June 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆரம்பமான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் பேர் நண்மை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆரம்பமான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத் திட்டத்தின்; முதல் நாள் நிகழ்வில் 150 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இதற்காக சுமார் 3.43 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தாயிரத்திற்கும் அதிகமான ...

மேலும்..

சர்ச்சைக்குரிய பல்கலை குறித்து தகவல்களை வழங்குமாறு அறிவித்தல்!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் குறித்து விரைவில் தகவல்களை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. அதற்கமைய கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், ...

மேலும்..

தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவின் 2ஆவது அமர்வு – பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலை

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ...

மேலும்..

பேரினவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் சிறுபான்மையினருக்கே சிக்கல்!- மனோ கணேசன்

பேரினவாத இயக்கங்களுக்கு எதிராக தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிடின் அனைத்து சிறுபான்மை அரசியல்வாதிகளும் பதவியை இழக்க நேரிடுமென தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா குறித்து  நேற்று ...

மேலும்..

அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சருக்கும் இலங்கை அரச தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்ரேலியா வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடினுக்கும் இலங்கையிலுள்ள உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்த பீட்டர் டடின் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ...

மேலும்..

LED மின்குமிழ் வழங்கும் நிகழ்வு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சக்தி LED மின்குமிழ் வழங்கும் நிகழ்வு மின் விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பான மக்கள் நடமாடும் சேவை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் உடைய ...

மேலும்..

நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை ...

மேலும்..

பட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 14, வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 ...

மேலும்..

பதவி விலகிய பின் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் முஸ்லீம்களை இலக்கு வைத்து வன்முறைகளை தூண்டிவிடும் சதித்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதவி விலகிய கிழக்கு மகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ...

மேலும்..

இனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள்; இன்று முஸ்லிம்கள்! – சுமந்திரன் காட்டம்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 04-06-2019

மேஷம் மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: இன்றும் பிற்பகல் ...

மேலும்..

சிறப்புற இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டி

முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கம் விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று (02)மாலை மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்றை நடத்தியிருந்தது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இந்த மாட்டு வண்டி சவாரி காணப்படுவதோடு இந்த பாரம்பரியங்கள் ...

மேலும்..

களனி, கிழக்கு பல்கலைகளின் மூடப்பட்ட பீடங்கள் மீள ஆரம்பம்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பு நிலைமயை கருத்திற்கொண்டு ...

மேலும்..

கனேடிய உயர்ஸ்தானிகர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை இன்று சந்தித்தார்

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் அவர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது. சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு ஏப்ரல் 21க்கு ...

மேலும்..

வவுனியா பண்டாரிக்குளம் சமுர்த்தி உத்தியோகத்தரை மாற்றுமாறு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி அப்பகுதி சமுர்த்தி பயனாளிகளால் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா அவர்களிடம் மகஜர் ஒன்று இன்று கையளிக்கப்பட்டது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ...

மேலும்..

நாளைய அமைச்சரவையில் பிரதமர் ரணில் சமர்ப்பிக்கவுள்ள முக்கிய அமைச்சரவைப்பத்திரம்!

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் சிறுவர் நிதியம் ஒன்றை ஆரம்பிக்கும் வகையில் நாளையதினம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் அமைச்ச ரவைப் பத்திரமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளதாக இன்றையதினம் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 100 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கும் ...

மேலும்..

பதவி துறந்ததன் பின்னர் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா மைத்திரியுடன் மந்திராலோசனை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் ...

மேலும்..

சிங்கள அரசியல் தலைவர்களின் ஆதரவு இல்லையென்றால்…! எச்சரிக்கும் ஞானசாரர்

ஒரே கூட்டணியாக எமது போராட்டத்திற்கு சிங்கள அரச தலைவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்றால் ஒரு சிறைச்சாலை அல்ல, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சிறைச்சாலைகளாக உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ...

மேலும்..

அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக பதவிகளிலிருந்து விலகினர்

அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும் அறிவிப்பை. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு, இராஜாங்க ...

மேலும்..

பொலிஸாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஹிய்யித்தீன் ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று (02.06.2019) மாலை இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. மதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி அவர்களின் தலமையில் ஆரம்பமான இவ் ...

மேலும்..

போராட்டத்தை முடித்தார் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாழேந்திரன் எம்.பி இன்று மாலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகவும், அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுனர் அசாத் ...

மேலும்..

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

ரிஷாட் பதியுதீன் மற்றும் பதவி விலகியுள்ள அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தலைநகரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நி​லையத்துக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போராட்டம் ...

மேலும்..

வவுனியா தவசிகுளத்தில் போடப்பட்டுள்ள தரமற்ற வீதி : போராட்டத்தில் இளைஞர்கள்

> > வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதட்டமாக நிலை காணப்பட்டது. > > வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதியோதுக்கிட்டில் தவசிகுளம் பிள்ளையார் ...

மேலும்..

