June 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வலி.வடக்கு மயிலிட்டி உப அலுவலகம் 30 வருடங்களின் பின் சொந்த இடத்தில்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மயிலிட்டி உப அலுவலகம் 30 வருடங்களின் பின்னர் மீண்டும் மயிலிட்டி கிராமக்கோட்டு சந்திக்கு அருகில் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பணிமனையை இன்று காலை 9 மணியளவில் வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் திறந்து, ...

மேலும்..

நீட் தேர்வு: இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகிறதோ? -வைகோ வேதனை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் ...

மேலும்..

பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் அரசு அக்கறைக் காட்ட வேண்டும் -சஜித்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் அரசாங்கம் அக்கறைக் காட்ட வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் சரிந்து போயுள்ள தேசிய பொருளாதாரம் ...

மேலும்..

கிளிநொச்சியில் முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனடா தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

கிளிநொச்சியில் முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனடா தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இச் சந்திப்பு இன்று(06) காலை எட்டு ...

மேலும்..

கொழும்புத் துறைமுக பகுதிகளில் எண்ணெய்ப் படலம்

கொழும்புத் துறைமுக நகரை அண்மித்த கரையோரத்தில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ மற்றும் வெள்ளவத்தை கரையோரங்களில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய்ப் படலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், ...

மேலும்..

களனி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!

களனி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் செயற்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு அமையச் செயற்படுவதாக மாணவர்கள் உடன்பட்டதற்கிணங்க இன்று (வியாழக்கிழமை) முதல் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ...

மேலும்..

வலிகாமம் வடக்கில் மரம்நடுகைத் திட்டம் தவிசாளர் சுகிர்தனால் ஆரம்பித்து வைப்பு!

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் தமது பிரதேச எல்லைக்குள் உள்ள வீதிகளில் மரம் நடுகைத் திட்டத்தை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சுற்றாடல் பொதுவசதிகள் குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினருமான பாக்கியநாதன் மரியதாஸ் ...

மேலும்..

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம் உறுதியா?- பெண் இவரா?

நடிகர்களில் பலர் திருமணம் செய்துவிட்டு பின் விவாகரத்து பெற்று இருக்கிறார்கள். முதல் வாழ்க்கை சரியாக வரவில்லை என்றாலும் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்தவர் நடிகர் விஷ்ணு. இந்த நேரத்தில் அவர் தனது ...

மேலும்..

நடிகர் சங்க தேர்தலில் நடிகை குஷ்பூ! என்ன பதவிக்காக தெரியுமா?

2019- 2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார். விஷால் அணியும், சரத்குமார் அணியும் மோதிய கடந்த தேர்தலில் ...

மேலும்..

வடக்கு – கிழக்கில் 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு  எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை இவர்களுக்கான நியமனக் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால், நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்குமென அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று ...

மேலும்..

இளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

தனது பாடல்களை தனது அனுமதியின்றி பாடுவதற்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு அளித்திருந்தார். இதனை விசரித்த நீதிமன்றம், இளையராஜா அனுமதியின்றி அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் ...

மேலும்..