September 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்த பேரணியில் உயிரிழந்தவர் தமிழரா? பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட போது உயிரிழந்தவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாரிய பேரணி ஒன்றினை நேற்று நடத்தியிருந்தனர். இதில் கலந்து கொண்ட ஹட்டன் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் ...

மேலும்..

மன்னாரில் தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்பு

மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்க்ப்பட்டு வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக புதிய மனித எச்சங்கள்,எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக ...

மேலும்..

சிறப்புற நடைபெற்ற நல்லூரானின் மாம்பழ திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக ...

மேலும்..

பிரபல வீரர்கள் இருவர் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கம்..!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தானின் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக சப்ராஷ் அஹமட் செயற்படுகிறார். இந்த குழாமில் சகலதுறை வீரர்களான மொஹமட் ...

மேலும்..

கிடைக்குமா விடுதலை…! எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள்…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த எழுவரின் விடுதலையை எதிர்த்து மத்திய ...

மேலும்..

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா இன்று (06) கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனரின் உதவி செயலாளர் எஸ்.இ.ஜெ.செல்வநாயகம் கலந்துகொண்டிருந்தார். அமரர்களான நல்லதம்பி பாக்கியம் ஆகியோரின் ஞாபகர்த்தமாக அவர்களின் உறவினர்களால் பத்து ...

மேலும்..

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் 72வது வருட பூர்த்தி நிகழ்வு

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருட பூர்த்தி தின நிகழ்வுகள் இன்று கட்சியின் தலைமையத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. காலை 9 மணியளவில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதன்போது, பிரதமர் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் ...

மேலும்..

அடுத்த ‘மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி’ கண்டியில்…

நேற்று நண்பகல் 12 மணி முதல் கொழும்பு நகரின் அதிகாரத்தை ஒன்றிணைந்த எதிரணி கைப்பற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த மக்கள் சக்தி ...

மேலும்..

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களுக்கு இலவச சீருடைத்துணி வழங்கிவைப்பு

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவிகள் எழுபத்தி ஐந்து பேருக்கு இலவச சீருடைத்துணிகள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்களால் இன்று காலை வழங்கி வைகப்பட்டுள்ளது இச் சீருடைகளை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் அவர்கள் ...

மேலும்..

மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர்; வகுப்பறையில் நடந்த பயங்கரம்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி மத்தியகல்லூரியில் கணித ஆசிரியராக கடமைபுரியும் ஏறாவூரை சேர்ந்த உஸைன் எனும் கணிதபாட ...

மேலும்..

புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்

விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பதுபற்றி கண்காணித்துள்ளனர். இப் புதிய தொழில்நுட்பம் Revolver (Repeated Evolution of Cancer) என அழைக்கப்படுகிறது. இங்கு புற்றுநோய்க் கலங்களில் ஏற்படும் DNA விகாரங்களின் போக்கு அறியப்பட்டு, வருங்காலத்தில் எவ்வாறான ...

மேலும்..

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க!

சிட்ரஸ் பழ வகைகளை சேர்ந்த ஆரஞ்சு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளையே கொண்டிருக்கிறது.மேலும் இவை உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் நிரம்பியுள்ளன. இத்தகைய ஆரஞ்சு ...

மேலும்..

வடக்கு ஆளுநரை சந்தித்தார் அவுஸ்ரேலிய தூதுவர்

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson இன்று (06.09.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் உருமாறவுள்ள பாரிய தொழிற்சாலை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியை சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடுசெய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு ...

மேலும்..

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா பாராளுமன்றத்தில் முக்கிய கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா west minister இல் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் committee room 12 இல் நேற்று (05/09/18) மாலை 6 மணிதொடக்கம் 9 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ...

மேலும்..

தாக்குதல், அச்சுறுத்தல் – மன்னார் வர தயக்கம் காட்டும் வைத்தியர்கள்

(மன்னார் நிருபர்) வைத்தியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களின் காரணமாக தென் பகுதியில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கடமையாற்ற வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது ...

மேலும்..

மயிலிட்டி மகா வித்தியாலயத்துக்கு விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக 30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவ ஆளுகைக்குள் இருந்த மயிலிட்டி மகா வித்தியாலயம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்காக யாழ். வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ...

மேலும்..

அக்கராயன் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில்லை- நோயாளர்கள்

கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என நோயாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அவை நிறுத்தப்பட்டுவிட்டது எனக் கவலை ...

மேலும்..

கழிப்பறைகள் பராமரிப்பு – கேள்வி கோரலில் உரிய நடைமுறைகளை பின்பற்றாத கொழும்பு மேயர்

கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க ஏழு பொது கழிப்பறைகளை பராமரிப்பதற்காக தனியார் நிறுவனமொன்றுக்கு கேள்விப்பத்திரங்களை வழங்கியபோது முறையான கேள்வி நடைமுறைகளை பின்பற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கழிப்பறைகள் உலக வங்கி உதவியுடன் கொழும்பு மாநகரசபையால் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. எஸ்.எஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் பொதுமக்கள் கழிப்பறைகளை ...

மேலும்..

உணவு விஷமானதில் 35 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதில் 35 சிறுவர்கள் வட்டவல வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வயது தொடக்கம் பத்து வயது வரையான சிறுவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு பிரத்தியேக வகுப்பை நடாத்திவருவதாகவும் நேற்றிரவும் அவ்வாறே வகுப்பு நடாத்தப்பட்டதாகவும் பின்னர் சோறும்,கோழி ...

