April 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மிகவும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இதன்படி வடமேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை , ...

மேலும்..

யாழில் திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர், மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும்! – செல்வம் எம்.பி. வலியுறுத்து

உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ...

மேலும்..

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவருக்கும் – யாழ் மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எச்.ஈ. எரிக் லவற்றூஸ் (H.E. Eric LAVERTU’s) அவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று (2019.04.01) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்பில் ...

மேலும்..

கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டத்தில் முதலிடம்

அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின்-2018 பெறுபேறுகளின் படி . கல்முனை மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டதின் பெறுபேறுகள் அடிப்படையில் முதலிடம் பெற்று கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது இதன் அடிப்படையில் 17பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 ...

மேலும்..

மட்டு. கண்ணகிபுரத்தில் கொடூரம்; குடும்பஸ்தர் எரித்துப் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பெற்றோல் ஊத்தி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்ற குடும்பஸ்தரே நேற்று திங்கட்கிழமை மாலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரைப் பெற்றோல் ஊத்திப் படுகொலை செய்தார் என்ற ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 02-04-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட் டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் ...

மேலும்..

சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

(அப்துல் சலாம் யாசீம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அலுவலகம் மட்டக்களப்பு ஊரனி சதுக்கத்தில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் இடம் பெற்ற வைபவத்தில் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜயசிறீ ஜயசேகர பிரதம அதிதியாக ...

மேலும்..

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற கௌரவ ஆளுநர் அவர்கள், ...

மேலும்..

போதைப் பொருளுக்கு எதிராக “சத்தியப்பிரமானம்” செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

எதிர் வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய ...

மேலும்..

பலஸ்தீன் தூதுவர் கல்முனைக்கு விஜயம்- பலஸ்தீன் புனித பூமி தொடர்பில் உரை

பலஸ்தீன் தூதுவர் பலஸ்தீன் புனித பூமி தொடர்பில் கல்முனை மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இன்றைய தினம்(1) மதியம் கல்முனை பசார் பள்ளிவாசலுக்கு சென்ற அவர் ளுஹர் தொழுகையின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பலஸ்தீன் புனித பூமி தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கி ஆதரவு ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் களத்தில் சங்கக்கார? என்ன கூறுகின்றார் அவர்

தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்பது அருமையான கற்பனை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் ...

மேலும்..

நீரிலிருந்து வெளிவந்த பௌத்த தூபி! படையெடுக்கும் மக்கள் …

அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வேட்பாளரைக் களமிறக்கத் தயாராகிறது?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவுக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ...

மேலும்..

வரவு – செலவு திட்டத்தை தோற்கடிப்போம் – ஜே.வி.பி. உறுதி

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் பூண்டுலோயாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி.யின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க இதனை ...

மேலும்..

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (திங்கட்கிழமை) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம்                                            ...

மேலும்..

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

(க.கிஷாந்தன்) நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் 01.04.2019 அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. நுவரெலியா மாநகர சபை முதல்வர் ...

மேலும்..

நீதிக்கட்டமைப்பில் மாற்றம் வேண்டும் – திலக் மாரப்பன வலியுறுத்து

குற்றங்களை துரிதமாக விசாரணைக்குட்படுத்தும் வகையில், நீதிக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “குற்றவாளிகளுக்கு எதிராக நீதி ...

மேலும்..

விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

மஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ...

மேலும்..

சிறிமா திசாநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

முன்னாள் அமைச்சர் அமரர் காமினி திசாநாயக்கவின் பாரியார் காலஞ்சென்ற சிறிமா திசாநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(திங்கட்கிழமை) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு ...

மேலும்..

ஜெனீவா பரிந்துரைகளை இலங்கை நிராகரித்தால் மாற்று தீர்வு என்ன? – ஐ.நா. கேள்வி

ஜெனீவா பிரேரணை பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்குமாக இருந்தால், அவற்றுக்கு பதிலாக முன்வைக்கவுள்ள மாற்று பொறிமுறைகள் என்ன என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கேள்வியெழுப்பியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் சட்ட சமத்துவ மற்றும் பாரபட்சத்தை தகர்க்கும் பிரிவின் பிரதானி மோனா சிஷ்மாவி ...

மேலும்..

மரண தண்டனை குற்றவாளிகளின் விபரம் – ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்

மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார். யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ...

மேலும்..

