May 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்.போதனா வைத்தியசாலை நிரந்தர பணிப்பாளராக சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நிரந்தரமாகவே (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்ற முடியும். மார்ச் 27 ஆம் திகதிய அமைச்சரவை ...

மேலும்..

ரிஷாத்தை ஆதரிக்க கூட்டமைப்புக்கு 5 பில்லியன் ரூபா!

இது பாரதூரமான அவதூறு. இப்படிக் குற்றம் சாட்டுபவர் சாமானியர் அல்ல.  ஜனாதிபதியின் சிறப்பு  இணைப்பாளர் சமிந்த வாசல. இது பற்றி நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனையை எழுப்ப வேண்டும்.   நக்கீரன் நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா அமைச்சர் ரிசாட்டை ஆதரிக்க தமிழ்த் தேசியக் ...

மேலும்..

பள்ளிவாசல்களை உடைத்து முஸ்லிம்களுக்கிடையில் குழப்பங்களை உண்டுபன்ன எவரும் முயற்சிக்கவேண்டாம்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர வேண்டுகோள்

கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம் அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், ...

மேலும்..

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நேற்று (29) இடம்பெற்றது. ...

மேலும்..

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு இன்று (29) மாலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் ...

மேலும்..

கிளிநொச்சியில் செல்வாநகரில் இடம்பெற்ற வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின்  போது   ஒரு கர்ப்பிணி  பெண் உட்பட ஆறு பெண்களும் ...

மேலும்..

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு ...

மேலும்..

மக்களுக்கான அபிவிருத்தியே தவிர, அபிவிருத்திக்காக மக்களல்ல அங்கஜன் எம்பி

தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் எந்தவொரு அனுமதியும் இன்றி மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறவன்புலோ பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் ...

மேலும்..

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

மல்வானைப பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகளுடன், நிதி அமைச்சின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இன்று (29) முற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 93 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக ...

மேலும்..

உடைத்து அகற்றப்பட்டது தௌஹீத் ஜமா அத் பள்ளி

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. "நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் ...

மேலும்..

மேலும் மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் நேற்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:- 01) ரஞ்சித் மத்தும பண்டார - பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ...

மேலும்..