June 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த இரு மத பெயர்பலகைகளும் அகற்றல்!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை  நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் சடடவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வாழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன்  ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு  உண்மைகளை மூடிமுறைப்பதற்கு  மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித 

"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக  சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதேவேளை, உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் ...

மேலும்..

கத்திக்குத்திற்கு உள்ளாகி காரைதீவில் ஒருவர் பலி..! மற்றொருவர் ஆபத்தான நிலையில்

இன்று  வெள்ளிக்கிழமை மாலை 05:45 மணியளவில் காரைதீவில் இரு நபர்கள்  மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் காயங்களுக்கு உள்ளான மற்ற நபர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு ...

மேலும்..

பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி

பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கையில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு மோடி விஜயம் செய்ததுடன், ஈஸ்டர் தினத்தன்று குண்டுத் தாக்குதலுக்கு ...

மேலும்..

கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு லண்டன் காதலருடன் நிச்சயதார்த்தம்

நடிகை எமி ஜாக்சனுக்கு அவரது லண்டன் காதலருடன் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் கலக்கிய நடிகை எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜை காதலித்து வருகிறார். மேலும், திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ...

மேலும்..

பயங்கரவாதி சஹ்ரானின் உரை நிகழ்த்தும் இடத்தில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்த வசீம் அஹமட்

கொள்ளுப்பிட்டியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்ற ஆசிரியர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதி சஹ்ரானின் இனவாத உரைகளை கற்பித்த தனியார் நிறுவனத்தின் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த ஆசிரியரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் ...

மேலும்..

துபாயில் திறக்கப்படவுள்ள கண்! தயாராகின்றது மற்றுமொரு பிரமாண்டம்

துபாயில் மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த அருங்காட்சியகம் மிகப்பெரும் கண் போன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் வெளிப்புறத்தில் அரேபிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவைக் கட்டி வியப்பில் ஆழ்த்திய அதே நகரத்திலேயே ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் வெளிநாட்டு அகதிகளுக்கு சிகிச்சை

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேர் இவ்வாறு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டனர். சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் ...

மேலும்..

பொலிஸாரின் சுற்றி வளைப்பிற்குள் சஹ்ரானின் சகாக்கள்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இராணுவமும் இணைந்து கண்டி ஹிங்குல பகுதியில் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ,தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் என கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இந்தியா கோவையிலும் சஹ்ரானுடன் முகநூலில் தொடர்பு வைத்திருந்தார் ...

மேலும்..

இந்துக்களையும் பௌத்தர்களையும் இணைக்கும் தீவிர முயற்சியில் இறங்கிய ரத்ன தேரர்! வவுனியாவில் ஆரம்பம்

நாட்டில் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கூறுகையில், நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், ...

மேலும்..

தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்!

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு ...

மேலும்..

மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு

மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொல்லியல் திணைக்களத்தையும் உள்ளீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஆவண வரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை கரைச்சி பிரதேச சபையினால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, ...

மேலும்..

சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு

மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள ...

மேலும்..

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் – மைத்திரி தீர்மானம்!

ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த ...

மேலும்..

அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி வேதனை

ண்மையில் இலங்கை விஜயம் செய்தபோது ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை காண முடிந்ததாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று ...

மேலும்..

கிளிநொச்சிமாவட்டபாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம்

கடந்த2019.04.21 ஆம் திகதிநாட்டில் இடம்பெற்றதொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைஅடுத்து இரண்டாம் தவணைக்காகபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட2019.05.06 ஆம் திகதியிலிருந்துபாதுகாப்புநடவடிக்கைகள் என்றபேரில் கிளிநொச்சிமாவட்டபாடசாலைகளில் இராணுவத்தினரும்,சிவில் பாதுகாப்புபடையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதுநாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் மாறி இயல்புநிலைமீளத்திரும்பியுள்ளபோதும் இன்றுவரைபாடசாலைகள் முழுநேர இராணுவப் பாதுகாப்பிலிருந்தும்,கண்காணிப்பிலிருந்தும் விடுவிக்கப்படவில்லைஎன்பதோடுபெற்றோர்கள்,பழையமாணவர்கள்,மாணவதலைவர்களைவிடுத்து இராணுவத்தினரும்,சிவில் பாதுகாப்புபடையினருமேமாணவர்களையும்,அவர்களதுபுத்தகப்பைகளையும் சோதனைக்குட்படுத்துவதை இன்றையதினம் ...

மேலும்..

வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்!

வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனராஜா சுகாதார பொதுச்சேவை சங்கத்தின் தலைவர் பீரிஸ் சுவர்ணபால தெரிவித்துள்ளார். வவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

வெளிநாட்டவருடன் ஜோடியாக சுற்றும் பிரபல இளம் நடிகை- நெருக்கமான போட்டோவையும் வெளியிட்டார்

கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஜெயம் ரவி வித்தியாசமான ...

மேலும்..

வெளிநாட்டு அகதிகளுக்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று (14.06.2019) அழைத்து வரப்பட்டனர்.  உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு ...

மேலும்..

மைத்திரிக்கு கடும் நெருக்கடி; தீவிரமாக அழுத்தும் மஹிந்த தரப்பு; பதவியைத் துறப்பாரா?

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்து உடனடி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்டுக்கொள்வதற்கான சிறந்த தலைவரை தெரிவுசெய்வதற்காக ...

மேலும்..