மேலும்..

கிளிநொச்சி குழாய் வழி குடிநீர் தரமற்றது – பொது மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீர் அல்ல எனவும், ஒரு வித நிறத்துடன் காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குழாய் வழி ஊடாக தங்களது வீடுகளுக்கு விநியோகிக்கப்புடுகின்ற நீரை போத்தல்களில் பெற்று ...

மேலும்..

´மக்கள் பலம் கொழும்புக்கு´-படுதோல்வி

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எனும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு இந்நாட்டு மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என இராஜங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். பல்வேறு சலுகைகளின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு மக்களை சேர்த்துக்கொண்டதாக அவர் ...

மேலும்..

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை -முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் ...

மேலும்..

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல – இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது ...

மேலும்..

சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசாரதேரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இன்றையதினம் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அண்மையில் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஞானசாரதேரர் பின்னர் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். எனினும் இன்றையதினம் மீளவும் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிமன்ற ...

மேலும்..

அத்துமீறுகின்றது தொல்லியல் திணைக்களம்! அரசுக்கு கூட்டமைப்பு எச்சரிக்கை

"தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடங்களையும், அடையாளங்களையும் பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கும் செயலில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது. இதைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வடக்கு மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று ...

மேலும்..

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மீது தாக்குதல்-வைத்தியர்கள்  பணிப்பகிஸ்கரிப்பில் குதிப்பு

(மன்னார் நிருபர்) மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று வியாழக்கிழமை(6) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பொது ...

மேலும்..

போதிய உறுப்பினர்கள் இல்லை! – சபை நாளை காலை வரை ஒத்திவைப்பு

சபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமை காரணமாக நாடாளுமனறத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று தீர்மானித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. வாய்வழிக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பகுதி ஆரம்பமாவதற்கு முன்னர் , கூட்டு ...

மேலும்..

இன்று பரபரப்பாகும் கொழும்பு நகரம்!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டத்தையடுத்து பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் இன்று போக்குவரத்துக்கள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தல‍ைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர் முன்னெடுத்த மக்கள் ...

மேலும்..

வீதி வீதியாக விழுந்து கிடக்கும் சிங்களவர்கள்; அதிர்கிறது கொழும்பு!

இலங்கையின் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களில் எண்பதுக்கும் அதிகமானோர் குடிவெறியில் நிலைதழும்பிய நிலையில் வீதிவீதியாக விழுந்து கிடந்தமை கொழும்பில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்‌ஷ குழுவினர்க்கு ...

மேலும்..

திருகோணமலையில் அதிகாலை விவசாயிக்கு நேர்ந்த அனர்த்தம்

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.புல்மோட்டை பகுதியில், மரக்கறி தோட்டம் வைத்துள்ள இவர், இரவில் காவல் காத்துவிட்டு காலையில் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், 54 ...

மேலும்..

குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் – அமைச்சரவை அனுமதி

யாழ்.குடாநாட்டு மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் குடாநாட்டில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கைக்கு அமைவாக ...

மேலும்..

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஹங்குரங்கெத, ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியுடன் சேர்த்து அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதென்கிறார் நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரசாரம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனபல நிகழ்வில் ...

மேலும்..

சைக்கிளால் எறிந்த வர்த்தகர்; யாழில் நடந்த திகில் சம்பவம் ஒன்று!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் ...

மேலும்..

ஒக்டோபர் முதல் புதிய தரத்திலான கடித உறைகள் அறிமுகம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய தரத்திலான கடித உறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் பரிமாற்றங்களின் போது, பல்வேறு வகையிலான கடித உறைகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப புதிய தபால் உறைகளை ...

மேலும்..

ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனம்

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

கொள்கலனிலிருந்து போதை மாத்திரைகள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில், கொள்கலன் ஒன்றிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ட்ரமடோல் எனும் போதை மாத்திரைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

யாழில் இன்று காலை தந்தை மகன் உட்பட மூவருக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்குள் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6 ...

மேலும்..

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியுமா?

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா?, இல்லையா? என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

யாழில் இன்று அதிகாலை மீளவும் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா ...

மேலும்..

ரஞ்சனின் கிண்டலால் நீக்கப்பட்ட போராட்ட படங்கள்

கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தமது சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்த நேற்றைய போராட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு எதிரணியினர் நேற்று (புதன்கிழமை) நடத்திய போராட்ட புகைப்படங்களை கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசந்த ...

மேலும்..

மகிந்தவின் பேரணியில் கலந்துகொண்ட 81 பேர் வைத்தியசாலையில்; தமிழர் ஒருவர் பலி!

கூட்டு எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ...

மேலும்..

மாணவியை மோதித் தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்தியவரின் விளக்கமறில் நீடிப்பு

திருகோணமலை தம்பலகமம் கமநலசேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் சென்று கொண்டிருந்த உயர்தர மாணவியை வாகனத்தால் மோதி தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபரை வரும் 19.09.2018 வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தம்பலகமம் பொலிசார் ...

மேலும்..

விளாவட்டவானில் மாதிரி கிராமத்துக்கு அடிக்கல் நாட்டல்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (05.09.2018) மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது. இந்த மாதிரி கிராமத்தில் பதினெட்டு வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட ...

மேலும்..