January 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானர் மொஹமட் முஸம்மில்!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று(செவ்வாய்கிழமை) காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவரிடம் பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த ...

மேலும்..

மட்டுமாநகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாநகரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாநாகர சபையின் ஊழியர்கள் மூவர், நேற்று மாலை மதுபோதையில் வந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலை ...

மேலும்..

இலங்கையில் மதுப்பிரியர்களுக்கு ஒரு சோக செய்தி!

உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சகல மதுபான போத்தல்களினதும் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளமையே உள்நாட்டு மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்புக்கு ...

மேலும்..

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம்

எதிர்வரும் 16.02.2019 அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் அழைக்கின்றோம். வட மாகாணத்தை சேர்ந்த ...

மேலும்..

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் , கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வெஸ்லி உயர்தர ...

மேலும்..

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணர்களினால் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணர்களினால் பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. விபுல சாரணன் தர்மசீலன் லிசாந்தன் அவர்களின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக குறித்த பயணிகள் நிழல் குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளது. விபுலானந்தா கல்லூரி சாரணர் ஆசிரியர் எஸ்.தற்பரன் ...

மேலும்..

தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பினால் நடைபெற்ற மாபெரும் பொங்கல் நிகழ்வு

27-01-2019 நேற்று கிழக்கு இலங்கையிலே தமிழர்கள் தொன்மையை பறைசாற்றும் மா நகரான அக்கரைப்பற்றிலே அருள்பாலித்துக்கொண்டிருக்கும் திருவருள்மிகு மகா பெரியதம்பிரான் ஆலய முன்றலில் தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பினரால் தைப்பொங்கல் நிகழ்வானது தமிழர் பாரம்பரியமுறைப்படி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விலே ஆரம்ப நிகழ்வாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 29-01-2019

மேஷம் மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில்ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் ...

மேலும்..

மண்டூர் சக்தி மகா வித்தியாலத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி…

மட்டக்களப்பு பட்டிருப்பு வலய மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று திங்கட்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரி முதல்வர் திரு. எஸ். புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் வருடாந்த ...

மேலும்..

யாழில் உயிரிழந்த கர்ப்பிணி தாதி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்?

யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதிக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதி உத்தியோகஸ்தராக பணி புரியும் குலதீபன் ...

மேலும்..

சேனா படைப் புழுவினை கட்டுப்படுத்துவதற்கு காரைதீவில் விசேட வேலைத்திட்டம்

காரைதீவு பிரதேச செயலகம், கமநலசேவை மத்திய நிலையம், மாகாண மற்றும் மத்திய விவசாய விரிவாக்கல் நிலையம்,விவசாய காப்புறுதி சபை, புள்ளிவிபரவியல் திணைக்களம் இணைந்து அரசாங்க அதிபர் அவர்களின் உத்தரவின் பிரகாரம் சேனா படைப் புழுவினை கட்டுப்படுத்தும் முகமாக இன்று காரைதீவு பிரதேச ...

மேலும்..

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்டுவேன்!- சந்திரிகா சீற்றம்

"ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கொலைகார ராஜபக்ச கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தில் பல பாகங்களிலும் போராட்டம்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் 28.01.2019 அன்று நுவரெலியா, அட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புஸ்ஸலாவ, டயகம, ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிசை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் ...

மேலும்..

மீன் பாடிய கல்லடிப் பாலத்தில் ஆவி துடிக்கும் மரண ஓலங்கள்!

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லடிப் பாலம் யாராலுமே எளிதில் மறந்துவிடமுடியாத அரிய பொக்கிஷமாகும். நூறாண்டுகளை எட்டவுள்ள இந்த பாலம் தமிழர் தாயகத்தின் ஓர் வரலாற்று மரபுரிமைச் சொத்தாக மாறப்போகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை நூறு ஆண்டுகளைக் கடந்த எதுவுமே நாட்டின் மரபுரிமையாக ...

மேலும்..

கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!

கொழும்பில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளத்தின் முன்பாக பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு எதிர்புத் தெரிவித்து தொழிலாளர்கள் மற்றும் ...

மேலும்..

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு ...

மேலும்..

கிளிநொச்சியில் இந்தோனேசிய தூதுவருடன் வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு

கிளிநொச்சி வணிக வேளான் கைத் தொழில் ஒன்றிய பிரதிநிதிகள் இந்தோனேசிய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இச் சந்திப்பு இன்று (28-01-2019) காலை பத்து மணிக்குஇடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள், உள்ளிட்டவற்றை கேட்டறிந்துகொண்ட இந்தோனேசிய ...

மேலும்..

பிரதமர் ரணில் தலைமையில் கொழும்பில் கைச்சாத்தான இரகசிய ஒப்பந்தம்

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு அலரி மாளிகையில் இன்று 12 மணியளவில் இந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் ...

