February 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதாக அனந்தி குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதாக முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு இந்த விடயத்தை  ஐ.நா. வில் வெளிப்படுத்த வேண்டியது தமிழ் தலைமைகளின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ...

மேலும்..

ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்னரே இராணுவ வீரர்கள் கைது!- ஜயந்த சமரவீர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்படும் நிலைமை காணப்படுவதனால், அதனை தடுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று ...

மேலும்..

உறவுக்காக போராடிய தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்!

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடியலைந்த  தாய் ஒருவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமாகியுள்ளார். இவர், விடுதலைப்புலிகளின்  அமைப்பிலிருந்து உயிரிழந்த, சுப்பிரமணியம் கோணேஸ்வரன், லெப்.கேணல் கணபதி, கதிர்காமர் ஆகிய மூவரின் தாயார் ஆவார். கடற்புலி ...

மேலும்..

மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிக்கிறார்- ஹரிதரன்

மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் தெரிவித்துள்ளார். ஜீ.ஹரிதரனின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ...

மேலும்..

ஐ.நாவில் இம்முறை  இலங்கைக்கு ஆப்பு  மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார் 

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச   அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான சம்பந்தன் - சுமந்திரன் தலைமையிலான குழுவினர் ...

மேலும்..

இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா.வை மதிக்கின்றோம் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை தாம் மதிப்பதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவினர் கொழும்பில்  நேற்று (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..

தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு  நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா  சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், கனடாத் தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் ...

மேலும்..

நாயாறில் கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் ...

மேலும்..

சி.வி. தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண ...

மேலும்..

சி.வி.யின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து, சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனு மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

மேலும்..

சமிந்த விஜேசிறி நீதிமன்றில் முன்னிலை

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த ...

மேலும்..

மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதுஷ், அவரது சகாக்களின் இலங்கை வீடுகள் மற்றும் உறவினர்களை தேடி விசேட அதிரடிப்படை வலைவீசி வருகின்றது. மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்புக்கள் கூடுதலாக எம்பிலிபிட்டிய – உடவளவ பகுதிகளுக்கே வந்துள்ளன. அப்படி வந்த தொலைபேசி இலக்கங்களுக்கு சொந்தமான 15 ...

மேலும்..

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: யாழில் நள்ளிரவு நடந்த அனர்த்தம்!

அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் ஒன்று வெடித்ததனால் சிலரின் கண் பாதிப்புக்குள்ளாகிய சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலியிலுள்ள செட்டியார்மடம் என்ற கிராமத்தில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது. வீடு குடிபுகும் நிகழ்வொன்றின் முதல் நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ...

மேலும்..

தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்கும்! இந்தியாவில் கூறியுள்ளார் நாமல்

மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி.அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை அரசமைப்பு தொடர்பில் பலதையும்  பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன் 

"தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின மக்களின் இணக்கத்துடன்தான் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை கைவிரித்தார் பிரதமர் ரணில் 

"ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "உறுதியான அரசை உருவாக்கும் தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாக உள்ளது" என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய ...

மேலும்..

இலங்கையில் அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் கோரல்! சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி

நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கோரி இலங்கை பத்திரிகையில் வெளியாகிய ...

மேலும்..

கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள Food Studio உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. https://dai.ly/x72bkut இந்த ...

மேலும்..

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது  –  விழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை

நாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார். அட்டப்பள்ளம் விநாயகர் அறநெறி ...

மேலும்..

இலவச மருத்துவ முகாம்

வ.ராஜ்குமாா் RUN to Beat Cancer in Srilanka organization UK  மற்றும் CANE அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன்; வறிய மக்களின் நலனுக்கான மாபெரும் இலவச மருத்துவ ...

மேலும்..

குமார புரம் படுகொலை நினைவேந்தல்

வ.ராஜ்குமாா் திருகோணமலையில் 1996.02.11ம்திகதிநடந்த மோசமான படுகொலையின்  23 வது ஆண்டு நினைவு நாள் நேற்று மாலை 5.30.மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சம்பவத்தில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலிகளைச்செய்தனர். அவர்களது நினைவாக மரங்களும் நடப்பட்டன. ஆரம்பத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் மலரஞ்சலிகள் இடம்பெற்று ...

மேலும்..