January 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாண ஆளுநர் பதவிக்கு சிவில் செயற்பாட்டாளர்?

மாகாண ஆளுநர்கள் நியமனத்தில் சிவில் செயற்பாட்டாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுத்துவந்த மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட சிரத்தையுடன் செயற்பட்ட ஒருவருக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 5 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதோடு, ...

மேலும்..

வெனிசுவேலா முன்னாள் நீதிபதி அமெரிக்காவிற்கு தப்பியோட்டம்!

வெனிசுவேலா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிறிஸ்டியன் ஸேர்பா அமெரிக்காவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, எதிர்வரும் 10ஆம் திகதி தமது இரண்டாவது தவணைக்காலத்தை உத்தியோகபூர்வாக ஆரம்பிக்கவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியன் ஸேர்பா, தற்போது அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார். கடந்த ...

மேலும்..

கபோனில் ஆட்சிக்கவிழ்ப்பு: இராணுவம் அறிவிப்பு

மத்திய ஆபிரிக்க நாடான கபோனின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி குடும்பத்தின் 50 வருடகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இன்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டு தேசிய வானொலி நிலையத்தை ...

மேலும்..

அமெரிக்கா போன்று கனடாவும் விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் – இராணுவ நிபுணர்கள் பரிந்துரை!

அமெரிக்கா போன்று கனடாவும் தனக்கென்று சொந்தமான விண்வெளிப் படைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கான விண்வெளிப் படையணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் மேற்கொண்டுள்ள நிலையில் கனடாவின் இராணுவ நிபுணர்கள் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளனர். அத்துடன் அமெரிக்க ...

மேலும்..

உறுகாமம் நீர்ப்பானத் திட்டத்தில் இருந்து வாகனேரி திட்டத்தினைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் வாகனேரி மற்றும் உறுகாமத் திட்ட விவசாய அமைப்புகளினால் செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்கள காரியாலய முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. உறுகாம விவசாயத் திட்டத்தின் கீழ் உள்ள ...

மேலும்..

வட. மாகாண ஆளுநராக மீண்டும் குரேயை நியமிக்க கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த ...

மேலும்..

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் துப்பாக்கிச் சூடு – மொட்டு கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது!

கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் நபர் ...

மேலும்..

மைத்திரிக்கு மனநலக்கோளாறு தாக்கல்செய்த வழக்கு தள்ளுபடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான ...

மேலும்..

வட. மாகாண ஆளுநராக மீண்டும் குரேயை நியமிக்க கோரி யாழில். ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான ...

மேலும்..

அரசியல்வாதியிடம் பணம் பெற்ற சிலர் இனவாதத்தை தூண்டுகின்றனர் – அமைச்சர் வடிவேல் சுரேஸ்

பதுளை மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு இனவாதத்தைத் தூண்டும் சமூக சீரழிவான செயற்பாடுகளில் சிலர் ஈடுப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு கண்டி கலவரம் போன்று பசறையிலும் ...

மேலும்..

திருகோணமலையில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

திருகோணமலை சேருநுவர பகுதிலில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கரடியனாறு மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு உதவி ...

மேலும்..

கல்வியமைச்சர் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார்

வ.ராஜ்குமாா் கடந்த நல்லாட்சி அரசாங்கம் முதல் தற்போதைய ஐக்கிய தேசிய முண்ணனி அரசாங்கம் வரை பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திம் இவ்வாரம்,அடுத்த வாரம்,அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என கல்வியமைச்சர் அகில விறாஜ் காரியவசம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார். என அகில ...

மேலும்..

ஆபிரிக்காவிற்கு சென்ற கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண்ணை காணவில்லை!

கியூபெக்கைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மேற்கு ஆபிரிக்க நாடானா புர்க்கீனோ ஃபாசோவில் காணாமல் போயுள்ளார். இத்தாலியைச் சேர்நத 30 வயதுடைய ஆண் நண்பருடன் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், புர்க்கீனோ ஃபாசோ ஊடாக சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக ...

மேலும்..

யாழ்பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு நிறைவில் சிறந்த ஆய்வுகூட விரிவுரையாளராக சிவானந்தம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் விரிவுரையாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மருத்துவ பீடத்துக்கு ஆற்றிய சேவையை விதந்து கௌரவிக்கப்பட்ட விழாவில் யாழ். பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் மருத்த்துவ பீட மாணவர்களுக்கு ஆய்வுகூட தொழில்நுட்பம் தொடர்பாக விரிவுரையாற்றிய தெல்லியூர் ...

மேலும்..

கூட்டமைப்பு அமைதியாக இருக்கட்டும்! தமிழர்களுக்கு நாமே அரசியல் தீர்வு வழங்குவோம்! மஹிந்த அதிரடி அறிவிப்பு

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை ...

மேலும்..

திருகோணமலையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற சர்வதேச விமானம்! தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் இருந்து இரகசியமான முறையில் சர்வதேச விமானம் ஒன்று வெளியேறியமை தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயற்பாடு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சிலரை இலங்கைக்கு ...

மேலும்..

குவேந்திராவின் அதிரடி ஆட்டம் ! வருடத்தின் முதல் வெற்றியை ருசித்தது ஜொலிகிங்ஸ்…

(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ப.சஞ்ஜீவன் அவர்களின் அம்மம்மாவின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (06) காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புயல் எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேற்று கடுமையான காற்று வீசியுள்ளதோடு, விக்ரோரியா நகர்ப்பகுதியில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

வட மாகாண ஆளுநராக தமிழரை நியமிப்பது குறித்து ஆலோசனை

வட மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்த நிலையில் வட மாகாண ஆளுநராக மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி ...

மேலும்..

புதிய அரசமைப்பு நிறைவேற மைத்திரி – ரணில் – மஹிந்த  ஓரணியில் நிற்க வேண்டும்-சம்பந்தன் 

"நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் - பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்." - இவ்வாறு ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ஒருமித்த நாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகிய சொற்பதங்கள் குறித்து கூடுதல் கவனம் ...

மேலும்..

அரசியல் கட்சிகள் கொழும்பில் முகாம்- புதிய அரசமைப்பு உட்பட மேலும் சில விடங்கள் குறித்து இன்றும்,  நாளையும்  முக்கிய பேச்சு

நாடாளுமன்றத்தைப்  பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் ( 07) நாளையும் (08) கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளன. புத்தாண்டில் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றக்குழுக் கூட்டம் என்பதால் இதில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் கட்சி தலைமையகத்தால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..