June 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவின் முக்கிய செய்தி!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம் வழங்கும் ஒருவரால், உண்மைக்குப் புறம்பான வாக்குமூலம் வழங்கப்பட்டால் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து, சட்ட நடவடிக்கை ...

மேலும்..

மதத்தலைவர்களின் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில், போராட்டக்களத்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...

மேலும்..

வவுனியா பண்டாரிக்குளத்தில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்து வந்த 74வயதுடைய வயோதிபர் ஒருவர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் இன்று (22.06.2019) காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளஞ்சிங்கம் தேவராசா ...

மேலும்..

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் ...

மேலும்..

நாட்டு மக்களுக்கு மஹிந்த விடுத்துள்ள முக்கிய செய்தி!

ஸ்ரீலங்காவில் தான் எதிர்காலத்தில் அமைக்கவுள்ள ஆட்சியில் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் புதிய ஆட்சியாளர்களை உருவாக்கும் ...

மேலும்..

ஓமந்தையில் காரும் கேப் ரக வாகனமும் நேரூக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் காயம்

வவுனியா ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் கார் மற்றும் மகேந்திரா கேப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி ...

மேலும்..

வைத்தியசாலையிலிருந்து மீண்டும் போராட்ட களத்தில் உண்ணாவிரதிகள்

உடல் நிலை பாதிக்கப்பட்ட உண்ணாவிரதிகள் சிகிச்சைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டநிலையில் மீளவும் உண்ணாவிரத இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்றகான காணி நிதி அதிகாரங்களை வழங்கி தரமுயர்த்துமாறு கோரிக்கை முன்வைத்து கடந்த ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சாகும்வரையான ...

மேலும்..

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் சினேக பூர்வ உதைப்பந்தாட்ட கண்காட்சி 2019…

சினேக பூர்வ உதைப்பந்தாட்ட போட்டியானது அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடந்த 2018ம் ஆண்டு விக் மேச் போட்டியில் வெற்றியீட்டிய அணியினருக்கும் எதிர்வரும் 2019 ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் விக் மேச் தெரிவுக்குழு அணியினருக்கும் இடையில் 2019/06/19 ம் ...

மேலும்..

விளைவுகள் மோசமாக இருக்கும்! கல்முனையில் எச்சரித்த ஞானசார தேரர்

நான் நினைத்தால் ஐந்து நாட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறு செய்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என கல்முனையில் வைத்து இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம் -ஒரு மாதத்திற்குள் தீர்வு – ஞானசார தேரர்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள் தீர்வை பெற்றுத்தருவேன்  என   பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேட்டுள்ளார். தமிழ் மக்களின்  கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக கல்முனை பகுதிக்கு இன்று(22) விஜயம் ...

மேலும்..

அரசிடம் பணத்துக்கு விலைபோயுள்ளனர் தமிழ் பிரதிநிதிகள்! – சி.வி.

அரசியல் ரீதியாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம்கொடுத்து வாங்கியுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களோ தமிழ் பிரதிநிதிகளோ எதுவும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ...

மேலும்..

உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்கு! தொடர்கிறது சுழற்சிமுறையில் போராட்டம்!

உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வைத்திய பரிசோதனையின் பின்னர் போராட்டம் நீராகாரம் அருந்தி தொடருமெனவும் போராட்டகாரர்கள் அறிவித்துள்ளனர். விரைவில் நல்ல செய்தியோடு வருவதாகவும் அதுவரை போராட்டதை சுழற்சி முறையில் மேற்கொள்ளுமாறும் ஞானசார தேரர் அறிவுரை வழங்கியுள்ளார் .சிங்கள ...

மேலும்..

மைத்திரியின் வருகையை எதிர்த்து திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இந்த  ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண ஆளுநரது செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெறவுள்ள  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ...

மேலும்..

கலகொட ஞான சார தேரர் முடிவினால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தண்ணீர் அருந்தினர்

பாறுக் ஷிஹான் கல்முனை  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீர் கொடுத்து கலகொட ஞான சார தேரர் முடிவுறுத்தி வைத்தார். இன்று (22)  கல்முனை பகுதிக்கு சுமார் 50 க்கும் அதிகமான பிக்குகளுடன் வந்த தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி மொழி ஒன்றை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ...

மேலும்..

வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா

ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தின் பெருநாள் மற்றும் கடைத்திருவிழா இடம்பெற்றது. யாழ். வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் பூசை இன்றையதினம் (சனிக்கிழமை) தேவாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு தேவாலயத்தின் பங்குத்தந்தை அன்டனி மைக்டொனால் தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் இப்பெறுநாளில் அந்தோனியார் ...

மேலும்..

சுட்டமைப்பு மாநகர உறுப்பினரைத் தவிர, கல்முனை போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் தடை ஏற்படுத்தியது முஸ்லிம் சமூகமே – களத்தில் சுமந்திரன்

கல்முனை பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இருக்கின்றபோதிலும் சகோதர முஸ்லிம் சமூகம் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடாமல் தடுத்துவந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார். இதனை நிவர்த்திசெய்து பூரண அதிகாரங்களுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ...

