வழக்கை அடுத்த மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு ...

மேலும்..

இணைய தளங்களில் செய்தி வெளியிட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரல்

வவுனியாவில் கடந்த 25ஆம் திகதி இணைய தளங்கள் இரண்டில் ஊடகப்பணியாளர் ஒருவருக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு பரப்பி செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில், பகிரங்க மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், 26ஆம் திகதி செய்தி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களுக்கும், இணையதளங்களுக்கும் எதிராகவும் ...

மேலும்..

குழுநிலை போட்டி நிறைவு

2018ம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்து தொடரின் அனைத்து குழுநிலை போட்டிகளும் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்று இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பனாமா மற்றும் டியுனிசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ...

மேலும்..

உழவனூர் வீதி புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உழவனூர் கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு தரமற்ற கிரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு முதற்கட்டமாக கிரவல் மண் பறிக்கப்பட்டிருந்தது. ஆனால் ...

மேலும்..

சமையல் எரிவாயு விலை குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, றிஷாத் பதியுதீன், விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் குழு கூடியது. உலக சந்தையில் அமுலில் உள்ள ...

மேலும்..

சுகாதார போசாக்கு கண்காட்சியும் நலமுரசு சஞ்சிகை வெளியீடும்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில் போசாக்கு கண்காட்சியும் நலமுரசு சஞ்சிகை வெளியீடும் நேற்று (28) இடம்பெற்றது நேற்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இடம்பெற்ற இந்நிகழ்வில் நலமுரசு சஞ்சிகை வெளியீடும் போசாக்கு கண்காட்சியும் இடம் பெற்றன. ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், “அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் ...

மேலும்..

விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் ...

மேலும்..

சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

(செட்டிபாளையம் நிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.பட்டதாரிகளை உருவாக்குவதில் ஒவ்வொரு குடும்பமும் சிந்திக்கவேண்டும்.பெற்றோர்கள்  கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதனால் அக்குடும்பம் முன்னேற்றமடையும்.அதனால் அக்குடும்பத்தின் வளர்ச்சி பாரியதொரு வளர்ச்சியாக காணப்படும் என பிரதேச செயலாளர் ...

மேலும்..

தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “இந்த தேர்தலின் இறுதி முடிவுகளில் மேற்குலகம் மற்றும் ...

மேலும்..