January 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அகில இலங்கை மக்கள் செயல் கழகம் ஏற்பாட்டில்  பட்டத்திருவிழா

(டினேஸ்) கைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் செயல் கழகம் ஏற்பாடு செய்திருந்த பட்டத்திருவிழா இன்றைய தினம் 19 மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை முன்றலில் இடம்பெற்றது. இத்திருவிழாவானது கழகத்தின் செயலாளர் லோகநாதன் நிரோஜன் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் போது கைப்பொங்கள் தின உழவர் ...

மேலும்..

நகைக்கடையிலிருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – யாழில் சம்பவம்

யாழ். பிரதான வீதியில் நகைக்கடை ஒன்றினுள் புகுந்த குழுவொன்று, கடையிலிருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் அரங்கேறியுள்ளது. யாழ்.பிரதான வீதியில் நகைக்கடை ஒன்றில் நகைசெய்வதற்கு முற்பணம் வழங்கிய, வாடிக்கையாளர்கள் சிலர் நகையினைப் பெறுவதற்கு கடைக்கு ...

மேலும்..

இலங்கையின் இரண்டாவது நீண்ட வாவியை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு!

இலங்கையின் இரண்டாவது நீண்ட வாவியான மட்டக்களப்பு வாவியினை தூய்மையாக வைத்திருக்க மக்கள் முன்வரவேண்டும் என ஜப்பானை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரும் ஜெய்க்கா திட்டத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான இணைப்பாளருமான சட்டோமி வாடா வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையில் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் நடவடிக்கையில் ...

மேலும்..

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – 6 பேர் பலி – மூவர் படுகாயம்

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் சென்ற 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர ...

மேலும்..

இரவு நேரத்தில் வானிலிருந்து கொட்டும் மர்ம திரவம்! கொழும்பில் பாதிப்படையும் மக்கள்

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒருவகை திரவம் போன்று கறுப்பு மழை காணப்படுவதாக பிரதேச ...

மேலும்..

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை

(டினேஸ்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் 19 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியின் இடம் பெற்றது. இக்கையெழுத்து வேட்டையானது தமிழர் ஐக்கிய சுதந்திர ...

மேலும்..

தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் எதுவும் இல்லை: சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் எதுவும் இல்லை. உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையிலேயே அதனைப் பெற்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ...

மேலும்..

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்: செல்வம் அடைக்கலநாதன்

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியாலர்களினால் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பாக தெரிவித்த விடயம் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ...

மேலும்..

இளம் வயதில் சாய்ந்தமருது பிரஜைக்கு கிடைத்த பதவி..!

இலங்கையில் ஒவ்வொரு ஊர்களிலும் தொன்று தொட்டு வரும் பாரம்பரிய ஒரு சபையான மத்தியஸ்த சபையானது சாய்ந்தமருதிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். மக்களுக்கு மத்தியில் ஏற்படும் பினக்குகளை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றால் அது மிகையாகாது இந்த சபை ஊடாக ...

மேலும்..

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வ தொடர்புகள் இல்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன்

உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையில் நாம் அதனைப் பெற்றிருந்தோம். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமான தொடர்புகள் ஏதும் இல்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

ரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி! கண்டுபிடித்துள்ளார் பவித்திரா

ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் தமிழீழத்தை ஸ்தாபிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். மேலும், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், இதனை நிறைவேற்ற தமது தரப்பு ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் ...

மேலும்..

அமெரிக்க முகாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்: தயாசிறி ஜயசேகர

இலங்கையில் அமெரிக்க முகாமொன்று அமையபெற்றால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

சந்திரிகாவின் பதவியை பறிக்க தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் அக்கட்சியில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுதந்திரக்கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள், சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ...

மேலும்..

மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களை அவர்கள் இனங்காணுதல் வேண்டும்! ஸ்ரீநேசன் எம்.பி. தெரிவிப்பு

மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த நினைப்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கரவெட்டி எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பத்திரகாளியம்மன் ஆலய முன்றியில் இந்த நிகழ்வு நேற்று ...

மேலும்..

சுமந்திரனின் முயற்சியால் குடத்தனையில் வீடுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கும் பணி குடத்தனையில் இடம்பெற்றது. சுமந்திரனின் முயற்சியால் உருவாக்கப்படுகின்ற இந்த வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 16 ஆம் திகதி நாட்டிவைத்து, கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்த ...

மேலும்..

சமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே

சமஷ்டி குணாதிசயங்களுடன் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதற்கான எதிர்ப்பினை வெளியிடுவோம் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”இன்று நாட்டிலுள்ள அனைவரும் புதிய ...

மேலும்..

பௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் இன்று (சனிக்கிழமை) கைது ...

மேலும்..

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும்: குமார வெல்கம

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நாட்டில் நிலவுகின்ற பல பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு, நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த குமார வெல்கம இவ்வாறு ...

மேலும்..

கொழும்பிலுள்ள யாசகர்களை வெளியேற்ற நடவடிக்கை

கொழும்பு நகரப்பகுதியிலுள்ள யாசகர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வசிக்கும் மக்கள் அன்றாட பல பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனரெனவும் ...

மேலும்..

புத்தளத்தில் வெடிபொருட்கள் மீட்பு விவகாரம்: சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைக்க அனுமதி

புத்தளம்- வனாத்தவில்லு, கரடிபுவல்  பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வனாத்தவில்லு ...

மேலும்..

விமான அம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

விமான அம்புலன்ஸ் சேவையொன்றை, எதிர்காலத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வாகன நெரிசல் அதிகரித்துள்ளமையால், நோயாளர்களை விரைவாக சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் ...

மேலும்..