மேலும்..

இலங்கை குண்டு வெடிப்பு சந்தேகநபர் கன்னியாகுமரியில் கைது

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்  கன்னியாகுமரியில் ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரியில் கடையொன்றினை நடத்தி வரும்  இம்ரான் கான் என்ற இளைஞரையே ...

மேலும்..

பதில் அமைச்சராக வடிவேல் சுரேஸ் நியமனம்!

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பதில் அமைச்சராக வடிவேல் சுரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அவர் நாடு திரும்பும்வரையில் அதாவது எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலான ...

மேலும்..

தாமதிக்கும் அமெரிக்கா: தற்கொலைக்கு முயலும் அகதிகள்

ஆஸ்திரேலிய- அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அகதிகள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தற்கொலைக்கு முயல்வது அதிரத்து வருகின்றது.  இந்த ஒப்பந்தம், நவுரு மற்றும் மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் முஸ்லிம் தலைவர்களைப் போன்று செயற்பட வேண்டும் – தவராசா

கல்முனை விவகாரத்தை தீர்க்க தமிழ் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் தலைவர்களைப் போன்று செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டக்களத்திற்கு இன்று (சனிக்கிழமை) சென்ற தவராசா, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆதரவு ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணை – பிரதமருக்கு அழைப்பு!

தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் சட்ட ஒழுங்கு முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் ...

மேலும்..

பொது வீதியை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்

ழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக வழங்குமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.நகரின் மத்தியில் ...

மேலும்..

ஞானசாரர் மற்றும் வடக்கின் முக்கியஸ்தர்களினால் பரபரப்பாகும் போராட்டக்களம்!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் தற்போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இணைந்துகொண்டுள்ளார். அவருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் ...

மேலும்..

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு?

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவுடன் கைவிடப்படவுள்ளது. ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த ...

மேலும்..

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் முடிவால் அகதிகள் படகு வருகை அதிகரிக்கும்: ஆஸ். உள்துறை அமைச்சர்

அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டம் தொடர்பாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு மீண்டும் படகுகள் வருகையை அதிகரிக்கக்கூடும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்திருகிறார்.  சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெடரல் தேர்தலுக்கு பிறகு ‘எல்லைப் பாதுகாப்பு’ விவகாரமும் மருத்துவ ...

மேலும்..

இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -பிரதமர்

இலங்கையின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள அனைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் ...

மேலும்..

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண  கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் ...

மேலும்..

கூட்டமைப்பிலிருந்து கோடீஸ்வரனை வெளியேறுமாறு வலியுறுத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை வெளியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஏற்பட்ட குழப்ப நிலையினைத் தொடர்ந்து கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் விடயத்தில் முஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமாக தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொள்வதோடு, கடந்த காலங்களில் முஸ்லீம்களுக்கு ...

மேலும்..

போராட்டக்களமாக மாறும் கிழக்கு – திருமலையிலும் போராட்டம்!

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி திருகோணமலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பான இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டதை்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கல்முனை தமிழ்ப் பிரதேச ...

மேலும்..

கல்முனை விவகாரம் – கரம் கோர்க்கும் மக்கள்: யாழிலும் போராட்டம்!

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்

இரு சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 05 பேர் உட்பட 31 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை அவசியம் கருதி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

முஸ்லிம் வைத்தியர் என்பதற்காக ஷாபியை பழிவாங்க வேண்டாம் – ரிஷாட்

முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக குருநாகல் வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தோடர்ந்தும் தெரிவித்த அவர், “குருநாகல் வைத்தியர் ஷாபி தொடர்பாக தற்போது பேசப்படுகின்றது. அவர் தவறு ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு!

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ...

மேலும்..

6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம் – ஞானசார தேரரும் நேரில் ஆதரவு

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு  அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ...

மேலும்..

வவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு

வவுனியா மாவட்ட பல்வேறு அமைப்புக்களுக்கு கிராமிய அபிவிருத்திக்காக கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழரசு கட்சியினரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு  வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று (21.06.2019) மதியம் 2.30 மணியளவில் ...

மேலும்..

வவுனியாவில் சந்தைக்கு முன்பாக பயிர் சிகிச்சை முகாம்

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்து சந்தைக்கு முன்பாக நேற்று (21.06.2019) அதிகாலை 5.00 மணி தொடக்கம் காலை 7.00 மணி வரை பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றது. வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்கு ...

மேலும்..

வவுனியாவில் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நடமாடும் சேவை கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பண்டாரிக்குளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் காணி உறுதிப் ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களிடம் அறவிடப்படும் நிதி உரிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்படாவிட்டால் பாரிய போராட்டம்

தொழிலாளர்களின் அறவிடப்படும் சேமலாப நிதியம் ஓய்வூதிய நிதியம் ஆகியன  உடன் உரிய நேரத்திற்கு அனுப்பாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்  தெரிவித்தார். நேற்று (21) திகதி லிந்துலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ...

மேலும்..