May 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிராம சக்தி மூலம் ,வலிவடக்கு பிரதேசம் வலுவாக்கப்படும் அங்கஜன் எம்பி

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிராமங்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் செயலக மண்டபத்தில்  மதியம் இடம்பெற்றிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கிராம சக்தி திட்டத்தினை போன்று பங்களாதேஷ் நாட்டிலும் ...

மேலும்..

தாக்குதல் தொடர்பில் 8ஆம் திகதியே தகவல் கிடைத்தது – தேசிய புலனாய்வு

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்ததாக தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் அறியமுடியவில்லை என்றும் அவர் ...

மேலும்..

தலவாக்கலையில் தீ விபத்து – 24 வீடுகள் தீக்கிரை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் பரவிய தீ காரணமாக 24 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. அத்தோடு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு சுமார் 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ...

மேலும்..

யாழ், ருஹுணு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களின் வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், ருஹுணு மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்படட்டுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

கௌரவ ஆளுநருக்கும் கௌரவ சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறீதரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (28) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக நிலைமைகள் குறித்தும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநருக்கு செல்வம் MP கடிதம்!

மன்னார் மாவட்டத்திற்குரிய பல பாடசாலைகள் தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது குறித்து கவனமெடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு ...

மேலும்..

யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் ரணில் விஜயம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சமூர்த்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில்  யாழ்.மாநகர சபை வளாகம் மற்றும் மணியம் தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், ...

மேலும்..

சஹரானுடன் தொடர்பிலிருந்த முக்கிய சந்தேகநபரை கைது செய்யவும் – ஞானசார தேரர்

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானுடன் தொடர்புடைய,  பிரபல தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான முஸ்தபா அப்துல் ரஹ்மானை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, ...

மேலும்..

தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட சகல துறைகளுக்கும் நிவாரணம் – நிதி அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட சகல துறைகளுக்கு நிவாரணம் எதிர்காலத்தில் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரபல இசை குழுக்களின் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சருக்கு ...

மேலும்..

சாவகச்சேரி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி மனு கோரலையும் விடுத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை ...

மேலும்..

சற்று முன்னர் வியாழேந்திரன் MP இன் அலுவலகத்துக்கு செல்லும் வீதியில் கிளைமோர் குண்டு மீட்பு!

பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் அமைந்துள்ள மட்டுநகர் கண்ணகி அம்மன் வீதியில் அதாவது அலுவலகத்தில் இருந்து 200mதூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டாகும். ஈயக் குண்டுகள் சுமார் 1500க்கு மேல் உள்ளடக்கப்பட்டுள்ளது. கிளைமோர் கண்டெடுக்கப்ப இடத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் விசாரணையில் ஈடுபட்டு ...

மேலும்..

ராஜித பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக சந்தேகம்: சீலரத்தன தேரர்

அமைச்சர் ராஜித சேனாரத்ன பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். ராஜித, தற்போதைய சூழ்நிலையில் வீட்டுப்பிரச்சினை பார்த்தால் ...

மேலும்..

வன்முறைச் சம்பவங்கள் – 46 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

மினுவாங்கொட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாத்தாண்டியா கொட்டரமுல்ல பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

கடந்த ஒக்டோபர் மாதம் 51 நாள் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றவேளை கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றனர். ஐக்கிய தேசிய ...

மேலும்..

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று (புதன்கிழமை) பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக சுமங்கல ...

மேலும்..

மஹிந்தவிற்கு குண்டுதுளைக்காத வாகனம் – பிரதமரின் யோசனைக்கு மங்கள எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கான குண்டுதுளைக்காத வாகனத்தை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே பிரதமர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இருப்பினும் இந்த விடயத்திற்கு நிதியமைச்சர் மங்கள ...

மேலும்..

பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு உறுதியான பாதுகாப்பு கொள்கைகள் இன்மையே காரணம்: இராணுவ தளபதி

உறுதியான பாதுகாப்பு கொள்கைகள் நாட்டில் இல்லாதமையே பயங்கரவாதிகளும் அடிப்படைவாதிகளும் தோற்றம் பெறுவதற்கு காரணமென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவிதுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

ஸ்கந்தாவின் புகழ்பூத்த அதிபர் சிவாஜி அக்கினியுடன் சங்கம்!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றிய புகழ்பூத்த ஓய்வுநிலை அதிபர் கந்தசாமி சிவாஜி கடந்த சனிக்கிழமை(25-05-2019) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாழ்.உடுவில் மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (28) முற்பகல்-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ...

மேலும்..

அடக்குமுறைகளைத் தடுக்க சர்வதேசத் தலையீடு தேவை

ஆஸி. தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்து  "இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதேவேளை  தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் கிளைமோர் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் இணைந்து இன்று (புதன்கிழமை) இந்த குண்டை மீட்டுள்ளனர். குறித்த கிளைமோர் குண்டு விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தபட்டதென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை ...

மேலும்..

ரிஷாத், அஸாத், ஹிஸ்புல்லாவை பதவி நீக்க 24 மணிநேர அவகாசம்

- ஜனாதிபதிக்கு வழங்கினார் அத்துரலிய ரத்தன தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை ...

மேலும்..

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்திய சட்டத்தரணி கைது!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ...

மேலும்..

தாக்குதல்கள் குறித்து ஆராயும் குழுவில் சாந்த கோட்டேகொட முன்னிலை!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட முன்னிலையாகியுள்ளார். இன்று (புதன்கிழமை) முற்பகல் 9 மணியளவில் அவர் இந்த தெரிவுக்குழுவிற்கு முன்னிலையாகியுள்ளார். அத்தோடு அவர் 1 ...

மேலும்..

குருநாகல் வைத்தியர் விவகாரம் குறித்து மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும்: சம்பிக்க

தற்போது குருநாகல் வைத்தியர் குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை உடனடியாக தீர்க்கவில்வையென்றால் எதிர்காலத்தில் அனைத்து வைத்தியர்களையும் சந்தேக கண்ணோட்டத்திலேயே மக்கள் பார்ப்பார்களென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க ...

மேலும்..