அரிசி வகைகளின் விலையில் மாற்றம்

அதிகளவில் நெல்லுற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் முதல் அரிசி வகைகளின் விலை குறைவடைந்திருந்தது. நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிகளின் விலை கிலோ ஒன்றிற்கு 90 ரூபாய் வரையில் குறைவடைந்திருந்தது. இந்தநிலையில் ஏனைய அரிசி வகைகளின் விலைகள் 10 ரூபாயினால் குறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய எதிர்வரும் ...

மேலும்..

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை அமுல்!

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, ...

மேலும்..

கலப்பு நீதிமன்ற விசாரணை அரசியலமைப்புக்கு முரணானது – ரவூப் ஹக்கீம்

வெளிநாட்டு நீதிபதிகளைக்கொண்டு இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்தோடு உள்நாட்டு பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் ...

மேலும்..

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த ...

மேலும்..

சட்டத்திற்கு முரணாகவே அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

சட்டத்திற்கு முரணாகவே தமிழ் அரசியல் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் ...

மேலும்..

குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

குளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள் சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர்பானங்களால் ...

மேலும்..

அமெரிக்கா இலங்கையில் நிரந்தர இராணுவத்தளம்? அமெரிக்க தூதுவரின் அதிரடி அறிவிப்பு!

இலங்கையுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கையில் நிரந்தரமான இராணுவத்தளம் அமைக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையென அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் அமெரிக்கா இலங்கையில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க திட்டமிடுவதாக ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

மானிப்பாய் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுவில் பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 21 வயதுடைய குறித்த இளைஞர் கைது செயயப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர ...

மேலும்..

ஐ.தே.கவுடன் இணைய மாட்டோம் அடம்பிடிக்கும் சு.கவின் முக்கியஸ்தர்கள்!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பதுளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்றை ...

மேலும்..

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் ...

மேலும்..

மாகாண சபைத்தேர்தல் – நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்க்கும் மஹிந்த!

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டத்திட்டங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்றை எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலை அவசரமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் ...

மேலும்..

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் பரவி தீ கட்டுப்பாட்டிற்குள்!

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது. தீயணைப்பு பிரிவின் ...

மேலும்..

நீரிலிருந்து வெளிவந்த புத்தர் சிலை – மக்கள் படையெடுப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனை பார்வையிடுவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்த ...

மேலும்..

வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்பு – ஆய்வில் தகவல்!

வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண நீர்பாசன திணைக்களம் மற்றும் பிராந்திய நீர்வழங்கல் மற்றும் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டம் – ஜனாதிபதி தலைமையில் இறுதி தீர்மானம்?

வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது ...

மேலும்..

போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் திகதி முடிவாகிவிட்டது – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பெரும் உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டக் களத்தில் இறங்கியமை எதிர்காலச் சந்ததியினருக்காக நல்லதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே  அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவேன் - இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான சட்டதிட்டங்களை ...

மேலும்..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் யாழ். முதல்வருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் யாழ். மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் யாழ். மாநகர சபையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக ...

மேலும்..

தமிழர் மீது அதிக அக்கறை புலிகளுக்கு மட்டுமே உண்டு!

தமிழ் அரசியல் தலைவர்களைவிட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் ...

மேலும்..

நிறைவேற்று அதிகார முறையை இரத்துசெய்யுமாறு வலியுறுத்தி ஜே.வி.பி. போராட்டம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துசெய்யுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் பூண்டுலோயாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட ...

மேலும்..

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூறி தப்பிக்க வேண்டாம் – செல்வம்

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே ...

மேலும்..

நிலைமாறு கால நீதியில் எங்கள் குரல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் ஏங்கே இருக்கின்றார்கள் என்று ஒவ்வொரு தாய்மாரும்  உறவுகளும் ஏங்கித் தவிக்கின்றார்கள் இன்னும் அதற்கு அரசாங்கத்தால் சரியான பதில் வழங்கப்படாமலுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கம் தெரிவித்தார் விழுது ஆற்றல் ...

மேலும்..

2020ஆம் ஆண்டுக்குள் வீடமைப்பு திட்டங்கள் பூர்த்தியாகும் – விஜயகலா உறுதி

2020ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வின்போதே அவர் ...

மேலும்..

கூட்டமைப்பை அவசரமாக சந்திக்கிறார் ரணில்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ...

மேலும்..

இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம் ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில் 31.03.2019  அன்று மாலை பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு  ...

மேலும்..

வேகமாக அழிவடைந்து செல்லும் நிலையில் சிங்கள இனம்

சிங்கள இனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜகீய பண்டித தெரிபெஹா மேதாலங்கார தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பு அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் அண்மையில் நடைபெற்ற பௌத்த உரிமை ஆணை குழுவில் சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள ...

