June 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய கூட்டணி குறித்து விசேட கலந்துரையாடல்!

புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன முன்னணி 6 ஆம் கட்ட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், இரு கட்சிகளும் புதிய கூட்டணியை எவ்வாறு வலுப்படுத்துவது ...

மேலும்..

கல்முனை தமிழ் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொஷன் நிகழ்வுகள்.

கல்முனை தமிழ் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொஷ்ன் நிகழ்விற்கு வடகிழக்கு மாகாண சிங்கள பௌத்த சம்மேள அமைப்பின் தலைவரும் உஹன குமாரிகம விகாராதிபதி சேனாபதி ஆனந்த கிமி தேரர் அவர்களும்,கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் ...

மேலும்..

ஜனாதிபதி கம்போடியாவிற்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 26ஆம் திகதி கம்போடியா செல்லவுள்ள ஜனாதிபதி 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர் ...

மேலும்..

இந்தியா செல்கின்றனர் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், ...

மேலும்..

பயங்கரவாதி சஹரானின் நெருங்கிய சகா கைது!

தற்கொலை குண்டுதாரி சஹரான் ஹாஸிமுடன் தொடர்பினை பேணி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிமடை – பொரகஸ் சீல்மியாபுர, புதுர்திஸா மாவத்தையைச் சேர்ந்த 21 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

ரயில் சேவைகள் இரத்து – பயணிகள் அவதி!

இரண்டு முக்கிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக ரயில் சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மங்களவுக்கு எதிராக தீர்மானம் எடுக்க நேரிடும்: ராஜித

வெளிநாடுகளிலிருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான சட்டங்களை நிதியமைச்சர் மங்கள சமரவீர தயாரித்தால் அவருக்கு எதிராக தீர்மானமொன்றை எடுக்க நேரிடுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர, வெளிநாட்டு ...

மேலும்..

அகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஆகையால் இலங்கை அரசாங்கம், அகதிகளை வெளியேற்றும் செயற்பாட்டை கைவிட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிராஜ் ...

மேலும்..

பயங்கரவாதம் குறித்து அசாத் சாலி கருத்து

நாட்டில் தற்போது நிலவுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே காரணமாகுமென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அசாத் சாலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக உண்ணாவிரத ...

மேலும்..

சமல் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி: ஞானரத்ன தேரர்

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

செல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்!

வவுனியாவில் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கான கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் இந்த திடல் திந்துவைக்கப்பட்டது. ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் யுவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ...

மேலும்..

கன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா? – செல்வம் எம்.பி கேள்வி

அதுரலிய ரத்னதேரர் உண்மை பேசும் மதகுருவாக இருந்தால் எமது மக்களுக்குரிய கன்னியா வெந்நீருற்று மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலய பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். வவுனியா, தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கு ...

மேலும்..

பெரியகல்லாறு மாரிஅம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் !

மட்டு ,பெரிய கல்லாறு அருள்மிகு ஸ்ரீ மாரிஅம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் இன்று(16.06.2019) பெரும் திரளான பக்த அடியார்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது பக்த பரவச நிலையில் பல அடியார்கள் தீமிதிப்பை நடத்தியிருந்தனர்.

மேலும்..

மாவிட்டபுரம் ஆலய வீதிக்கு மாவை எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கிழக்கு மற்றும் தெற்கு வீதிகளைப் புனரமைப்பதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா 80 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். வலி.வடக்கு பிரதேசசபையின் ...

மேலும்..

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு சுமந்திரன் எம்.பி. இன்று விஜயம்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வைத்தியசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த விஜயம் அமைந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின் போது, கோப்பாய் பிரதேசத்தில் ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2019…

காந்தன்... இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு16/06/ 2019 இன்று காலை 8.30 மணியளவில் வீரமுனை ஸ்ரீ சிந்தாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் சிறப்பு ...

மேலும்..

அரசைக் கவிழ்க்கின்ற சதியை முறியடிப்போம் – பிரதமர் ரணில் திட்டவட்டம்

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறத்தல் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அவர்களின் இந்தத் திட்டத்தை நாம் ஓரணியில் நின்று முறியடிப்போம்." - இவ்வாறு பிரதமர் ...