நாளை கிழக்கில் தரம் 5புலமைப் பரிசில் முன்னோடிப்பரீட்சை!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தரம் 5புலமைப்பரிசில்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்க்கான முன்னோடி மாதிரிப்பரீட்சை நாளை(15) சனிக்கிழமை காலை நடைபெறுமென கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார். கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளில் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் சகல மாணவர்களுக்குமாக இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது. காலை ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மௌலவி! வியந்து போன பொலிஸார்! காரணம் என்ன?

அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் வியப்பு அடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார். கொச்சிக்கடை, போரதோட்டையில் வசிக்கும் இந்த மௌலவிக்கு நான்கு மனைவிகளும், 28 பிள்ளைகளும் உள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ...

மேலும்..

தமிழரின் பூர்வீகத்தை சிங்களவருக்கு வழங்கி துரோகமிழைத்துள்ளார் ஜனாதிபதி! – ரவிகரன்

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி, அந்த தமிழர்களின் பூர்வீக குளத்தையும் அதன் கீழுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களையும் சிங்கள மக்களுக்கு அபகரித்துக் கொடுத்ததன் மூலம், ...

மேலும்..

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் வடக்கு ரீதியிலான விளையாட்டு விழா! – பிரதம அதிதியாக சுமந்திரன் எம்.பி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் 'வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா - 2019 ' நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக ...

மேலும்..

மைத்திரியின் வெற்றிக்கு உழைத்த சஹ்ரான்! – ஹிஸ்புல்லா சாட்சியம்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா  பாரா ளுமன்ற ...

மேலும்..

மட்டு. குண்டுதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் அல்லாடும் பொலிஸார்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமது பிரதேசங்களில் குறித்த சடலத்தை புதைக்க வேண்டாம் என்ற மக்கள் எதிர்ப்பின் காரணமாக மட்டக்களப்பு பொலிஸார் சடலத்தை புதைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 21ஆம் ...

மேலும்..

மன்னாரில் கடும் வறட்சி – விவசாயிகள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காணப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட வறட்சி காரணமாக மன்னார், மடு, மாந்தை, முசலி, நானாட்டான், ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் ...

மேலும்..

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகின்றது நாடாளுமன்ற விசேட தெரிவு குழு!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவு சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடவுள்ளது. இந்த தெரிவு குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்படவுள்ளவர்கள் குறித்து இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ...

மேலும்..

ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்த முனையும் உள்ளூராட்சி மன்றங்கள் – ஒன்றியம் கண்டனம்

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கொதிராக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் அண்மைக் காலமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின் ...

மேலும்..

ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை!

ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார். குறித்த மாநாடு இன்று(வெள்ளிகிழமை) தஜிகிஸ்தானின் துசான் பே நகரில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தஜிகிஸ்தானை நேற்றைய தினம் சென்றடைந்திருந்தார். இந்தநிலையிலேயே அவர் நாளை ஆசிய கலந்துரையாடல்கள், ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இவர் இன்று(காலை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் ...

மேலும்..

தமிழ்த் தேசியப் பற்றாளன் அமரர் குகராஜா!

கிளிநொச்சி மண்ணோடும், இந்த மாவட்ட மக்களின் வாழ்வியலோடும்; இரண்டறக்கலந்து இறுதிவரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவுமே வாழ்ந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனை இன்று நாம் இழந்து நிற்கிறோம். - இவ்வாறு கரைச்சி பிரதேசசபை முன்னாள் தவிசாளராக இருந்து அமரத்துவமடைந்த வைத்திலிங்கம் குகராஜாவின் மறைவு குறித்து இலங்கைத் ...

மேலும்..

தென்னிந்திய சினிமா பற்றி மோசமாக பேசிய டாப்ஸி! மீடியா மீதும் தாக்கு

நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகை. இன்று அவர் நடித்துள்ள கேம் ஓவர் படம் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக டாப்ஸி பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார். சில வருடங்கள் முன்பு டாப்ஸி தென்னிந்திய சினிமா பற்றி மிக மோசமாக பேசியது ...

மேலும்..

கிளிநொச்சி ம.விக்கு நவீன கற்றல் வகுப்பறையை திறந்துவைத்தார் சிறிதரன்!

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி இன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்குடன் குறித் நவீன கற்றல் வகுப்பறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது, இந்த ...

மேலும்..

தலவாக்கலை வாகன விபத்தில் ஒருவர் பலி – மற்றொருவர் படுங்காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் 13.06.2019 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற ...

மேலும்..

மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் ...

மேலும்..

குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகின்றார் அசாத் சாலி!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்று(வெள்ளிக்கிழமை) குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையின் பாதுகாவலர் என்ற அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாடு குறித்து வாக்குமூலம் ...

மேலும்..

தமிழ்நாட்டே அஜித் தானா, ரசிகர்கள் உருவாக்கிய நேர்கொண்ட பார்வை ஃபஸ்ட் லுக்- வைரலாக்கும் ரசிகர்கள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. பட ரிலீஸ் முதல் ஃபஸ்ட் லுக் வரை ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு விடுகின்றனர். அப்படி தான் டிரைலர் வெளியீடும் இருந்தது, காலை அறிவிப்பு வெளியிட்டு மாலையில் ...

மேலும்..

முறியடிக்க முடியாத பெரும் சாதனை! விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்

விஜய் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவரின் படங்கள் வர்த்தக அளவில் பெரும் வியாபாரங்களுக்கு நகர்ந்து வருகின்றன. அந்த வகையில் அவரின் அடுத்த படமான விஜய் 63 ன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. டீசர், டிரைலர் விசயங்களிலும் அவரின் சாதனை ...

மேலும்..

இலவச ரயில் சேவை ஆரம்பம்!

இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் ...

மேலும்..