March 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எலும்புக்கூட்டை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில்  மீட்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூட்டை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு நேற்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூட்டை பகுப்பாய்வுக்காக ...

மேலும்..

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகள் சேவையில்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளுடன் இலங்கை விமான சேவை சர்வதேச சேவையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் இன்று கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு, அங்கிருந்து மீண்டும் கொழும்பிற்கு இலங்கை விமான சேவை முதல் பெண்கள் குழுவுடன் விமானத்தை இயக்குகின்றது. அந்தவகையில் முதலாவதாக பெண்கள் குழுவுடன் ...

மேலும்..

வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவிவரும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ...

மேலும்..

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை வெளியீடு?

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ...

மேலும்..

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஹரிஸ் தயார்?

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் பதவி விலக தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி எச்.எம்.எம்.ஹரிஸ் பதவியேற்றிருந்தார். இராஜாங்க அமைச்சராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்  தனது பதவியை ...

மேலும்..

ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு ...

மேலும்..

பெண்களின் வினைத்திறனான பயணத்திற்கு உதவ உறுதி பூணுவோம்: பிரதமர்

சமூகத்துக்கு பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க செயற்பாட்டை பாராட்டி அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

இலங்கையை வழிநடத்தவேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு! அந்நாட்டு தூதுவரிடம் சி.வி.கே. இடித்துரைப்பு

ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலில் அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை தானும் அனுசரணைப் பணி வகுத்து நிறைவேற்றிய 30/01 மற்றும் 34/01 இலக்கத் தீர்மானங்களில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை கிஞ்சித்தேனும் நிறைவுசெய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில் இலங்கை இம்முறை புதிய பிரேரணைக்கு அனுசரணைப்பணி வழங்காமல் ஒதுங்குவது மட்டுமன்றி, ...

மேலும்..

அமெரிக்க உயர்ஸ்தானிகர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா ஸ்ரெப்லிக்ஸ் இற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், ஈஸ்வரபாதம் ...

மேலும்..

வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க துாதுவா்

வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமென இலங்கைக்கான அமெரிக்க துாதுவா் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு ...

மேலும்..

பெண்களும் சிகரத்தை அடைய முடியுமென்பதை தற்போது நிரூபித்துள்ளார்கள்: ஜனாதிபதி

சமூகத்தில் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியுமென்பதை நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகளில் மூலம் நிரூபித்திருக்கின்றாள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

ஐ.தே.க அரசை வீழ்த்த மஹிந்த தலைமையில் மக்கள் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது மக்கள் சந்திப்பு கண்டியில் நடைபெறவுள்ளது. ‘பொறுத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. கண்டி பிரதான சந்தைக்கு முன்பாக பகல் 2 ...

மேலும்..

வவுனியாவில் பரபரப்பு! 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 ...

மேலும்..

சற்று முன்னர் கொழும்பில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சீன பிரஜைகள் மூவரே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு போதனா ...

மேலும்..

எனது ஆளுநர் காலத்தில் தமது சொந்த இடங்களிலேயே அரச அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணத்தில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட 12 தொழிநுட்ப உதவியாளர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை நிரப்பும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்ற 12பேருக்கான நியமனங்கள் ...

மேலும்..

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் நிறுவனத்தின் மாவட்ட செயற்பாட்டாளர் பீ. சர்மிளா தலைமையில் இன்று 06ஆம் திகதி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 08-03-2019

மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் ...

மேலும்..

இந்துக்களை இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட கதி!

இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு காணொளி மூலமாக செய்தி ...

மேலும்..

கிழக்கு கரையோரச்சமர்! விபுலாநந்தா Vs உவெஸ்லி கிரிக்கட்; 12ல் காரைதீவில் பெருஞ்சமர்; அனுசரணை டெலிகொம்

“கிழக்கு கரையோரச்சமர்” ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH) எதிர்வரும் 12ம் திகதி காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே வரலாற்றில் முதற்றடவையாக இப்போட்டி நடைபெறவுள்ளது. அதனையொட்டிய ஊடகவியலாளர் ...

மேலும்..

சட்டவிரோத மதுபானம் குறித்து தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு மூன்று தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் மா அதிபரினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல் அறிந்தோர் 0113024820, 0113024848, 0113024850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வடக்கிற்கான ஒருங்கிணைப்பாளராக அங்கஜன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய ரீதியிலான செயற்திட்டங்களை வடக்கில் செயற்படுத்துவதற்கான பிரதான ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரதான செயற்திட்டங்கள் யாழ்ப்பாணம் ...

மேலும்..

அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி விட்டது: தயாசிறி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி விட்டதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறியிருந்த போதிலும், சமர்ப்பிக்க்பபட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணத்திற்கு நிதி எதுவும் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் வேலணை கிளை நிர்வாகிகள் தெரிவு!

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வேலணைக்கிளைக்கூட்டம் யாழ் பல்கலைக்கழகவிரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தலைமையில் வேலணை தந்தை செல்வநாயகம் வீதியிலுள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் இல்லத்தில்நடைபெற்றது. இதில் வேலணைக்கிளைநிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவரும் பொருளாளருமான பெ.கனகசபாபதி புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்துவைத்தார். இந்தக் கூட்டத்தில் வலி.மேற்கு ...

மேலும்..

வேலணை அபிவிருத்திக்கு கம்பெரலியா ஊடாக சிறிதரனால் ஒரு கோடியே 95 வட்சம் ரூபா!

வேலணை பிரதேச அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாவை கம்பெரலியா திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் ஊடாக ...

மேலும்..