May 31, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரிஷாட் தொடர்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முடிவெடுப்போம் – கூட்டமைப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையிலான ஒரு முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தெரிவித்தார். மேலும், வடக்கும் கிழக்கும் இணையும் என்பதில் கூட்டமைப்பு ...

மேலும்..

யாழ் நூலகம் எரிப்பு – தலைமுறைகள் மீது தொடரப்பட்ட வன்முறை!

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்று ஜூன் 01 2019 உடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எரிக்கப்பட்ட தீ அணைந்துவிட்டாலும் தமிழர்களின் மனதில் அந்த துன்பியல் சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் இன்னும் ஆறாமல் வலி தந்துகொண்டிருக்கிறது. 1981ம் ...

மேலும்..

தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளது: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு நடத்திய தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதி என்னிடம் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு..!

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (31) அறிவித்தார். இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார். தேர்தல் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!

தேசிய அடையாள அட்டையில் உரிய நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தில் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். பழைய தேசிய அடையாள அட்டையிலுள்ள பல ...

மேலும்..

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (31) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ...

மேலும்..

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குறித்த தீ ...

மேலும்..

திலகவதியின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தோர் குணமடைய இறைவனை வேண்டுகின்றோம் – வவுனியா மத்தியஸ்தர் சபை 

வவுனியா மத்தியஸ்தர் சபை தவிசாளரும், கோமரசன்குளம் மகாவித்தியாலய அதிபருமான சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்களின் மாமியார் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி வையாபுரிநாதன் திலகவதி அவர்கள் நேற்று (30) நடந்த விபத்தில் அகாலமரணத்தை தழுவிக் கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம். அன்னாரின் ...

மேலும்..

பல இலட்சம் ரூபா பணம், ஒரு தொகை நகைகள் மற்றும் ஆவணங்கள்! சஹ்ரானுடையதா என தீவிர விசாரணை

இன்று பொலிஸரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மடிக்கணினியும், 35 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினியே பொலிஸாரால் ...

மேலும்..

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று (31) யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆளுநர் ...

மேலும்..

கனகராயன்குளத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய யானை மீட்பு

வவுனியா வடக்கு, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடிய யானைக்குட்டி மீட்கப்பட்டது. வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயுள் வேத வைத்தியசசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் இரவு யானை குட்டி ஒன்று தவறி ...

மேலும்..

மார்க்கக் கல்வியைப் பறிக்கும் எவ்வித நடவடிக்கையையும் ஏற்கவே முடியாது!

"இலங்கையிலுள்ள அனைத்து மதங்களும் தத்தமது மதம் சார்ந்த கல்விகளைச் சிறுபிராயம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றன. அவ்வாறே முஸ்லிம்களின் மார்க்கக் கல்வியும் மத்ரஸாக்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்தக் கல்விப் போதனைகள் அவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக வாழ வழிகோலுகின்றன. இத்தயை நிலையில் முஸ்லிம்களது ...

மேலும்..

நொச்சியாகம விபத்தில் படுகாயமடைந்த மற்றுமோர் வவுனியா இளைஞன் மரணம்

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மற்றுமோர் வவுனியா இளைஞன் இன்று அதிகாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் வவுனியா நோக்கி ...

மேலும்..

வவுனியாவில் மரக்கடத்தில் முறியடிப்பு

வவுனியா மரக்காரம்பளையில் இன்று அதிகாலை 1மணியளவில் மரக்கடத்ததில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் தாண்டிக்குளம் மரக்காரம்பளை வீதியில் ...

மேலும்..

தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் அத்துரலிய தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ...

மேலும்..

வவுனியாவில் குடியமர்த்தப்பட்ட 77 வெளிநாட்டு அகதிகள்

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு இன்று (31.05.2019) அதிகாலை 1.00 மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தான் அகதிகள் 45 பேர் , ...

மேலும்..

வவுனியா பெரிய பள்ளிவாசலில் நோன்பு பெருநாள்

பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை நோன்பு பெருநாள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. சர்வமதத்தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான நோன்பு பெருநாளில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டு ...

மேலும்..

வவுனியா தாலிக்குளத்தில் இளைஞர்கள் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பேர் காயம்

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் வீடு புகுந்து இளைஞர் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (30.05) மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற ...

மேலும்..