March 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை – சரத் அமுனுகம

இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு முன்புபோல சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு கடன்களை சீனா துரிதமாக வழங்கியது. தற்போது, ...

மேலும்..

மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். புதிய காத்தான்குடி பதுரியா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியை அண்மித்து வசிக்கும் ஒரு ...

மேலும்..

சுற்றுலா மற்றும் பௌத்த நடவடிக்கைக்காக விஜயம் செய்பவர்களுக்கு இலவச விசா திட்டம்

சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில் பல நாடுகளுக்கான விசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். கடுவெலயில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

சிகிச்சை பெற்றுவந்த போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். பொலனறுவையைச் சேர்ந்த 51 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ...

மேலும்..

அம்பாறையில் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் முதற்கட்ட வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது. அத்தோடு பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் ...

மேலும்..

ஒருபகுதியில் கடும் வெப்பம் – மறுபகுதி இடியுடன் கூடிய மழை: வானிலை எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என ...

மேலும்..

ஐ.தே.மு. வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – பெயர் குறிப்பிட மனோ மறுப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. எனினும் தற்போது அந்த வேட்பாளரின் பெயரை வெளியிடமுடியாது என்றும் அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கையில் றோம் சட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது! வரவேற்கத்தக்கது என்கிறார் சுமந்திரன்

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 34.01 என்கின்ற பகுதியிலே பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. முடிவுரையாகப் பல விடயங்களை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம். மனித உரிமைகள் ...

மேலும்..

பதுளை தோட்ட பகுதியில் 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்…

(க.கிஷாந்தன்) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 09.03.2019 அன்று சனிக்கிழமை காலை பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தில் 50 வீடுகளும், தெல்பெத்த தோட்டத்தில் 50 வீடுகளும் அடங்களாக 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் ...

மேலும்..

மாந்தை மேற்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மாந்தை மேற்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக ...

மேலும்..

போர்க்குற்றவாளிகள் தப்பிக்க இடமளியோம்! – சம்பந்தன்

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எமது நாட்டு விடயங்களை நாமே பார்த்துக்கொள்வோம். இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை இதற்கு ...

மேலும்..

சர்வதேச மொழி சரியாக கற்பிக்கப்படுவதில்லை – சுமந்திரன்

சர்வதேச மொழியான ஆங்கிலத்தை பல பாடசாலையில் முறையாக கற்பிப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ...

மேலும்..

தபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டம்

தபால் மூலமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க எதிர்வரும் காலத்தில் விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, தபால் பரிமாற்றத்தினூடாக ...

மேலும்..

எனது ஜந்து பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலீஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலையாகவுள்ளது என்கின்றார் அஜந்தனின் மனைவி கே. செல்வராணி

(டினேஸ்) அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியா நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் சந்தேகநபர் என தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் ...

மேலும்..

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் வெடித்தது மோதல்! – கண்டிப் பேரணியைப் புறக்கணித்தது சுதந்திரக் கட்சி

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று (8) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே இந்தப் பேரணியை நடத்தவுள்ளது ...

மேலும்..

காவியநாயகிகள் வாழ்ந்த வீரம் செறிந்த மண்ணில் நின்று பெண் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்றோம்: சட்டத்தரணி விஜயராணி!

எமது இனமானம் காத்த காவிய நாயகிகள் வாழ்ந்த வீரம் செறிந்த இம்மண்ணில் நின்று பெண் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றோம். பெண்களுக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ் தேசிய பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு ...

மேலும்..

மூளாயில் வீட்டுத்திட்டம் கையளிப்பில் சரவணபவன் எம்.பியும் பங்கேற்றார்!

யாழ்.மாவட்டத்தில் 176 ஆவது மாதிரிக் கிராமம் மூளாயில் அமைக்கப்பட்டுபொன்னொளி கிராமம் என்ற பெயரில் வீடுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாசா கலந்துகொண்டமையுடன் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய ...

மேலும்..

போதைக்கெதிரான இயக்கத்தின் மகளிர் தினம் பருத்தித்துறையில்! – பிரதம அதிதி சுமந்திரன்

மதுபோதைக்கு எதிரான இயக்கம் கிராமக்கோட்டுச் சந்தி, பருத்தித்துறையில் உள்ள எஸ்.எஸ். மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்ட நிகழ்வுகளை நடத்தவுள்ளதுடன், சமூகத்துக்குத் தலைமை வகிக்கும் பெண்களைக் கௌரவிக்கவும் உள்ளது. வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் மதுபோதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவருமான ச.சுகிர்தனின் தலைமையில் ...

மேலும்..

மின்சார சபையின் கல்முனை பிராந்திய காரியாலயம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைப்பு, ஹரீஸ் விழாவுக்கு அழைக்கப்படவில்லை.!

இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் ...

மேலும்..

பெண்கள் வீரத்தை உலகுக்குணர்த்திய உண்ணதத் தலைவர் வே.பிரபாகரன்! மகளிர் தின உரையில் சிறீதரன் புகழாரம்

பெண்கள் விடுதலை, பெண்கள் தலைமைத்துவம், பெண்கள் ஒழுக்கம், பெண்கள் பண்பாடு அத்தனையும்கொண்ட ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக அரங்கில் பறைசாற்றிய ஓர் ஒப்புயர்வற்ற தலைவர் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். அவரின் வழிநடத்தலின்கீழ் வழிவந்தவர்கள் நாங்கள். - ...

மேலும்..

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர்  மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று  நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு வந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர்  மரியன் ஹகென் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு

சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் ...

மேலும்..

பிசுபிசுத்துப் போன மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரியும் வரவில்லை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே இந்தப் பேரணியை ...

மேலும்..

பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் விசாரணை

அம்பலங்கொட பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருத்து முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டடிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் ...

மேலும்..

ஐ.தே.க.வுடன் கைகோர்த்தமை தவறென ஜனாதிபதி உணர்ந்துவிட்டார்: மஹிந்த!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினரின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

மேலும்..

ஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம்

சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜெனீவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நா. வின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே, இலங்கை ...

மேலும்..

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 222 வாகன சாரதிகள் கைது

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 222 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் ...

மேலும்..

மட்டக்களப்பில் ‘கிழக்கினை மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் முன்னெடுப்பு!

கிழக்கினை மீட்போம் என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு விஜயா திரையரங்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) மாலைபேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடி சந்தியை வந்தடைந்து அரசடி சந்தியில் உள்ள ...

மேலும்..

தேர்தலில் வெற்றிபெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை: கோட்டாபய!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் ...

மேலும்..

படைப்புழுக்களின் தாக்கம் – முதல் கட்ட நட்டஈடு அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பம்

படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான முதல் கட்ட நட்டஈடு அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு வழங்கப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட 307பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் ...

மேலும்..

தொடரும் வெப்பமான காலநிலை – சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவிவரும் அதீத வெப்பநிலை காரணமாக ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது. இதன்பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய மிருதுவான ஆடைகளை அணியுமாறு தெரிவித்துள்ளது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் ...

மேலும்..