ரிஷாட் உட்பட முஸ்லீம் அமைச்சர்கள் சற்றுமுன்னர் இராஜினாமா

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்கள் சற்றுமுன்னர்  அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தோல்வியடைந்ததை மேற்கோளிட்டே அவர்கள் தமது இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும்..

அமைச்சு பதவிகளை துறக்கிறார்கள் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளனர். அமைச்சர் ரிசாட், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க வலியுறுத்தி எழுந்த கோரிக்கைகளையடுத்து, இன்று கொழும்பில் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போதே, இந்த ...

மேலும்..

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரர் சற்றுமுன்னர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பலத்த கோரிக்கைகள் ...

மேலும்..

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றுமுன்னர் கைவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ...

மேலும்..

அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவாக மலையகத்தில் பேரணி

நாடளாவிய ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹட்டனிலும் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஹட்டன், நீக்ரோதாரம விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது. ஹட்டன்-  நீக்ரோதாராம விகாரையில் இன்று காலை 10 மணியளவில் ...

மேலும்..

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு 

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று (3) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு ...

மேலும்..

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று(திங்கட்கிழமை) காலை தெரிவித்தனர். நேற்று மாலை வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை ...

மேலும்..

ஜனாதிபதியுடன் மந்திர ஆலோசனையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து ...

மேலும்..

அத்துரலிய ரத்ன தேரருக்கு அதிகரிக்கும் ஆதரவு – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்!

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. குறித்த மூவரும் பதவி நீக்கம் ...

மேலும்..

ஜனாதிபதி, பிரதமருக்கு மகாநாயக்க தேரர்கள் அவசரக்கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர். கடந்த ...

மேலும்..

இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் முயற்சி நடைபெறுகிறது: சம்பந்தன் குற்றச்சாட்டு

குண்டுத் தாக்குதலை பயன்படுத்தி நாட்டை தங்களது கைக்குள் கொண்டுவருவதற்கு இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் குழுவொன்று இயங்குகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்கள் தொடர்பாக தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இதனை ...

மேலும்..

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறக்க தீர்மானம்?

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டுமென நாடளாவிய ரீதியில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்நிலையிலேயே அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் விசேட ...

மேலும்..

சர்ச்சைக்குரிய முஸ்லிம் ஆளுநர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் ...

மேலும்..

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜனாமா

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்..

ஸ்தம்பித்தது கண்டி – ஸ்தலத்தில் ஞானசார…!

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரின் உண்ணா போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று கண்டி நகரில், தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.. இன்று காலை முதல் கண்டி நகரின் சேவையில் ஈடுப்படும் தனியார் பேருந்துகள், இவ்வாறு  இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி நகரில் ...

மேலும்..

இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பை இலங்கை அரசும் ஏற்கவேண்டும்!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்த பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்க வேண்டும். மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஶ்ரீ முத்துவிங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் ...

மேலும்..

மட்டுவிலில் வீதி போடப்பட்டமையால் அதிருப்தியடைந்த மக்கள்!

மட்டுவில் தெற்கு ஊர் எல்லை தெரு புனரமைப்புப் பணிகள் கம்பெரலியா திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ள ள் நிறைவடைந்த நிலையில் அந்த வீதி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  பக்க வீதிகளால் பயணிப்போர் இந்த வீதியில் வந்து ஏறும்போது இரண்டு அடி உயரத்தில் வீதி ...

மேலும்..

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவும்!

பாறுக் ஷிஹான் யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு ஓயில் ரைக்டரில் எடுத்து சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை (31) இரவு  அதில் இருந்து சரிந்து வீதியில் ஓயில் ஊற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்களால் வீதியில் மணல் போட்டிருந்தனர். எனினும்  பின்னர் மணல் போட்டும்  ஓயில் வழுக்கியமையால்  ...

மேலும்..

தீர்வு முயற்சியில் இருந்து விலகிவிடவில்லை அரசு! – யாழில் ரணில் உறுதிபடத் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலிருந்து  நாங்கள் விலகவில்லை. அந்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.” - இவ்வாறு யாழ்பாணம் முற்றவெளி மைதானத்தில் வைத்துத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் ...

மேலும்..

மோசமடைகின்றது தேரரின் உடல்நிலை!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

ரத்ன தேரரின் உடல் நிலை அபாய நிலையில் நாடளாவிய ரீதியில் வெடித்துள்ள உண்ணாவிரத போராட்டம்!

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைதாகும் நிலையில், சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ...

மேலும்..

துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராக மாவை!

வளர்மதி விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில்  அமரர்களான சி.கனகரத்தினம் மற்றும் பொ.செல்வராசா ஆகியோரின் ஞாபகார்த்த துடுப்பாட்ட சுற்றுத் தொடரின் இறுதி போட்டி கடந்த 26 ஆம் திகதி மட்டுவில் வளர்மதி விளையாட்டரங்கில் கோலாகலமாக இடம் பெற்றது. மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத் தலைவர் தா.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..