February 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்? – வடக்கு ஆளுநர் விளக்கம்

  வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் நடத்தப்படவுள்ள பௌத்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கியபோதே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் வடக்கில் ...

மேலும்..

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு

  பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புல்வாமாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா ஆகியோரை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது. நாடு திரும்பிய அவர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள ...

மேலும்..

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்

  மட்டக்களப்பு – உப்போடையில் உள்ள தனியார் விடுதியில், மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கவேண்டாம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி உப்போடை மற்றும் நொச்சிமுனை பிரதேச மக்கள் இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு மதுவரித் திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கல்லடி உப்போடை நொச்சிமுனை பகுதி பாரம்பரிய ...

மேலும்..

இனவாதம் பேசுவோர் மனிதவளத்தை இனியும் வீணடிக்கக் கூடாது – நஸீர் அஹமட்

  இனவாதம் பேசுவோர், நாட்டின் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளின் பெறுமதியை அளவிடமுடியாத மனித வளத்தையும் அவர்களது எதிர்காலத்தையும் வீணடிக்க இனியும் இடம்கொடுக்கக் கூடாது என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர்  நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமனம் பெற்றுள்ள அவர் தனது கடமைகளை ...

மேலும்..

ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு! ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு

  இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது ...

மேலும்..

ரோஸ் டெய்லர் சாதனை

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களைப் பெற்ற துப்பாட்ட வீரர்களின் பட்டியலில் ரோஸ் டெய்லர் முதலிடம் பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஸ்ரீபன் ப்ளமிங் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 8,007 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே, ...

மேலும்..

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் எச்சரிக்கையா? நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. காட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா என சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஏற்றுமதி ...

மேலும்..

பௌத்த விகாரைகள் வடக்கில் வராமல் இருப்பதை அவதானிக்க வேண்டும்! ஆளுநர்

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் பௌத்த கோவில்களை கட்டும் சம்பவங்களுக்கும், வேறு மதத்தவா்களுடைய கோவில்களுக்குள் பௌத்த கோவில்கள் கட்டும் சம்பவங்களும், இனிமேல் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்வதற்காக, தாம் பௌத்த மத தலைவா்களை சந்தித்துள்ளதாகவும், வடமாகாணத்தில் பௌத்த மாநாடு நடத்துவதாகவும் ஆளுநா் சுரேன் ராகவன் ...

மேலும்..

வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இவ்விரு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதன்படி ...

மேலும்..

அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்

வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்காக வவுனியாவில் பௌத்த தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும், வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. ...

மேலும்..

ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற ...

மேலும்..

மக்கள் எதிர்பார்க்கும் உதவிகள் பட்ஜட்டில் கிடையாது -அமைச்சர் தயா கமகே தெரிவிப்பு

மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இவ்வருடத்தில் அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதத்திலான அபிவிருத்தித் திட்டங்களின் பால் ...

மேலும்..

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனிமேல் இல்லை???

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். நேற்று (20) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் உரையில் ...

மேலும்..

கனடாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி!

கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாண்ட்ரியல் பகுதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. இதன்போது, அவ்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். அருகில் வசிப்போர் தீயணைப்பு வீரர்களுக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 21-02-2019

மேஷம் மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் ...

மேலும்..

தொலைபேசியை திருடிய நபருக்கு ஏற்பட்ட நிலை

திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். மூதூர், தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மூதூர் ...

மேலும்..

தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன்

1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற  சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். கொழும்பில் 85 வது வயதில் காலமான அமரர் ...

மேலும்..

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கிளிநொச்சி அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம்!

கிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு விளைவிக்கும் நச்சுச் செடியான பார்த்தீனியம் செடியைப் பிடுங்கி அழிக்கும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில்; தீங்கு விளைவிக்கும் நச்சுச் செடியான பார்த்தீனியம் ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்!

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணேஇறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் ...

மேலும்..

தெற்கில் பொலிஸாரால் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் படுகொலை!  சடலங்கள் எரித்து அழிப்பு

காலி - ரத்கம பிரதேசத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தென் மாகாண பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் இரண்டு வர்த்தகர்களை கடத்தி கொடூரமான ...

மேலும்..

கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கல்லாறு பகுதி கும்பலினால் தாக்குதல்..!

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் இருவரும் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 ஊழியர்களும் பெரிய நீலாவணையில் வைத்து இன்று புதன்கிழமை பிற்பகல் தாக்கப்பட்டுள்ளனர். கல்முனை மாநகர சபையின் பெரிய நீலாவணை பசளை உற்பத்தி நிலையத்திற்கு திண்மக்கழிவுகளை ஏற்றிச் சென்ற ட்ரம் ட்ரக் கனரக ...

மேலும்..

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நஸீர் நியமனம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய தொழில்முறை பயிற்சி மற்றும் திறன்வளர்ச்சி அமைச்சின் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் பிரதமரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற கிராம சக்தி வார மூன்றாம் நாள் நிகழ்வு

கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராம சக்தி வாரம் 2019.02.18 தொடாக்கம் 2019.02.24 வரை அமுல்படுத்தப்படவுள்ளது. காரைதீவு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இன்று (20) மூன்றாம் நாள் நிகழ்வாக சுற்றாடல், வீட்டு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் ...

மேலும்..

குசல் மெண்டிஸ் உபாதை

இலங்கை கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் நாளை ஆரம்பமாகின்ற தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதில் நிச்சயமற்றத் தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளையப் போட்டிக்காக பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. நாளையதினம் தென்னாப்பிரிக்காவின் போர்ட் ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மஹிந்த சவால்!

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் இருப்பார்களேயானால் உடனடியாக வெளிப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கேன் பாவிப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் கூறும் பொழுதே மஹிந்த ...

மேலும்..

அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் - பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் ...

