October 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக, கொழும்பு நகரிற்குள் பிரவேசிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்..

பெலவத்த ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

மைத்திரி கொலை முயற்சி; வீரவன்ச மனைவியை நாடுகிறது புலனாய்வு!

இலங்கை ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர். ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

யாழில் உறங்கிக்கொண்டிருந்தவர் காலடிவரை வந்த பாம்பு! நீங்களும் இப்படிச் செய்யாதீர்கள்!

உறங்கிக்கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கூலித் தொழிலாளி ஒருவர் நேற்று இரவு வீட்டு வெளி விராந்தாவில் பாய் விரித்து உறங்கியுள்ளார். இதன்போதே நள்ளிரவு ...

மேலும்..

அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக இந்திய விமானப் பணிப்பெள் பாலியல் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரை மேற்கோள்காட்டி இன்று (புதன்கிழமை) இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ...

மேலும்..

அரசியலமைப்புப் பேரவைக்கான பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்புப் பேரவைக்கு, சிவில் சமூகத்தில் இருந்து பிரதிநிகள் இன்று (11) நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஜாவிட் யூசுப், ஜயந்த தனபால மற்றும் என். செல்வகுமரன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இவர்களின் பெயர் விபரங்கள் இன்று பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்தி ...

மேலும்..

ஜனாதிபதியுடன் பேச்சு ஒப்புக்கொண்டார் பசில்

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஏற்றுக் கொண்டதாக கூட்டு எதிரணியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் வீட்டில் நேற்று ...

மேலும்..

வாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவியொருவர் வாயில் பேனை பிடித்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். மாவனல்ல கொட்டகல பாடசாலையைச் சேர்ந்த தினுஷா பண்டார என்ற மாணவியே ...

மேலும்..

ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சத்தியலிங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்

08.10.2018ல்நடைபெற்ற வெங்கலச் செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மா.ச.உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட முன் மொழிவுகள் பலவருடங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட மீள்குடியேற்ற, குடியேற்ற கிராமங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் சேதமடைந்துள்ளமையினால் புதிதாக வரவுள்ள வீட்டுத்திட்டத்தில் இவர்களையும் உள்வாங்குதல்வேண்டும். கங்கங்களம் மயானம் ...

மேலும்..

பேஸ்புக்கில் இடம்பெற்ற மோசடி குறித்த முறைப்பாடுகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளதாக கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த குறிப்பிட்டார். கடந்த ...

மேலும்..

பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன – மகிந்த

தனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள கருத்துக்கள் பொய்யானவை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை. ...

மேலும்..

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் -பிரதமர்

சகல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எரிபொருள் விலைச்சூத்திரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் விலைச் சூத்திரத்திற்கு அப்பால் உலக எரிபொருள் ...

மேலும்..

செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா

மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா கனடாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரு் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் Delta Academy Inc,1160 BirchmountRd,u 1b Scarborough,onmip2b9 எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. சமகால வரலாற்றுப் பதிவைக்கொண்ட இந்நூல் வெளியீட்டுவிழாவில் ...

மேலும்..