மேலும்..

யாழ்.வர்த்தகக் கண்காட்சி முதல்வரால் ஆரம்பிப்பு!

'வடக்கிற்கான நுழைவாயில்' யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் பங்கேற்று கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வழமை போன்று இவ்வருடமும் 10 ஆவது தடவையாக இம்மாதம் 25ஆம், 26ஆம் மற்றும் ...

மேலும்..

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் ...

மேலும்..

தேர்தலை நடத்தாவிடின் இராஜினாமா செய்வேன் – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை!

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர்10 ஆம் திகதிக்கு ...

மேலும்..

மீண்டும் அமைச்சுப் பதவி கிடைக்கும் – மஹிந்த மறைமுக கருத்து!

மீண்டும் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக தான் செயற்படுவதாக தெரிவித்த அவர் இந்நிலை நாளை மாற முடியும் என்றும் கூறினார். கொழும்பில் இன்று ...

மேலும்..

புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி ...

மேலும்..

இன்று முதல் காலநிலையில் மாற்றம்!

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ...

மேலும்..

அர்ஜுன் மகேந்திரன் விரைவில் நாடுகடத்தப்படுவார்!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாடு கடத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி சில வாரத்தில் அவர் இலங்கைக்கு அனுப்படுவார் என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். மேலும் அர்ஜுன் மகேந்திரன் மீண்டும் ...

மேலும்..

பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற கூட்டமைப்பு பேச்சு

இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் ...

மேலும்..

இலங்கை விமான சேவையின் மறுசீரமைப்பு அறிக்கை கையளிப்பு

இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, கடந்த 7ஆம் திகதி அமைக்கப்பட்ட இந்த குழுவில் ...

மேலும்..

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் – அட்டனில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் இன்று 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை எதிர்க்கின்றோம் என அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதியை மறித்து மல்லியப்பு சந்தியில் சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ...

மேலும்..

மாலி தாக்குதல் – உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினர்களின் உறவினர்களுக்கு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபங்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஏனையவர்களும் விரைவில் குணமடைய வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் ...

மேலும்..

நான் ரெடி; நீங்கள் ரெடியா? – ரணிலைப் பார்த்துக் கேட்டாராம் கோட்டா

"ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் தயாரா?" - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் பார்த்துக் கேட்டுள்ளார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் ...

மேலும்..

வாகன விபத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் காயம்!

பண்டாரகம – கெஸ்பேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேல் மாகாண சபை உறுப்பினரும்,  சிங்கள  திரைப்பட பிரபல நடிகருமான ரவிந்து யஸஸ் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த நடிகர் ரவிந்து யஸஸ் சிகிச்சைக்காக ஹொரன ...

மேலும்..

கொழும்பு – ஹற்றன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு – ஹற்றன் பிரதான வீதியை மறித்து இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு தமது ...

மேலும்..

கொழும்பு சென்றதும் அனைவரையும் பிடிக்கப் போகிறார்கள்! யாழில் மிரட்டிய மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி தெரிவித்த நகைச்சுவையான கருத்து தென்னிலங்கை ஊடகங்களில் முன்னிலை பெற்றுள்ளன. கொழும்பு சென்றதும் மருதானை ரயில் நிலையத்தில் வைத்து டிக்கட் இல்லையென அனைவரையும் பிடிக்கப் போகிறார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு- காங்கேசன்துறை ...

மேலும்..

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை – எஸ். இராமநாதன்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அதுதொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும், 1000 ரூபாய் வழங்கப்படாத கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாதென பலரும் வலியுறுத்தி ...

மேலும்..

யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் 32 வயதான குலதீபன் பிரிந்தா என்ற கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

தலைநகர் கொழும்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்! வியக்கும் உலக நாடுகள்

உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் சிறந்த சுற்றுலா நகரமாக அண்மையில் கொழும்பு தெரிவு செய்யப்பட்டது. கொழும்பில் நிர்மாணிக்கப்படும் பாரிய வீட்டுத் தொகுதிகள், கடைகள், பாரிய கட்டடங்கள் காரணமாக கொழும்பின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிர்மாணிக்கப்பட்டு ...

மேலும்..

நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்றனர் மாவை, யாழ்.முதல்வர்!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கிவைக்கப்பட்ட புதிய S13 உத்தரதேவி புகையிரதம் நேற்று (27) பயணிகளுக்கான சேவையை கொழும்பிலிருந்து யாழிற்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இப் புகையிரத சேவையை கொழும்பிலிருந்து ஆரம்பித்ததுடன் புகையிரதத்தில் யாழ் வருகை தந்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் ...

மேலும்..