January 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யுகம் வானொலி, தொலைக்காட்சி கனடாவில் அங்குரார்ப்பணம்

கனடாவில் வானொலி மற்றும் கலைத்துறையில் நன்கு அறிமுகமான "கலைவேந்தன்" கணபதி ரவீந்திரன் அவர்களோடு கலைஞர் திருமதி ரூபி யோகதாசன் மற்றும் கணக்காளர் மோகன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்துளள இணைய ஊடகங்களான "யுகம்" வானொலி, "யுகம்" இணைய தொலைக்காட்சி ஆகியவற்றின் அங்குரார்ப்பண வைபவம் ...

மேலும்..

வைத்தியசாலைக் கட்டட திறப்பும், கிழக்கு மாகாண ஆளுநருக்கு கௌரவும்

பைஷல் இஸ்மாயில் 25 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டட திறப்பு விழா கடந்த 20 ஆம் திகதி கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் ...

மேலும்..

போதை விழிப்புணர்வு ஊர்வலம் மாணவர்களால் முன்னெடுப்பு

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் கல்வி அமைச்சும் இணைந்து இவ்வாரம்  தேசிய போதைப்பொருள் வாரமாக பாடசாலைகளில் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் "போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடம் கற்றுக்கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் ...

மேலும்..

விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்கள் பிரித்தானியாவில் அழிக்கப்பட்டன: சிங்கள ஊடகம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான முக்கிய ஆவணங்களை பிரித்தானியா அரசாங்கம் அழித்துள்ளதாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான 372 ஆவணங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் மோர்னிங் ஸ்டார் என்னும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டதாக குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த ...

மேலும்..

கொழும்புக்கு இன்று கொண்டுவரப்படவுள்ளன மனித எச்சங்களின் மாதிரிகள்

அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பதற்காக, மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள், பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்கமைய குறித்த மாதிரிகள் இன்று (புதன்கிழமை) முற்பகல் மன்னார் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன. அதன்பின்னர் குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான தலைவர்கள் இதன்போது நியமிக்கப்படவில்லை. இதேவேளை, ...

மேலும்..

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் 'எக்ஸைல்' (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் 'கானல் தேசம்'  (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர்  ...

மேலும்..

அராலித்துறை – குறிகட்டுவான் வீதி மாவையின் முயற்சியால் புனரமைப்பு

ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே  புனரமைக்கப்படாது காணப்படுகின்ற  அராலித்துறை ( வழுக்கையாறு ) -  குறிகாட்டுவான் இறங்குதுறை ( புங்குடுதீவு )  AB39  வீதியானது   இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  தொடர் முயற்சிகளின் காரணமாக 1100 கோடி ரூபா செலவில்  புனரமைக்கப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு  ...

மேலும்..

வலி.வடக்கில் இன்னும் 3000 ஏக்கர் இராணுவத்தின் பிடியில் – சுகிர்தன்

வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளன என்று வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவற்றையும் விடுவிக்கப்பட்டால் மீள்குடியேற்றம் முழுமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள வீடு ஒன்றை அலுவலகமாக ...

மேலும்..

தமிழரின் போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுப்பு! – கம்மன்பில கூறுகின்றார்

தமிழர்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை இப்போது சுமந்திரன் எம்.பி. முன்னெடுத்து வருகின்றார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை முதலில் இலங்கைத் ...

மேலும்..

சமஷ்டி பண்புகள் இருந்தாலே புதிய அரசமைப்புக்கு ஆதரவு – கூட்டமைப்பு தெரிவிப்பு

"புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி வரைவில் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ...

மேலும்..

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்!

யாழ். வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக் குறிக்கும் சிற்பங்கள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன. எனினும் ...

மேலும்..

ராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்: ஜே.வி.பி.

மோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்

ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் ...

மேலும்..

சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கால்பந்து ஜாம்பவான்: எத்தனை மில்லியன் அபராதம் தெரியுமா?

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புக்கொண்டுள்ளார். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2011 முதல் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றசாட்டு ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்!

நாட்டில் முதலில் எந்தத் தேர்தல் இடம்பெறும் என்பதைப் பொருத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. பிரதி அமைச்சர் நலின் பண்டார இதனை தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய ...

மேலும்..

விக்னேஸ்வரனின் சதித்திட்டம்

வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக கூறி தமிழ் மக்களுடைய நிலங்களை சிங்கள மக்களுக்கு தாரைவாக்கும் சதி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசைப்படுகிறார் என “அறம் செய்” அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் ...

மேலும்..

சேனா படைப்புழுவினால் விவசாயிகள் பாதிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேனா தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தலா ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா அதிகபட்ச தொகையாக ...

மேலும்..

கிழக்கில் வாரந்தோறும் 18 தமிழர்கள் இனமாற்றப்படுகின்றனர்; வெளியான அதிர்ச்சி தகவல்!

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களில் 18 பேர் வாரந்தோறும் இனமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்மைப்பிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ...

மேலும்..

எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை – மஹிந்த

"நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை. இதை நான் நீண்ட நாட்களுக்குப் பாவிக்கமாட்டேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஷ. இதன்போது அங்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 23-01-2019

மேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோ கத்தில்மதிக்கப்படுவீர்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். ...

மேலும்..

புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான் – சுமந்திரன்

ஹிரு தொலைக்காட்சி நேர்காணலில் சுமந்திரன் எம் பி கருத்துக்கள் - ; ஒருமித்த நாடு இல்லாவிட்டால் ஒன்றுபட்ட நாடு ! “விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அவர் எங்களுக்கு ஒரு சவால் அல்ல. புலிகளை தோல்வியடையச் செய்ய ...

மேலும்..

இரண்டாவது முறையாக ஐசிசி விருது வென்ற இலங்கை நடுவர் குமார் தர்மசேனா! குவியும் வாழ்த்து

2018ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி-யின் சிறந்த நடுவர் விருதினை இலங்கையின் குமார் தர்மசேனா 2வது முறையாக வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இலங்கையின் குமார் தர்மசேனா, ஐ.சி.சி 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதினை பெற்றுள்ளார். இவர் ...

மேலும்..

ரெலோவின் நிராகரிப்புக்கு நான் பதிலளிக்கமாட்டேன்! – சம்பந்தன் தயக்கம்

"புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் அறிக்கையை ரெலோ கட்சியினர் நிராகரித்துள்ளமை குறித்து கருத்துக்கூற நான் விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை ...

மேலும்..

அநீதி இழைக்கப்படுகிறது! நாடாளுமன்றத்தில் சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு

தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். அதேவேளை, ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் ...

மேலும்..

ரணிலின் ஒற்றையாட்சிக் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள சம்பந்தன்

சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி வரைவில் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அதனை ஆதரிப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்குள்ளேயே ...

மேலும்..

சம்மாந்துறையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

(தனுஜன் ஜெயராஜ் ) போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. பிள்ளைகளின் சுற்றுச் சூழலை மதுபானம் மற்றும் சிக்கரட் புகையிலிருந்து விடுவிப்போம் எனும் கருப் பொருளில் இன்று நடைபெற்றுள்ளது. சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலை மற்றும் ...

மேலும்..

வலி.வடக்கில் 39 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 39 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ...

மேலும்..

எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன

மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த மாதிரிகள் நாளை (புதன்கிழமை)  கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றை நாடுவதை வரவேற்கின்றார் நஸீர்!

"மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் உட்பட பலரும் தற்போது வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்தும் இந்த விடயத்தில் தேக்க நிலைமை ஏற்படும் ...

மேலும்..

பகிடிவதை: 14 மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதையில் ஈடுபட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் 14 சிரேஷ்ட மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொள்ளுபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக இணைந்த இரு மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் தாக்கிய குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது 14 மாணவர்களையும் எதிர்வரும் ...

மேலும்..

யாழ் பொது நூலகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆளுநர் – முதல்வர் நேரில் ஆராய்வு

யாழ் மாநகரசபையின் பொது நூலகத்தின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலை, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இணைந்து நேரில் கள விஜயம் ஒன்றை கடந்த வாரம் (18) மேற்கொண்டிருந்தனர்.

மேலும்..

மாநகர முதல்வருக்கும் – வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையில் உத்தியோக சந்திப்பு ஒன்று கடந்த வாரம் (18) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் யாழ் மாநகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், ...

மேலும்..

குழந்தைக்காக உணவு பெற்றவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி! பெற்றோருக்கு எச்சரிக்கை

தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பல் அங்காடியில் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப்பொருள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப் சிற்றியில் கொள்வனவு செய்யப்பட்ட சீஸ்களில் புழு முட்டை நிறைந்து காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக பயன்படுத்தும் இந்த உணவுப் பொதியில் புழு ...

மேலும்..

தமிழர் ஜனநாயகம் பெரும்பான்மை தேசியத்தின் பாசீச அடக்குமுறையாளர்களால் பலியிடப்படுகிறது

கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தின தமிழாக்கம்  நக்கீரன் அரசியில் யாப்பின் உருவாக்கத்துக்குப்  பொறுப்பாகவுள்ள இடதுசாரித் தலைவர்கள் "அரசியல் யாப்பு" பற்றி வதந்திகளைப் பரப்புபவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். இவர்கள் அரசியல்யாப்பினை உருவாக்கிற உப குழுக்களில் உறுப்புரிமை வகிக்கிறார்கள். எல்லா சமூகங்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் பாதுகாக்கும் பொருட்டு இடதுசாரிகள் ஒரு புதிய ...

மேலும்..

ஜெனிவாவிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்பதே அரசின் ஒரே குறிக்கோள் – சி.வி. சாடல்

தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல மாறாக, ஜெனிவா பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளென வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாரமொரு கேள்விக்கு பதிலளித்துவரும் அவர், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும், ஏக்கிய இராஜ்ய ...

மேலும்..

வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை ...

மேலும்..

இலங்கை இராணுவத்தினர் சிலருக்கு இரண்டு வாரங்களில் வரவுள்ள ஆபத்து!

சிறிலங்காவில் மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்தகாலத்தில், நாட்டை உறைய ...

மேலும்..

பிரியங்கவின் பிடியாணை தொடர்பில் இராணுவப் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்து!

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். பொதுக்கட்டளைச் சட்டத்தின் 5 மற்றும் 4 ஏ பிரிவுகளின்படி, பிரிகேடியர் பிரியங்க ...

மேலும்..