மேலும்..

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இணங்கும் வேட்பாளருக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையைத் தமிழர்கள் கோருகின்றனர் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ...

மேலும்..

கடும் வறட்சியினால் 56 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாடளவிய ரீதியில் நிலவி வரும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ...

மேலும்..

கோட்டாவை வீழ்த்துவது ஐ.தே.க.விற்கு சவால் இல்லை – சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கோட்டாபய ராஜபக்ஷவை வீழ்த்துவதெல்லாம் ஒரு சவாலே இல்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சிறப்பான ...

மேலும்..

சாதாரண தர பெறுபேற்றின் உத்தியோகபூர்வ சான்றிதழை இன்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்  சான்றிதழொன்றுக்கு 600 ...

மேலும்..

இலங்கையில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி

இலங்கையில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 3.5 மில்லியன் டொலர் ரூபாயை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஆட்கடத்தல் ...

மேலும்..

சிறுவனை கொலை செய்ய முயற்சி – யாழில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் சிறுவனை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தெய்வாதீனமாக சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவனது குடும்பத்தினர் கட்டைக்காடு தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். வழிபாடுகளின் நிறைவில் சிறுவனை தவிர அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவன் ...

மேலும்..

ஏற்றுமதியை இலக்காக கொண்டு இஞ்சி செய்கை விஸ்தரிப்பு

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு  அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இஞ்சி செய்கையை விஸ்தரிப்பதற்கு  வட மத்திய மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது முதல் கட்டத்தின் கீழ்  100 ஏக்கர் நிலப்பரப்பில் இஞ்சி செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ...

மேலும்..

ஏறாவூரில் திடீர் தீ பரவல் – வீடு தீக்கிரை

மட்டக்களப்பு – ஏறாவூரில் ஏற்பட்ட திடீர் தீ பரவலில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் வீடும் அதன் உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர மத்தி முனைவளவு வீதியை அண்மித்துள்ள வீடொன்றே ...

மேலும்..

யுக்ரேன் ஜனாதிபதித் தேர்தலில் நகைச்சுவை நடிகர் முன்னிலையில்

யுக்ரேன் ஜனாதிபதித் தேர்தலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் விலாடிமிர் ஸ்லென்ஸிகி முன்னிலை பெற்றுள்ளார்  சமகால ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 39 வேட்பாளர்களை பின்தள்ளி அவர் முன்னிலையிலுள்ளார் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இம்முறை யுக்ரேன் ...

மேலும்..

பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் – உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்

2019 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை உணவு பாதுகாப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில் ...

மேலும்..

சுப்பர் கிங்ஸின் அபார வெற்றி – மண்டியிட்ட ராஜஸ்தான்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்களுக்கு ...

மேலும்..

காற்றுடன் சங்கமமாகும் கொக்கேய்ன் – பகிரங்கமாக இன்று ஜனாதிபதி முன்னிலையில் எரிக்கப்படவுள்ளது

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிரேமிலும் அதிக கொக்கேய்ன் இன்று ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்கானிப்பின் கீழ் பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு பின் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அவை நிறைவடைந்த நிலையிலுள்ள சட்ட விரோத போதைப் பொருட்கள் இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

கடத்தல் விவகாரம் – வசந்த கரன்னகொடவிற்கு மீண்டும் அழைப்பாணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அட்மிரல் கரன்னகொடவிடம், இதுவரை மூன்று தடவைகள் குற்றப் ...

மேலும்..

போதையில் வாகனத்தை செலுத்திய திமுத் கருணாரத்ன நீதிமன்றில் முன்னிலை?

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி ...

மேலும்..

அதிவேக வீதியில் பஸ் கட்டணம் குறைப்பு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களின் கட்டணம் இன்று முதல் 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது இதன்பிரகாரம் தெற்கு அதிவேக வீதியின் மாக்கும்புர – காலிக்கான பஸ் கட்டணமாக 420 ரூபாவும், மாக்கும்புர – மாத்தறைக்கான பஸ் கட்டணமாக 530 ரூபாவும் அறவிடப்படவுள்ளது இதேவேளை, மாகும்புர ...

மேலும்..

சஜித் பிரேமதாசவிற்கு கௌரவ நாமம் வழங்கும் நிகழ்வு

சியாமோபாலி மகாநிக்காயவின் மல்வத்து தரப்பினால் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன எனப்படும் கௌரவ நாமம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மல்வத்து மகா விகாரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த ...

மேலும்..