January 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய அரசமைப்பு’ நிறைவேறாவிடின் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்! – எச்சரிக்கின்றார் சுமந்திரன் எம்.பி

"வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்.” - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின் முன்மாதிரியான செயற்பாடு

பளை இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை தனது சொந்த பணத்தில் புனரமைப்பு செய்து வழங்கியுள்ளார் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன். பாடசாலை சமூகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளிற்கு இணங்க தவிசாளரினால் குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானம் ரூபாய் இருபத்து ஐயாயிரம் ...

மேலும்..

விக்கி எமக்கு சவால் அல்ல! – ஓர் ஆசனம்கூட அவருக்குக் கிடைக்காது என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது. அவர் எங்களுக்கு ஒரு சவால் அல்ல." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

ஐ.நா. அமர்வில் இலங்கையை இறுக்க வேண்டும் சர்வதேசம்! – பிரிட்டனிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

"இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனவே, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கடும் அழுத்தம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 24-01-2019

மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த கால சுகமான ...

மேலும்..

நான் இதற்கு இணங்குகின்றேன்! மஹிந்த இன்று அதிரடி அறிவிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு தாம் இணங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை இன்றைய தினம் வெளியிட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், நாடாளுமன்றை ...

மேலும்..

இலங்கையின் பெயரை மாற்றத் தயாராகும் சுமந்திரன் எம்.பி

இலங்கையின் தற்போதைய பெயரை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படுகின்ற நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என மாத்திரம் அழைக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைகாட்சி ...

மேலும்..

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் போதைவஸ்து விழிப்புணர்வு கருத்தரங்கு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று (23) இடம்பெற்றது. இன் நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உயர்தர மாணவர்கள் என பலரும் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி

(டினேஸ்) மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சி இன்று 23 ஆம் திகதி அக்கல்வி நிலையத்தில் அதிபர் எம்.ஏ.பரிஸ்கரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு நாள் கொண்ட இக்கண்காட்சியினை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ...

மேலும்..

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு…

அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை பிரதிஅதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் போதைவஸ்தும் மது பானமும் அற்ற புதிய ஒரு சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிபொருளில் இன்று (23) விழிப்புணர்வு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

மேலும்..

அரச தரப்பினரினரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு இணங்கவே எமது கட்சி சார்பாக விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை- கந்தசாமி இன்பராசா

(டினேஸ்) கிழக்கு மாகாணத்தின் தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று (23) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச விஜயத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். https://youtu.be/LSJahZdaCcY இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ; கடந்த 16 ஆம் திகதி ...

மேலும்..

ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல

ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு எதிரானதோ அல்ல தனிப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக அவர்களை ஏற்க மறுப்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு - செங்கலடியில் உள்ள தமிழ் ...

மேலும்..

மடு பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

மடு பிரதேச செயலகத்தின் முன்பாக அப்பகுதி மக்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மடு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை மூடி, அப்பகுதியின் பிரதேச கிராமிய அமைப்புக்கள் இன்று (புதன்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளன. மடு பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில், மன்னார் ...

மேலும்..

ஐ.நா. தீர்மானம் ஊடாக ‘புதிய அரசமைப்பு’ நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்- மஹிந்த திட்டவட்டம் 

"ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் ஊடாகவோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இலங்கைக்குள் புதிய அரசமைப்பைத் திணிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய ...

மேலும்..

1000 ரூபாய் கோரும் போராட்டம் மலையகத்தில் ஆரம்பம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டங்கள் இன்று (புதன்கிழமை) மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

சற்றுமுன் காரைதீவு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து !ஒருவர் படுகாயம்…

இன்று நண்பகல் 12 மணியளவில் காரைதீவு ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக மரம்ஏற்றி வந்த லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியமையால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் ...

மேலும்..

மைத்திரியின் நெற்றியில் சுட்டுக் கொல்லமுயன்ற பொலிஸ்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நெற்றிப்பொட்டில் சிறிலங்காப் பொலிஸார் துபாக்கியை வைத்து சுட முயன்றதாக பரபரப்பு கருத்தினை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வொன்றின்போதே மைத்திரி மேற்கண்ட கருத்தை பல வருடங்கள் கழித்து வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த மைத்திரி, கடந்த 1971ஆம் ஆண்டு ...

மேலும்..

முன்னாள் பிரதம நீதியரசரை உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்..

கோத்தபாய தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு! மகிழ்ச்சியில் ராஜபக்ஷ ரெஜிமென்ட்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய எதிர்வரும் ஒரு சில நாட்களில் கோத்தபாயவின் அமெரிக்க ...

மேலும்..

ஹுவாவி அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சி தொடரும்: அமெரிக்கா

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவின் சரணடைதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவும், கனடாவும் மீறியுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சு குற்றம் சாட்டியது. இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு பின்னர் சுமந்திரன்

தமிழர்களின் அடுத்த கட்ட போராட்டத்தை இப்போது சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வருவதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சியில் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை ...

மேலும்..

எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு

எதிர்வரும் சில தினங்களுக்கு கொள்ளுப்பிட்டிய சந்தி முதல் காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதிகள் மூடப்படவுள்ளன. அதன்படி 26,27,31,1,2, மற்றும் 3ஆம் திகதிகளில் குறித்த வீதிகள் மூடப்படவுள்ளன. இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திரதின நிகழ்வுகள் காலி முகத்திடல் மற்றும் ...

மேலும்..

கனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு

கனேடிய சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய உணவு வழிகாட்டியை, சுகாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இந்த புதிய வழிபாட்டி, கடந்த 2007ஆம் ஆண்டின் பதிப்பைவிட மிக தெளிவான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் 2019ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உணவு வழிகாட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

பட்டலந்த அறிக்கை வந்தால் ரணில் தப்பியோட வேண்டும்! – வாசுதேவவின் கருத்தால் நாடாளுமன்றில் குழப்பம்

"பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும். நாட்டை விட்டுத் தப்பியோடுவதே அவருக்கு இருக்கும் ஒரு வழிமுறை இதுதான்" என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்தால் ...

மேலும்..

ஆணைக்குழு அமைக்கப்பட்டால் 14 அமைச்சர்கள் மீது முறைப்பாடு மஹிந்த அணி எச்சரிக்கை

"தற்போதைய அரசின் ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்பட்டால் இந்த அரசில் உள்ள 14 அமைச்சர்களுக்கு எதிராக நாம் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..

ஜனாதிபதிக்கு ஆதரவளித்தமை தொடர்பில் ஹிருணிகா கவலை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தமையையிட்டு தான் கவலைக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ...

மேலும்..