மேலும்..

அரசைக் கவிழ்த்தே தீருவோம்! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

"இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த அரசை நாம் கவிழ்த்தே தீருவோம்." - இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன. அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசிய முன்னணி அரசு மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை. ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் – சபாநாயகர் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இதுவரை தான் எந்த விண்ணப்பமும் ...

மேலும்..

சர்ச்சைக்குரிய ‘சோபா’ உடன்பாடு குறித்து மைக் பொம்பியோவுடன் பேச்சு?

அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போதே, ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் ...

மேலும்..

வாக்குகளைக் கொள்ளையடிக்கவே தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டுமென கூறப்படுகிறது – டக்ளஸ்

தமிழர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே, தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தினார். மேலும், அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக மக்களின் ஆணையைப் பெற்று, கூட்டணி அமைத்துக்கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் அச்சுவேலி ...

மேலும்..

பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-நஸீர் அஹமட்

நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை நீக்க  நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நாட்டின் சமகால அரசியல் தளம்பல் நிலை ...

மேலும்..

காணாமல் போயிருந்த மாணவி சடலமாக கண்டெடுப்பு!

பதுளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி 3 நாட்களாக காணாமற்போயிருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மாணவியின் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் லொங்கல்ல நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை, மெத பத்தன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ...

மேலும்..

ஓமந்தை சித்திவிநாயகருக்கு சாள்ஸின் நிதியில் வசந்தமண்டபம்!

வவுனியா, ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலய பரிபாலன சபையின் நிர்வாக சபை உறுப்பினர் வே.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக ...

மேலும்..

முல்லைத்தீவில் விபத்து – இருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 9.15 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எரு ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிக்குள் தடம்புரண்டமையினால் ...

மேலும்..

தாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி பிரதமரை அழைக்க தீர்மானம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியோரை சாட்சியம் வழங்க வரவழைப்பது குறித்து குழு உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடல் ...

மேலும்..

பிரதமருடன் ஷங்காய்-ஹொங்கொங் தூதுக்குழு சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிலிருந்து வருகைதந்த ஷங்காய்-ஹொங்கொங் பௌத்த தூதுக் குழுவை சந்தித்தார். சீனத் தூதுக்குழுவில், சீனாவின் ஹுனான் மாகாணத்தின் துணைத்தலைவர் வென்மிங்சன், ஹொங்கொங்கிலுள்ள சீன பௌத்த பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சூ யூ உட்பட்ட குழுவினர் பிரதமருடனான சந்திப்பில் ஈடுபட்டனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

சம்மாந்துறையில் இன நல்லுறவை ஏற்படுத்தும் பொசன் ‘தன்சல’ நிகழ்வு

இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுரா இணைந்து ஏற்பாடு செய்த பொசன் பண்டிகை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை விகாரையின் விகாராதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

வடக்கில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளீர்க்க நடவடிக்கை – த.கணேஸநாதன்

வட மாகாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாணத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் தெரிவித்தார். அதற்கமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போதே அவர் ...

மேலும்..

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானம் வழங்கும் நிகழ்வு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைகளில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடலை தானம் வழங்கும் நிகழ்வு ...

மேலும்..

போர் முடிவடைந்த பின்னரும் நாட்டில் பயங்கரவாதம் குறித்து அச்சம் – மஹிந்த

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாட்டில் பயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு ஆடைக் சுற்றறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்ப நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் ...

மேலும்..

சஹரான் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி அவரை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் – ஸ்ரீநேசன்

பயங்கரவாதி சஹரான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டார் எனக்கூறி கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியை சாதுரியமாக ஏமாற்றியுள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவரது கொள்கையற்ற அரசியல் பின்புலத்தை தலைவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் ...

மேலும்..

என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தான் தவறு செய்தமை நிரூபனமானால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராகவே இருப்பதாகவும் கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவில் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 8 மணிநேர விசாரணைகளுக்குப் பின்னர், ஊடகங்களுக்கு ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்கும் எண்ணம் ஐ.தே.க.வுக்கு இல்லை – எஸ்.பி.திஸாநாயக்க

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை என்று ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதே பிரதானக் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில், ...