மேலும்..

யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்? தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி

கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் அதிக சுதந்திரமும் பாதுகாப்பையும் உணர முடிந்ததாக சிங்கள மாணவி ஒருவர் தெரிவித்துள்ளமை தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. https://www.facebook.com/NammaJaffnaOfficial/videos/1229707617183624/?v=1229707617183624 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரியில் பிரிவில் கல்வி கற்கும் சிங்கள மாணவி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் செவ்வி வழங்கியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தின் ...

மேலும்..

துபாயில் மதுஷூக்கு ஆயுள் தண்டனை..?

துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷூக்கு அந்நாட்டின் சட்டத்திற்கு அமைய ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுஷ் போதைப் பொருளை பயன்படுத்தியமை உட்பட பல ...

மேலும்..

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காதல் தம்பதியர்! மனங்களை கரைய வைக்கும் நிஜம்

இலங்கையில் தனது காதல் மனைவிக்காக கணவன் ஒருவரின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் ஜகத் - அனோமா காதல் தம்பதியினர் திருமண பந்தத்தில் இணைந்தனர். எனினும் சில மாதங்களில் அனோமா தசைத்திசு நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயின் ...

மேலும்..

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் யாழ் மாநகரசபைக்கு விஜயம்

உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்கள் கடந்த சனிக்கிழமை (16) யாழ் மாநகரசபைக்கு விஜயம் செய்திருந்தார். இவ் விஜயத்தின் போது யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கௌரவ அமைச்சர் அவர்களை வரவேற்றுக் ...

மேலும்..

துறை முகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை

ஹஸ்பர் ஏ ஹலீம்) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களை துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க  அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (20) புதன் கிழமை கொழும்பில் உள்ள  துறை ...

மேலும்..

பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராக் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா  மாவட்ட மக்கள் இணைந்து இன்று கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை   எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.  குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் ...

மேலும்..

அக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு தேயிலை மலை பகுதியிலிருந்து மீட்பு

க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 19.02.2019 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய யசிப் விதார்த் என்ற சிறுவன் 20.02.2019 அன்று காலை 9 மணியளவில் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு அப்பகுதி ...

மேலும்..

மறப்போம் மன்னிப்போம் என்றபேச்சு கிடையாது சர்வதேசபொறிமுறையூடாக தண்டனை அவசியம்! ரணிலின் கருத்துக்கு சம்பந்தர் தடாலடி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி ...

மேலும்..

இலங்கை பால்மாக்களில் பன்றிக் கொழுப்பா? உறுதியானது தகவல்!

பால்மாக்களில் அடங்கியுள்ள சேர்மானங்கள் விஞ்ஞான ரீதியிலான நடவடிக்கைள் மூலம் தமது அமைச்சால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மற்றும் நிபுணர்கள் மேற்கண்டவாறு கூறினர். இதன்படி, ...

மேலும்..

சூரியனால் இலங்கை முழுவதும் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தி மின் பூங்காக்கள் அமைப்பதற்கான யோசனையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்டமாக மொனராகலை உத்தேச சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவின் மூலம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் 40 மொகா வோட்ஸ் மின்சாரம் ஒன்றிணைக்கப்படவிருப்பதாக மின்சக்தி எரிசக்தி ...

மேலும்..

புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் ...

மேலும்..

போர்க்குற்றம் இடம்பெற்றமைக்குச் சாட்சி பாதிக்கப்பட்ட மக்களே – சம்பந்தன் காட்டம்

"மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சிகளாக இன்னமும் உள்ளார்கள்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையில் ...

மேலும்..

கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகச்சிறிய கமரா…

உலகின் மிகச்சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கமரா லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளதுடன் வீடியோ காட்சிகளை 4 கே 25 எப்.பி.எஸ்.வேகத்திலும் பதிவு செய்யும் முடியும் என இந்த கமராவை கண்டு பிடித்த நிறுவனமான மோகாகேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் ...

மேலும்..

மட்டு மாவட்ட வாலிபர் மாநாடு மார்ச் முதல் வாரத்தில்!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நேற்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நல்லையாவீதி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் ...

மேலும்..

கொழும்பில் சிக்கிய ஆபாச அழகிகள்!

கொழும்பின் பல பகுதிகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜகிரிய, வெலிக்கடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை! மட்டற்ற மகிழ்ச்சியில் பெண்கள்

இலங்கையில் ரயிலில் பயணம் செய்யும் பெண்ணிகளின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரயில் பயணங்களின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கை பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் ...

மேலும்..

மட்டுமாவட்டத்தில் தமிழரசின் வாலிபர் முன்னணி தெரிவு!

மட்டக்களப்புமாவட்டஇலங்கைதமிழரசுகட்சியின்வாலிபர்முன்னணிபுதியநிர்வாகதெரிவுக்கூட்டம் நேற்று 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நல்லையாவீதி இலங்கை தமிழரசுகட்சி மாவட்ட பணிமனையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பலபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டமையுடன், புதியநிர்வாக தெரிவும் ...

மேலும்..

மனித புதைகுழியின் மர்மம் – உண்மைகள் வெளியீடு?

  மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 320 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தெரிவு செய்யப்பட்ட ஆறு எழும்புக்கூடுகளின் மாதிரிகள், பரிசோதனைக்காக அமெரிக்காவின் ...

மேலும்..

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலர் திலக் கொல்லுரே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அஷோக்க விஜயதிலக உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ...

மேலும்..

அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளை சொந்த நிதியில் மீட்டார் சிறீதரன் எம்.பி.!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளை தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காப்பாற்றியுள்ளார். பச்சிலைப்பள்ளி அரசர்கேணி கிராம அலுவலர் பிரிவில் உள்ள செந்தில் நகர் கிராமத்தில் காணிமறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில்  43 ...

மேலும்..