மேலும்..

ஹிஸ்புல்லா கொள்கையில்லாத ஒரு அரசியல் வாதி; கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கொள்கையில்லாத ஒரு அரசியல் வாதி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா விமர்சிப்பதாகவும் அவர் ...

மேலும்..

களுதாவளை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பா.உ சிறிநேசன் அவர்களின் முன்மொழிவில் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

களுதாவளை கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ பா.உ சிறிநேசன் அவர்களின் முன்மொழிவில் 1 மில்லியன் செலவில் நிருமாணிக்கப்பட்ட களுதாவளை பொது விளையாட்டு மைதான உடை மாற்றும் அறை,2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட களுதாவளை கொம்பு சந்தி வீதி மற்றும் 2 ...

மேலும்..

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக கடந்த 13ஆம் ...

மேலும்..

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

மேலும்..

பாவனைக்கு உதவாத தேயிலையுடன் ஒருவர் கைது

தவுலகல – பூவெலிக்கடையில் பாவனைக்கு உதவாத 2 ஆயிரத்து 230 கிலோ கிராம் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கம்பளை பொலிஸ் அதிரடி படையினரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தி ஒன்றில் குறித்த தேயிலை எடுத்துச் செல்லப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையை ...

மேலும்..

மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – பிரதமர்

பயங்கரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உயரிய பொசன் பூரணை தினத்தில் ...

மேலும்..

நற்பண்புகளை சிந்தையில் இருத்தவேண்டிய தருணம் இதுவாகும் – ஜனாதிபதியின் பொசன் செய்தி

நாம் பெற்ற உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமான கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்தவேண்டிய தருணம் இதுவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக ...

மேலும்..

மீண்டும் கூடவுள்ளது தெரிவுக்குழு – காத்தான்குடி பொலிஸாருக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ...

மேலும்..

நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல – வியாழேந்திரன்

நான் தமிழ் மக்கள் வாக்களித்துவந்த பிரதிநிதி.நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கல்வித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் வள ...

மேலும்..

ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்- தரன்ஜித் சிங்

ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என இலங்கைக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். அனைத்துலக யோகா நாளை முன்னிட்டு கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் யோகா ஒன்றை எமக்குக் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி

குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த புலனாய்வு அதிகாரி  ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை ...

மேலும்..

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்தில் இளைஞன் பலி – சாரதி கைது

(க.கிஷாந்தன்) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  கினிகத்தேனை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 15.06.2019  காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நீர்க்கொழும்பில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த அரச பேருந்தொன்றில் மோட்டர் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன. குறித்த மோட்டார் சைக்கிளின் ...

மேலும்..

கல்முனை மாநகரில் இன ஐக்கியத்துக்கான பொசன் விழா..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் இன ஐக்கியத்திற்கான பொஷன் விழாவை நடாத்துவது தொடர்பான  கலந்துரையாடல்  சனிக்கிழமை (15) கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ...

மேலும்..

காரைதீவில் வர்த்தகநிலையம் ஒன்றில் கொள்ளை ..!

அம்பாறை - காரைதீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு வர்த்தகநிலையம் ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. காரைதீவு பிரதான வீதியில் சண்முகா மகா வித்தியாலயம் முன்பாக உள்ள கடையே உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டு சம்பவத்தில் கடையில் இருந்த பால்மா பக்கட்கள் , ...

மேலும்..

நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலை! அரசு கவிழ்ந்து விடுமா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது- சுமந்திரன் எம்.பி.

"நாட்டிலே அரசியல் சூழ்நிலை ஒரு ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றது. எப்போது என்ன நடக்கும்? என்ன தேர்தல் வரும்? அரசு சிக்குமா அல்லது கவிழ்ந்து விடுமா? என்றெல்லாம் பல கேள்விகள் நாளாந்தம் எழுந்துகொண்டிருக்கின்றன." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

யாழ் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசனின் நடவடிக்கைகளிற்கு மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கண்டனம்

  யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நியமனத்தினை குழப்பும் முகமாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசன் பல நடவடிக்கைகள் எடுத்திருந்தார். ...

மேலும்..